Header Ads

husk

 படத்தோட ஓபனிங்க சீன்ல ஒரு 4 ப்ரண்ட்ஸு ஒரு ஏரிக்கு சும்மா ஜாலிய ஒரு ட்ரிப் போகலாம் அப்படினு ப்ளான் பண்ணி போய்கிட்டு இருக்காங்க, இவனோட பேரு ஜானி, இவன் பேரு ஸ்காட் இவன் க்ரிஸ் அண்ட் இவங்களோட இன்னொரு ப்ரண்ட் பேரு ப்ரையன் இது இவனோட கேர்ள் ப்ரண்ட் நாட்டலி, ப்ரையானும் நாட்டலியும் தூங்கிக்கிட்டு வரும் போது, இவங்க எல்லோரும் ஜாலியா எதை பத்தியோ பேசிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்காங்க, அப்ப திடீர்னு காக்கா ஒன்னு பின்ன ஒன்னா கார்ல வந்து மோத, இதனால அந்த கார் திடீர்னு ஒரு இடத்துல  போய் மோதிடுது.

 

இந்த ஆக்ஸிடெண்டுல எல்லோரும் மயங்க, அடுத்த கொஞ்சம் நேரம் கழிச்சு தான் எல்லோருக்கும் மயக்கம் தெளியுது, அப்பதான் ஜானி மிஸ் ஆகி இருக்கான் அப்படிங்கிறத கவனிக்கிறாங்க, ஆனா அவன் பக்கத்துல யார்கிட்டையாவது உதவி கேட்க போய்ருப்பான் அப்படினு நினைக்கிறாங்க, அதேநேரத்துல ஸ்காட்டும் தன்னோட கார் ரொம்ப மோசமா அடிபட்டுருக்கு அப்படிங்கிறதால டென்சனா உட்கார்ந்திருக்கான், அந்த டென்ஷன ப்ராயானோட கேர்ள் ப்ரண்ட் மேல காட்டுறான், ஏன்னா ஸ்காட்டுக்கு நாட்டலிய பிடிக்காது.

 

ஆனா ரொம்ப நேரம் ஆகியும் ஜானி திரும்பி வராததால இவங்களும் அவன் எங்க தான் போயிருப்பான் அப்படினு யோசிக்கிறாங்க, அவனுக்கு காலாச்சு பண்ணலாம் அப்படினு பார்த்த அங்க சுத்தமா சிக்னலும் கிடைக்கல, அப்பதான் பக்கத்துல இருக்கிற சோலக்காட்டுக்குள்ள யாரோ போயிருக்க மாதிரி இருக்கு, ஒருவேளை இந்தபக்கமா கூட அவன் போய்ருக்கலாம் அப்படினும் யோசிக்கிறாங்க.

 

அடுத்து வேற வழியில்லாம ப்ராயானே பக்கத்துல எதாவது கேஸ் ஸ்டேசன் இருக்கா, எதாவது வண்டி தங்களோட வண்டி இழுத்துட்டு போக கிடைக்குதா அப்படிங்கிறத பார்க்க போகலாம் அப்படினு முடிவு எடுத்து அத தன்னோட கேர்ள் ப்ரண்டுக்கிட்ட சொல்லிட்டு இருக்கும் போது, க்ரிஸும் சோலக்காட்டு நடுவுல ஒரு பார்ம் ஹவுஸ் இருக்கிறத பார்க்கிறான், அதனால ஸ்காட்டும் நாட்டலி மட்டும் ரோட்டுல இருக்க, ப்ரையானும் க்ரிஸ் மட்டும் ஜானிய தேடி அந்த பார்ம் ஹவுஸ்க்கு சோலைகாட்டு வழியா உள்ள போறாங்க.

 

இருட்டுறதுக்குள்ள ஜானிய கண்டுபிடிச்சாகனும் அப்படினு அவனுங்களும் வேகமா சோலக்காட்டுக்குள்ள புகுந்து புகுந்து போய்க்கிட்டு இருக்கும் போது, இங்க ஸ்காட்டும் நாட்டலிக்கிட்ட கோவப்பட்டதுக்கு சாரி கேட்டுக்கிட்டு இருக்கான், இங்க இவங்களும் கொஞ்ச தூரம் போன அப்பறம் அங்க ஒரு மெயில் பாக்ஸ இருக்கிறத பார்க்கிறாங்க, அப்ப ப்ரையானும் அங்க ஒரு பழைய கார் ஒன்னு நிக்குறத பார்த்திட்டு அங்க போக இங்க க்ரிஸ்ஸோ அங்க காக்கா எல்லாம் செத்து போய் கிடக்கிறத பார்த்திட்டு அத பாலோவ் பண்ணிட்டு போய் அங்க எதையோ பார்த்த மாதிரி ப்ரையா அவசர அவசரமா கூப்பிட இவனும் அங்க போய் பார்க்கிறான், அங்க வித்தியாசமான ஒரு சோலகாட்டு பொம்மை தொங்கிக்கிட்டு இருக்கு.

 

ஆனா அது வழக்கமான சோலக்காட்டு பொம்மை மாதிரி அது இல்லா, இதையெல்லாம் அவனுங்க கண்டுக்காம அந்த போஸ்ட் மேலையே ஏறி அந்த பார்ம் ஹவுஸ் எங்க இருக்கு அப்படிங்கிற பார்த்துக்கிட்டு இருக்கும் போது, அந்த பார்ம் ஹவுஸ்ல திடீர்னு லைட் எரிய ஆரம்பிக்குது, அதனால அங்க யாரோ இருக்காங்க அப்படினு வேகமா அங்க கிளம்புறாங்க.

 

அதேநேரத்துல இங்க ஸ்காட்டும் வயற அறுத்து அதை கனெக்ட் பண்ணி அந்த கார ஸ்டார் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கான், அப்ப நாட்டலியோ பக்கத்துல அப்படியே ரோட்டுல நடந்து போய்கிட்டு இருக்கும் போது அங்க ஒரு போர்ட்டு இருக்கிறத பார்த்திட்டு அத போய் பார்க்கிறா, அதுல யாரும் உள்ள வராதீங்க அப்படினு எழுதி இருக்கு.

 

அப்ப சோலக்காட்டுக்குள்ள இருந்து ஒரு சின்ன பையன் மறைஞ்சு நின்னு தன்னையே பார்த்துக்கிட்டு இருக்கிறத கவனிக்கிறா, ஆனா இவ அவன கவனிச்ச உடனே அவன் ஓடி போய்டுறான், இவளும் அந்த பையன தேடி பார்க்கிறா, ஆனா அங்க யாருமே இல்லாம இருக்கவும் குழம்ப ஆரம்பிக்குறா, இத பத்தி ஸ்காட்கிட்ட சொன்னதுக்கு அவனோ சும்மா சும்மா என்னைத்தியாவது உளறிக்கிட்டு இரு அப்படினு போய்டுறான்.

 

இங்க ப்ரையானும் க்ரிஸும் ஒருவழியா பார்ம் ஹவுஸ கண்டுபிடிச்சு அங்க வந்திடுறாங்க, அடுத்து உள்ள போய் பார்த்த அவனுங்களும் அங்க ரொம்ப வருசா யாருமே இல்லாத மாதிரி எல்லாம் நூழாம்படை பிடிச்சு போய் தூசியா இருக்கிறத கவனிக்கிறாங்க, அந்த இடமே வித்தியாசமா இருக்கிறதையும் பார்க்கிறாங்க, அப்ப திடீர்னு மேல யாரோ இருக்கிறத மாதிரி சவுண்ட் வரவும் இவனுங்களும் மேல யாரோ இருக்காங்க அப்படினு வேகமா மேல போறாங்க.

 

இங்க நாட்டலியும் அந்த சோலகாட்டு பக்கத்துல அந்த சின்ன பையனை தேடிக்கிட்டு இருக்கும் போது தூரத்துல ஒரு சோலக்காட்டு பொம்மை கிடைக்கிற பார்க்கிறா, ஆனா அதை பார்த்தா ஏதோ ஒரு மனுசன் படுத்து கிடக்கிற மாதிரி அவ்வளவு ரியலா இருக்கு, இதனால இவளும் பயத்தோடையே அது கிட்ட போகும் போது, அந்த பொம்மைய ஈ எல்லாம் மொச்சுக்கிட்டு இருக்கு, அதனால சந்தேகப்பட்டு அவளும் அதோட மாஸ்க விலக்கிட்டு பார்க்கிறா, அதுக்குள்ள ஒரு மனுசனோட பல்லு தெரியுது.

இதை பார்த்து மிரண்டு போன நாட்டலியும் பயந்து அலற, இந்த சவுண்ட் கேட்டு ஸ்காட்டும் வேகமா அங்க வந்து பார்க்கிறான், நாட்டலி பயந்த மாதிரி அந்த சோலக்காட்டு பொம்மைக்குள்ள இருக்கிறது உண்மையிலையே ஒரு மனுசன் தான். ஆனா ஸ்காட்டோ இதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கலா, ஆனா நாட்டலியோ அப்படி இல்லா, இதை பார்த்த அப்பறம் அவளுக்கு பயம் அதிகமாகிடுச்சு, அதனால அவளும் நான் இதை பத்தி ப்ரையான் கிட்ட சொல்லியே ஆகனும், இங்க ஏதோ தப்பா நடக்குது அப்படினு இவன் சொல்ல சொல்ல கேட்காம வேகமா சோலக்காட்டுக்குள்ள ஓட, இவனும் வேற வழியில்லாம, எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டுறாளே அப்படினு, நாட்டலி நில்லு நானும் வரேன் அப்படினு கூப்பிட்டுக்கிட்டே பின்னாலையே போறான்.

 

இங்க சவுண்ட் கேட்டு மேல வந்த ப்ரையானும் க்ரிஸும் லைட்டு எறியுற ரூம மெதுவா தொறந்து உள்ள போக, அங்க யாரோ உட்கார்ந்துக்கிட்டு தையல் மிஷின்ல எதையோ தச்சுக்கிட்டு இருக்காங்க, இவங்களும் என்ன பண்ணுறது அப்படினு தெரியாம அது யார்னு முன்னாடி போய் பார்க்கும் போது தான் அவங்களுக்கு தெரிய வருது, அது ஜானி அப்படினு, ஜானி எப்படி இங்க வந்தான், அவன் ஏன் இவங்க வரத கூட கவனிக்காம எதையோ தச்சுக்கிட்டு இருக்கான், அந்த சோலக்காட்டு பொம்மைக்குள்ள இருந்த பாடி யாரோடது, அப்படி என்ன தான் மர்மம் இந்த சோலக்காட்டுக்குள்ள இருக்கு, இது எதுவுமே தெரியாம உள்ள வந்திருக்க இவனுங்களுக்கு என்ன ஆக போகுது அப்படிங்கிற கதைய நம்மள ஒவ்வொரு நொடியிலையுமே மிரளவிட்டு, படம் முழுக்க பயத்துலையே வச்சிருக்க படம் தான் 2011-ல ஹாரர் த்ரில்லர் படமா ரிலிஸான ஹஸ்க், இன்னக்கி இந்த படத்தோட கதையத்தான் பார்க்க போறோம்.

 

 

இந்த படத்துல ஒவ்வொரு நிமிஷமும் நம்மள பீதியிலையே வச்சிருப்பாங்க, அந்த அளவுக்கு வெறித்தனமா பேய் படம் இது, அதனால மிஸ் பண்ணாம கடைசி வர பாருங்க.

 

ஒகே இந்த படத்தோட கதைக்குள்ள போறதுக்கு முன்னால எங்க சேனலுக்கு இப்பதான் நீங்க புதுஷா வந்திருக்கீங்க அப்படினு உடனே சப்ஸ்க்ரை பண்ணிக்கோங்க மறந்திடமா பக்கத்துல வர பெல் பட்டன அழுத்தி ஆல் ஆப்சன செல்க்ட் பண்ணிக்கோங்க அப்படியே சோசியல் மீடியாவுலையும் பாலோவ் பண்ணிக்கோங்க. இந்த மர்மமான சோலக்காட்டுக்குள்ள போய்ருக்க இவங்களுக்கு என்ன ஆக போகுது அப்படிங்கிறத வாங்க பார்க்கலாம்.

 

இங்க ப்ரையான தேடி உள்ள வந்த நாட்டலியோ வேகமா போய்க்கிட்டு இருக்கா, ஆனா நாட்டலிய தவறவிட்ட ஸ்காட்டோ நாட்டலிய தேடிக்கிட்டு இருக்கான், அடுத்த கொஞ்ச நேரத்துல நாட்டலியும் அந்த மெயில் பாக்ஸையும் காரையும் கண்டுபிடிக்க, அந்த காரும் காக்காவால தான் ஆக்ஸிடெண்ட் ஆகி அங்க பல நாள கிடக்கிற மாதிரு இருக்கு.

 

இங்க ஜானிய பார்த்த இவனுங்களும் அதிர்ச்சியில நின்னுக்கிட்டு இருக்கும் போது, அவனோட கை விரல்கள்ல ஆணியெல்லாம் அடிச்சு இருக்கிறத கவனுக்கிறாங்க, ஆனா அவனோ இவங்கள கவனிக்காம ஒரே இடத்த பார்த்துக்கிட்டே துணிய எடுத்து தச்சுக்கிட்டே இருக்கான், அப்ப மிஷினும் டக்குனு நிக்க ஜானியும் மாஸ்க் மாதிரியான ஒன்ன தச்சு முடிச்ச உடனே டக்குனு அவனோட உடம்புக்குள்ள இருந்து ஏதோ ஒன்னு வெளில போன மாதிரி டேபிள்ள சாஞ்சுடுறான்.

 

அதேநேரத்துல இங்க ஹீரோயினும்  ப்ரையான கத்தி கத்தி தேடிக்கிட்டு இருக்கும் போது , திடீர்னு அவளுக்கு ஏதோ ஒரு சவுண்ட கேட்கவும் அவளும் திரும்பி சுத்தி சுத்தி பயந்துக்கிட்டே பார்த்துக்கிட்டு இருக்கும் போது திடீர்னு அவள ஒரு உருவம் எதையோ வச்சு சரக் சரக் அப்படினு கிழிக்க ஆரம்பிக்குது, இதனால நாட்டலி கத்துற சவுண்ட் கேட்டு ஸ்காட்டும் சவுண்ட் வர பக்கம் ஓட, ப்ரையானுக்கு அந்த சவுண்ட் கேட்டு பதறியடுச்சுக்கிட்டு ஓட ஆரம்பிக்குறான்.

 

திடீர்னு அவ கத்துற சவுண்ட் நிக்க ப்ரையானும்  ஒரு பக்கம் தேட இங்க ஸ்காட்டும் நாட்டலிய தேடிக்கிட்டு இருக்கும் போது அவள எதோ ஒன்னு இழுத்திட்டு போறத கவனிக்கிறான், உடனே அவனும் அவள காப்பாத்த ஓடும் போது ப்ராயனும் வேகமா ஓடி வந்துக்கிட்டு இருக்கான், ரெண்டு பேரும் த்டீர்னு மோதிக்கிறாங்க, அதுக்கு அப்பறம் ஸ்காட் ப்ரையான் கிட்ட நாட்டலிய ஏதோ ஒன்னு இந்த பக்கமா இழுத்திட்டு போச்சு அப்படினு சொல்ல, உடனே அவனும் வேகமா அந்த பக்கம் நாட்டலிய காப்பாத்த ஓட ஸ்காட்டு பின்னாலையே ஓட ஆரம்பிக்குறான்.

 

கொஞ்சம் கொஞ்சமா இருட்டவும் ஆரம்பிக்குது, உள்ள போன ப்ரையான காணமா கிரிஸும் பதறிப்போய் நின்னுக்கிட்டு இருக்கான், அடுத்து அவனும் அந்த இடத்தையே சுத்தி முத்தியும் பார்த்துக்கிட்டு நிக்குறான், அடுத்த கொஞ்ச நேரத்துல புல்லா இருட்டவும் ஆரம்பிச்சுருது, இங்க ப்ரையானும் ஸ்காட்டும் ரொம்ப நேரம் நாட்டலிய தேடுன அப்பறம் அவ அந்த சோலக்காட்டு பொம்மைய கட்டி வச்சிருந்த போஸ்ட்டுல தலைகீழ கெட்டு தொங்கவிட பட்டுருக்கிறத பார்க்கிறாங்க.

 

ஆனா அவளோட நிலைமைய பார்த்து ப்ரையானும் ரொம்ப பீல் பண்ணி அழுத்திக்கிட்டு இருக்கும் போது, திடீர்னு அவள தொங்க விட்டுருக்க கயிற யாரோ இழுக்கிற மாதிரு இருக்கு.

 

அதனால ப்ரையானும் ஸ்காட்கிட்ட இருந்த லைட்ட் புடிங்கிக்கிட்டு கயிற பாலோவ் பண்ணி ஓட ஆரம்பிக்க, அங்க யாருமே இல்ல அப்படிங்கிறத பார்த்திட்டு அந்த கயிற அவுக்க ஆரம்பிக்குறான், ஆனா இங்க ஸ்காட்டுக்கோ யாரோ தங்கள சுத்தி ஓடுற மாதிரியும் மைனுட்ட சில குரல்களும் கேட்ட ஆரம்பிக்கவும் அவனும் பயந்துக்கிட்டு இருக்கும் போது, நாட்டலியோட கண்ணோ ஒயிட்ட மாறுது, இதை பார்த்து பயந்து அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறான் ஸ்காட். அதேநேரத்துல ப்ரையானும் எப்படியோ கையிற உருவிடுறான்.

 

இங்க சோலக்காட்டுக்குள்ள இருந்து பயந்து அலறியடுச்சு ஓடி வந்த ஸ்காட்கிட்ட க்ரிஸும் ஏன் இப்படி பயந்து படி வர ப்ரையான் எங்க அப்படினு கேட்க அதுக்கு அவனோ, ரொம்ப பயந்த படி இந்த சோலக்காட்டுக்குள்ள யாரோ இருக்காங்க, நாம இங்க இருக்க கூடாது அப்படினு வீட்டுக்குள்ள ஓட ஆரம்பிக்க, இங்க என்ன நடக்குதுனு புரியாம க்ரிஸும் குழம்பிக்கிட்டு இருக்கான்.

 

ப்ரையானோ நாட்டலி மயக்கத்துல தான் இருக்கா அப்படினு நினைச்சு அவள தூக்கிட்டு ஓடி வந்து ஒரு இடத்துல அவள கீழ போட்டுட்டு இழப்பு வாங்கிட்டு நிக்க, அவனுக்கு பக்கத்தில யாரோ ஓடுற மாதிரி இருக்கு, அடுத்த செகண்டே டக்குனு நாட்டலிய யாரோ கயிற பிடிச்ச இழுத்திட்டு போக, இத கவனிச்ச ப்ரையானோ அத விரட்டி ஒரே இடியில கீழ தள்ள அதுவோ வெறும் சோலக்காட்டு பொம்மை மாதிரி கிடக்கு, அப்ப திடீர்னு இன்னொரு உருவம் அவனோட கைய கீறி கீழ விழுத்தாட்டிட்டு அவன் முகத்த கொஞ்சம் நேரம் பார்த்திட்டு டக்குனு நாட்டலியோட உடம்ப இழுத்திட்டு போய்டுது.

 

அடுத்து அவனும் அடிபட்ட கையோட இந்த பார்ம் ஹவுஸ்க்கு வர, க்ரிஸும்  என்னாச்சு அப்படினு கேட்டுக்கிட்டு இருக்கும் போது, திடீர்னு அந்த உருவம் க்ரிஸையும் கொல்ல ட்ரை பண்ணுது, ஆனா அது அந்த சோலக்காட்ட விட்டு வெளில வராம அங்கையே நிக்க இவனுங்களும் எப்படியோ தப்பிச்சிடுறாங்க, ஆனா அந்த உருவமோ இவனுங்களையோ ஒரு மாதிரி பார்த்திட்டு அங்கிருந்து போய்டுது.

 

அடுத்து இவங்களும் என்ன செய்றது அப்படினு தெரியாம வீட்டுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு இருக்கும் போது, ஸ்காட்டோ ரொம்ப டென்ஷனா இருக்கான், க்ரிஸோ தையல் மிஷின் இருக்கிற ரூம்ல யாருமே இல்ல அப்படிங்கிறத பார்த்திட்டு அங்க தச்சு கிடந்த சில துணிகள எடுத்திட்டு கீழ வர இங்க ஸ்காட்டோ நம்மள சுத்தி வெறும் சோலக்காடு மட்டும் தான் இருக்கு, நாம நல்லா வந்து மாட்டிக்கிட்டோம் அப்படினு பயந்துகிட்டு இருக்கும் போது, இவன் பேசுறத கண்டுக்காம ப்ரையானோ வெளில எதை பார்த்திட்டு, ஸ்காட்டோட ப்ளாஸ் லைட்ட வாங்கிட்டு ஸ்காட்டு வெளில வரமாட்டேன் அப்படினு சொல்லவும் க்ரிஸ் மட்டும் கூட்டுட்டு போறான்.

 

அங்க இருக்கிற ஒரு சோலக்காட்டு பொம்மை இவங்க போறதை திரும்பி பார்த்திக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு, இவனுங்க இங்க போய்க்கிட்டு இருக்கும் போது, ஸ்காட்டோ அங்க இருக்கிறத எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கான், அந்த வீட்டுல ரெண்டு பசங்களும் அவங்களோட அப்பாவும் வாழ்ந்திருக்க மாதிரி இருக்கு, அந்த ரெண்டு பசங்களோட பேரு கோரியும், அலெக்ஸ் அப்படினு அங்கிருக்கிற பேப்பர பார்த்து ஸ்காட் தெரிஞ்சுக்கிறான்.

 

இங்க ப்ரையானும் க்ரிஸும் பக்கத்துல இருக்கிற ஒரு கார் செட்டுக்கு வந்திருக்காங்க, அங்க நெறையா பழைய கார்கள் இருக்கு, ஆனா அது எதுவுமே ஓட்டுற கண்டிஷன்ல இல்ல, ஆனா அங்க நல்ல நிலைமையில ஒரு ஷார்வலேட்டும் காரும் இருக்கிறத பார்த்திட்டு இதோட சாவிய கண்டுபிடிக்கனும் அப்படினு ப்ரையானும் சொல்றான், அப்ப அவங்க ரெண்டு பேரும் அங்க ஒரு சோலக்காட்டு பொம்மை இருக்கிறதையும் பார்க்கிறாங்க, அடுத்து ப்ரையானும் அங்க சாவிய தேடிகிட்டு இருக்கும் போது க்ரிஸோ அந்த சோலக்காட்டு பொம்மை கிட்ட வந்து பார்த்துக்கிட்டு இருக்கான், அப்ப அது திடீர்னு அவனோட கழுத்த பிடிக்கிற மாதிரி பயமுறுத்த இவனும் பயந்து போய்டுறான்.

 

ஆனா இது க்ரிஸோட கண்ணுக்கு மட்டும் தான் தெரியுது, அப்ப அங்க ஒரு காக்கா வந்து உட்கார, க்ரிஸ்க்கு மட்டும் எதோ விஷீவல் எல்லாம தெரிய ஆரம்பிக்குது, அந்த பசங்களோட அப்பா அவங்களுக்கு சில வேலைகளை சொல்லிகொடுத்துக்கிட்டு இருக்கும் போது, ஒரு பையன் நல்ல இன்ட்றெஸ்டா செய்றான், ஆனா இன்னொருத்தவனோ அந்த வேலை பிடிக்காம அதை செய்யாம இருக்கவும் அவனோட அப்பாவும் அவன அடுச்சு அசிங்கப்படுத்துறாரு, இந்த விஷீவல் இவனுக்கு தெரிஞ்சுக்கிட்டு இருக்கும் போது ப்ரையானும் அவன சுயநினைவுக்கு கொண்டு வர அந்த காக்காவும் அங்கிருந்து போய்டுது. க்ரிஸோட நடவடிக்கை ப்ரையானுக்கு குழப்பத்த ஏற்படுத்துது.

 

இங்க ஸ்காட்டும் அங்கிருக்கிற கதவ எல்லாம் லாக் பண்ணிட்டு அங்க இருக்கிற பொருட்கள எல்லாம் செக் பண்ணிக்கிட்டு இருக்கும் போது அவனுக்கு ஒரு சாவி கிடைக்குது. இதை அவன் எடுத்து பார்த்துக்கிட்டு இருக்கும் போது இவன யாரோ பார்த்துக்கிட்டு நின்னுட்டு இருக்க இருக்கவும் இவன் திரும்பி பார்க்க உடனே அது மறைஞ்சுக்குது, அதனால இவனும் கத்திய எடுத்துட்டு முன்னாடி போகும் டக்குனு கதவு தானா சாத்துது, அதனால இவனும் பயந்து மாடியில தையல் மிஷின் இருக்கிற ரூம்குள்ள ஓடி வந்து கதவ சாத்திக்கிறான்.

அடுத்து இவனும் அந்த ரூம்ல லைட்டு எறியாம இருக்கவும் லைட்டர ஆன் பண்ணிட்டு ஜன்னல்கிட்ட வந்து பார்க்கும் போது, லைட்டு த்டீர்னு ஆன் ஆக இவனும் பயந்து போய்டுறான், அதேநேரத்துல யாரோ கதவ உடைச்சு வீட்டுக்குள்ள வந்து மாடிக்கும் நடந்து வர மாதிரி இருக்க, இதையெல்லாம் பார்த்து ஸ்காட்டும் ரொம்ப பயந்த படி நிக்குறான், டக்குனு பூட்டி இருந்த கதவு தொறக்க ஆரம்பிக்கா, அங்க நாட்டலி வந்து நிக்குறா.

 

ஸ்காட்டும் அவள பார்த்து குழப்பத்தோட நிக்க நாட்டலியோ அவ பாட்டுக்கிட்டு தையல் மிஷின்ல வந்து உட்கார கதவும் தானா சாத்திடுது, இங்க திரும்ப பார்ம் ஹவுஸ்க்கு வந்துக்கிட்டு இருக்கிற ப்ரையானும் க்ரிஸும் அந்த ரூம்ல திரும்ப லைட் எறியுறத பார்த்திட்டு வேகமா மேல போக, இவங்க வர சவுண்ட் கேட்டு ஸ்காட்டும் கதவ ஓபன் பண்ண ட்ரை  பண்ணுறான். ஆனா அது நல்லா லாக் ஆகி இருக்கு, அதேநேரத்துல இங்க நாட்டலியும் தன்னோட விரல்கள்ல ஆணிகள அடிக்க ஆரம்பிக்க, அவங்களால கதவ தொறக்கவே முடியல, ப்ரையானும் உள்ள நாட்டலி இருக்கா அப்படிங்கிறது தெரிஞ்ச உடனே அந்த கதவ தொறக்க எவ்வளவோ முயற்சி பண்ணுறான். ஆனா அவனாலையும் தொறக்க முடியாம இருக்கவும், எங்கையோ ஓட ஆரம்பிக்குறான்.

 

ஆனா க்ரிஸ்ஸோ ப்ரையான் பயந்து தான் ஓடுறான் அப்படினு நினைச்சு அவனும் வெளில வர ஸ்காட்டும் என்ன பண்ணுறதுனு தெரியாம நிக்க, இங்க ப்ரையானும் ஒரு கோடாரிய எடுத்துக்கிட்டு ஓடி வரான். அதுக்கு அப்பறம் ஸ்காட்டும் நாட்டலி கவனிக்கிறதுக்கு முன்னால அங்க இருக்கிற ஜன்னல தொறந்து வெளில போய்டலாம் அப்படினு தப்பிக்க ட்ரை பண்ண ஆரம்பிக்குறான். கீழ இருந்து க்ரிஸும் சீக்கிரம் வெளில வா அப்படினு அவன அவசரப்படுத்திக்கிட்டே இருக்கான்.

 

ஆனா ஸ்காட்டும் அட்மோஸ்ட் வெளில போய்க்கிட்டு இருக்கும் போது, த்டீர்னு நாட்டலியும் தச்சு முடிச்சிட்டு டக்குனு இவன பார்க்க ஜன்னல் வேகமா சாத்தி அவனோட கைய நச்சிடுது, அதனால இவனும் கால் இடறி ஓடு உடைஞ்சு கீழ விழ க்ரிஸும் வேகமா உள்ள ஓடுறான், இந்த சம்பவம் நடந்துக்கிட்டு இருக்கும் போது தான் ப்ரையானும் கோடாரிய எடுத்துக்கிட்டு அங்க வரான். ஆனா அவனோ இவனுங்கள கண்டுக்காம மேல போகும் போது, சோலக்காட்டு பொம்மை மாதிரி ஒரு உருவம் சோலகாட்டுக்குள்ள போய்டுது.

 

ப்ரையானும் மேல நாட்டலி இல்லாம இருக்கிறத பார்த்திட்டு கடுப்பாகுறான், அடுத்து கொஞ்சம் நேரம் கழிச்சு மயக்கம் தெளிஞ்ச ஸ்காட்டுக்கிட்ட ப்ரையானும் அவ எங்க, அவ பார்க்க எப்படி இருந்தா, அவள நான் கண்டுபிடிச்சு ஆகனும் அப்படினு சொல்லிக்கிட்டு இருக்கும் போது ஸ்காட்டும் உன்னோட கேர்ள்ப ப்ரண்டு இறந்து போய்ட்டா அப்படினு சொல்லா, அதுக்கு ப்ரையானும் கோவப்படுறான், அப்பதான்  க்ரிஸும் ட்ரைவ் பண்ணுற மாதிரி ட்ரக் இருக்குல அதுக்கான சாவிய தேடலாம் அப்படினு சொல்ல, ஸ்காட்டோ நீ சொல்றது ஷெவியா அந்த சாவி என்னைட்ட தான் இருக்கு அப்படினு சொல்லிட்டு இங்கிருந்து தப்பிச்சிடலாம் அப்படினு கிளம்பும் போது, ப்ரையானும் அவங்கள போக விடமாட்டுறான்.

 

நான் நாட்டலிய கண்டுபிடிச்சு காப்பாத்துவேன் அப்படினு சொல்லி சாவிய வாங்கிடுறான். இதனால கடுப்பாகி க்ரிஸும் வெளில வர அங்க ஒரு காக்க உட்கார்ந்திருக்கு, இவனும் அத பார்க்க மறுபடியும் அவனுக்கு விஷீவல் தெரிய ஆரம்பிக்குது, அப்பாவல அசிங்கப்படுத்தப்பட்டவன் சோலக்காட்டுக்குள்ள இருந்து வெளில வந்து  இவன கூப்பிட இவனோ ஏதோ வசியம் பண்ணின மாதிரி அவன் பின்னாலையே போய் அந்த சோலக்காட்டு பொம்மை தொங்கிக்கிட்டு இருந்த இடத்த சேர்றான்.

 

தன்னோட அப்பா மேலையும் தன்னோட தம்பி மேலையும் கோவமா இருந்த அவன் நான் ஒரு சோலக்காட்டு பொம்மை செஞ்சுருக்கேன் அப்படினு சொல்லி அவன ஏமாத்தி அங்க வர வச்சு அவன கொடூரமா குத்தி கொன்னுருக்கான், இதை பார்க்க முடியாம க்ரிஸும் திரும்பும் போது டக்குனு அவனுக்கு சுயநினைவு திரும்ப இது ஒரு ட்ராப் அப்படிங்கிறது தெரியாம அவன் இப்ப சோலக்காட்டுக்குள்ள வந்து மாட்டிக்கிட்டான்.

 

அவன அந்த உருவம் அந்த போஸ்ட் மேல தலைகீழ தொங்க விட்டுது, இவனும் ப்ரையான் ஸ்காட் காப்பாத்துங்க அப்படினு கத்திக்கிட்டு இருக்கும் போது, அவன்கிட்ட வந்த அந்த உருவம் அவன் கொடூரமா காயப்படுத்துது, அப்ப டக்குனு அவனோட கயிறு அவிழ்ந்து அவன் கீழ விழ அந்த உருவமோ யாரு கயிற அவிழ்த்துவிட்டது அப்படினு அந்த பக்கம் ஓட ஆரம்பிக்க அடுத்த நொடியே ப்ராயானும்  ரெண்டு உருவத்தை கோடாரியா வச்சு கொன்னு வந்து தூங்கி போடுறான், அடுத்து வேகமா அவனையும் கூட்டுட்கிட்டு அங்கிருந்து வெளில வந்திடுறான்.

 

ஆனா இதை இன்னொரு சோலைக்காட்டு உருவம் பார்த்துட்டு உள்ள போகுது, அடுத்து அவசர அவசரமா அவனுக்கு கட்டு போட்டு அவனோட ரத்தத்த நிப்பாட்டுறாங்க, அப்பதான் க்ரிஸ் தனக்கு தெரிஞ்ச விஷூவல் பத்தியும் அந்த பசங்கள பத்தியும் இவங்கிட்ட சொல்றான், அப்பதான் ஸ்காட்டும் நாட்டலியும் ஒருத்தன உள்ள வரதுக்கு முன்னால பார்த்ததா, நானும் இந்த வீட்டுல யாரைரோ பார்த்தேன் அப்படினு சொல்ல, அதுக்கு ப்ரையானோ இப்பவே அதோட கதைய முடிச்சிடலாம் அப்படினு வேகமா உள்ள ஓடுறான்.

 

ஆனா ப்ரையான் இப்படி பண்ணுறது ஸ்காட்டுக்கு பிடிக்கல, அடுத்து அவனும் க்ரிஸ்கிட்ட நாம அவன் கூட போன அவன் நம்மள சாகடுச்சிடுவான், நீ என் கூட வந்தா  நீ உயிரி பிழைக்கலாம் அப்படினு என்ன என்னமே பேசுறான், ஆனா க்ரிஸோ டக்குனு நீ வேணாம் அவனுக்கு உதவி செய்யாம இருக்கலாம், நான் செத்தாலும் பரவா இல்லா நான் அவனுக்கு உதவி செய்வேன் அப்படினு சொல்லிட்டு உள்ள வந்த க்ரிஸும் ப்ரையானோட சேர்ந்து பேஸ்மெட்டுக்கு போக ஆரம்பிக்குறான். உள்ள போன அவனுங்களும் அங்கிருக்கிற எல்லா பொருட்களையும் பார்த்துக்கிட்டு இருக்கும் போது.

 

திடீர்னு க்ரிஸ ஒரு உருவம் பயமுறுத்து, அதோட அந்த உருவம் அவன் நம்மள இங்கிருந்து போக விடமாட்டான் அப்படினு சொல்ற மாதிரியான ஒரு விஷீவல் தெரிய ஆரம்பிக்க ப்ரையானும் மறுபடியும் உனக்கு அந்த விசூவல் வந்துச்சா அப்படினு கேட்கிறான், அப்பதான் அவங்க தன்னோட தம்பிய கொன்ன அந்த பையனோட எலும்பு அங்க இருக்கிறத கவனிக்கிறாங்க,

 

அதேநேரத்துல இங்க ஸ்காட்டும் அந்த காரோட வயற அறுத்து அதை வச்சு அதை ஸ்டார்ட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கான், இங்க ப்ரையானும் அந்த எலும்பு கூடு வச்சிருந்த துப்பாக்கிய எடுத்துட்டு அவங்களும் அங்கிருந்து வெளில வந்துக்கிட்டு இருக்கு போது, ஸ்காட் கார ஸ்டார் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கிற சவுண்ட் கேட்குது, அதனால ப்ரையானும் வேகமா அங்க போய் அவன ஸ்டாப் பண்ணுறதுக்குள்ள அவன் கார எடுத்துக்கிட்டு சோலக்காட்டுக்குள்ள புகுந்து எல்லாத்தையும் அடிச்சு தள்ளிட்டு போய்க்கிட்டு இருக்கான்.

 

இங்க ப்ரையானோ வேகாமா ஓடி கார் செட்டுக்கு போய்ட்டு அங்கிருந்த சில தோட்டாங்கள எடுத்துக்கிட்டு அவசர அவசரமா ஓடி வரான். இங்க ஸ்காட்டும் கார வேகமா ஓட்டி போய்க்கிட்டு இருக்கும் போது திடீர்னு ஒரு உருவம் அந்த கார் மேல வந்து விழுந்து அந்த காரோட கண்ணாடிய உடைக்க ட்ரை பண்ணுது, கடைசியா அந்த காரும் அந்த போஸ்ட்ல மோதி நிக்க அந்த உருவம் காருக்கு முன்னாடி கிடைக்கிற பார்த்திட்டு கார ஸ்டார் பண்ண ட்ரை பண்ணுறான், ஆனா அது ஸ்டார் ஆகமா இருக்கவும் மெதுவா கதவு தொறந்து வெளில வரலாம் அப்படினு பார்க்கிறான், ஆனா  அந்த போஸ்ட் நல்லா கதவ தொறக்க முடியாத அளவுக்கு லாக் பண்ணிருக்கு, அதனால இந்த பக்கம் கதவ மெதுவ தொறக்கலாம் அப்படினு அவனும் ட்ரை பண்னும் போது, இந்த பக்கம் இருந்து ஓரு உருவம் டக்குனு வந்து அவன மிரள வைக்குது.

 

இவனும் அதோட சண்ட போட்டு அத மிதுச்சு தள்ள  அடுத்த கொஞ்சம் நேரம் கழிச்சு இந்த பக்கம் இருந்து அவன தாக்க ட்ரை பண்ணுது, அதுங்க த்டீர்னு மாத்தி மாத்தி அந்த கண்ணாடிய உடக்க ட்ரை பண்ண இவனும் உள்ள இருந்துக்கிட்டு பயந்துப் அலறிக்கிட்டு இருக்கான், அடுத்து முன்னாடி இருந்த உருவம் அந்த கண்ணாடி உடைச்சு உள்ள வர பார்க்க, இவனும் செம வெறியாகி அந்த உருவத்தோட மாஸ்க கழட்ட அது டக்குனு ஆப் ஆகிடுது, இவ்வளவு நேரம் அவனுக்கு முன்னால இருந்தது ஜானி தான், ஆனா அது அவனோட உடம்புக்குள்ள இருந்துருக்கு.

 

அப்ப த்டீர்னு அங்க வந்த ப்ரையானும் நான் அதுங்கள பார்த்துக்கிறேன் நீ ஓடு அப்படினு சொல்ல அவனும் ஓட ஆரம்பிக்குறான், அடுத்து இவனும் அதுங்களுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கு, போது, திடீர்னு நாட்டலி அவனுக்கு முன்னால வர்ற, அவள பார்த்த உடனே இவனும் எமோசனலாக அதுதான் சாக்குனு அவன அடிச்சு கொல்ல ஆரம்பிக்குது.

 

அப்படியே அடுத்த சீன்ல க்ரிஸும் வெளில வந்து நிக்கும் போது மறுபடியும் அவனுக்கு ஒரு விசூவல் தெரிய ஆரம்பிக்குது, அந்த பையன் தன்னோட தம்பிய கொன்னுட்டு அவனோட உடம்ப சோலக்காட்டு பொம்மை மாதிரி மறைச்சு வைக்க தேவையானத அவனோட அப்பாவுக்கு தெரியாம மறைச்சு எடுத்திட்டு வந்து அவன சோலகாட்டு பொம்மை மாதிரி மாத்தி கட்டி தொங்க விட்டுறான், இந்த விசூவல பார்த்து பயந்து அவனும் வாசலுக்கு வரும் போது, ஸ்காட்டும் ஓடி வர அவன் ப்ரையான விட்டுட்டு வந்திட்டான் அப்படிங்கிறத கவனிக்கிறான்.

 

அடுத்து அவங்களும் உள்ள வர க்ரிஸும் இங்க நடக்கிறத பார்த்து தனக்கு புரிஞ்சத வச்சு,”அதுங்க அந்த சோலக்காட்ட விட்டு வெளில வராதுங்க, ஆனா நாமளா அதுக்குள்ள போனா அதுங்க நம்மள அட்டாக் பண்ணுது, ஆனா ப்ர்ஸ்ட் பர்ஸ்ட் நானும் ப்ரையானும் உள்ள வரும் போது எங்கள அது அட்டாக் பண்ணல ஏன்னா அந்த டைம்ல ஜானிய அட்டாக் பண்ணின அது ஜானிய கொடூரமான சோலக்காட்டு பொம்மை மாதிரி மாத்துற வேலையில பிசியா இருந்திருக்கு.

 

அங்கிருக்கிற எல்லா சோலக்காட்டு பொம்மைகளும் வெறும் மனித உடல்கள் தான் அந்த பையன் கொன்ட அவனோட தம்பியோட ஆவி அந்த சோலக்காட்டுக்குள்ள மாட்டி இருக்கு, அது உள்ள வரவங்கள ஒரு சோலக்காட்டு பொம்மையில இருந்து இன்னொரு பொம்மைக்கு மாறி மாறி அவங்கள கொன்னு அவங்களையும் தங்கள்ல ஒருத்தவங்கள மாத்தி அவங்கள உடம்பையும் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்துருக்கு.

 

ஆனா அந்த ஆவியால ஒரு நேரத்துல ஓரே ஒரு சோலக்காட்டு பொம்மைக்குள்ள தான் இருக்க முடியும், அந்த ஆவி ஒருத்தவங்கள கொன்னு அவங்கள ஒரு சோலக்காட்டு பொம்மையா அது மாத்திக்கிட்டு பிசியா இருக்கும் போது தான் நாம தப்பிக்கனும் அப்படினு சொல்லுக்கிட்டு இருக்கும் போது, ப்ரையானையும் அந்த பேய் கொன்னு அவனையும் சோலக்காட்டு பொம்மையா மாத்த வந்துக்கிட்டு இருக்கு, இதை பார்த்த ஸ்காட்டும் இனிமே இது மாதிரி யாருக்குமே நடக்க கூடாது அப்படினு சொல்றான்.

 

அடுத்து அவனுங்களும் அந்த சோலக்காட்டையே எறிச்சிடலாம் அப்படினு ப்ளான் போட்டு க்ரிஸும் கார் செட்டுக்கு வந்து அங்கிருக்கிற கால்ர்ல இருக்கிற பெட்ரோல எடுத்துக்கிட்டு இருக்கும் போது இங்க ஸ்காட்டும் தான் பயந்து கீழ போட்டு லைட்டர எடுக்க மேல வரான்.

 

இங்க அந்த பேய் ப்ரையானுக்கான மாஸ்க்க தச்சுக்கிட்டு இருக்கு, இவனும் மெதுவா அத டிஸ்டர்ப்ப பண்ணாம அத எடுக்க ட்ரை பண்ணுறான், ஆனாலும் அவனுக்கு உள்ளுக்குள்ள பயம் இருக்கவும், ப்ரையான் நீ இன்னும் இங்க இருக்க அப்படினா என்னைய எடுக்க விடு அப்படினு சொல்லிட்டு அத எடுக்க ட்ரை பண்ண ப்ராயனும் டக்குனு இவன பார்க்க எதுவுமே செய்யாம உட்கார்ந்திருக்கு இவனோ வேகமா அத எடுத்திட்டு அங்கிருந்து கிளம்பின உடனே அவன் மறுபடியும் தைக்க ஆரம்பிக்குறான்.

 

இங்க க்ரிஸோ தேவையானத எடுத்திக்கிட்டு ரெடியா இருக்கான், ஆனா இங்க அந்த பேயே த்டீர்னு வேகமா தைக்க ஆரம்பிக்குது, இவனுங்களும் வேகமா உள்ள போய வேலைய ஆரம்பிக்குறாங்க, அதோட ஸ்காட்டும் ப்ரையான் வச்சிருந்த துப்பாக்கியையும் தேடிக்கிட்டு இருக்கான், கிரிஸோ உள்ள இருந்த கார்லையும் பெட்ரோல எடுத்துக்கிட்டு இருக்கும் போது, இங்க அந்த பேயோ தன்னோட வேலைய முடிச்சிடுது

 

அப்ப அந்த ரூமோட லைட் த்டீர்னு ஆப் ஆக இத க்ரீஸ் பார்த்துக்கிட்டு இருக்கும் போது, இவன பார்த்து ஒரு  உருவம் ஓடி வந்துக்கிட்டு இருக்கு, ஆனா துப்பாக்கிய எப்படியோ கண்டுபிடிச்ச ஸ்காட்டும் டக்குனு அத சுட்டு கொன்னுடுறான், அடுத்து இவனுங்களும் அங்கிருந்து கிளம்பும் போது இன்னொரு உருவம் ஸ்காட்ட தாக்க, அதையும் அவன் சுட்டு கொன்னுட்டு அவனுங்களும் அங்கிருந்து ஒட ட்ரை பண்ணும் போது, க்ரிஸால ஓட முடியல, அதுங்களும் இவங்கள தாக்குற நிப்பாட்ட இவனுங்களும் குழம்பும் போது, ப்ரையானோட உடம்புக்குள்ளம வந்த அந்தே பேய் செம வெறியோட சோலக்காட்டுக்குள்ள ஓடி வருது.

 

அதேநேரத்துல இவங்களும் ஒரே நேரத்துல அது ரெண்டு பேரையும் பாலோவ் பண்ண முடியாது அப்படினு நீ ஒரு பக்கம் ஓடி நான் ஒரு பக்கம் ஓடுறேன் அப்படினு சொல்லிட்டு ஓட இந்த உருவமோ வெறித்தனமா ஓடி வந்துக்கிட்டு இருக்கு, அதனால ஸ்காட்டும் ஒரு இடத்துல உட்கார்ந்து அது வந்த உடனே சுட்டுடலாம் அப்படினு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான், ஆனா அது சுடுறதுக்குள்ள இவன வந்து தாக்கினதால, ஸ்காட்டோட முதுகுல ஒரு கம்பு நல்ல குத்திடுது.

 

இதனால அவனால அசைய கூட முடியல, அடுத்த மறுபடியும் அங்க வந்த உருவம் வேகமா அனோட வயித்த கண்ட மேனிக்கி குத்தி கிழிச்சுக்கிட்டு இருக்கும் போது, அவனோ வலிய பொறுத்துக்கிட்டு அவனோட மாஸ்க்க கிழிக்க  ப்ராயனோட உடம்புக்குள்ள இருந்த ஆவி வெளில போய்டுது, இங்க க்ரிஸும் பெட்ரோல் ஊத்தி அதை எறிச்சுட்டு கிளம்பலாம் அப்படினு ட்ரை பண்ணும் போது.திடீர்னு அங்க வந்த இன்னொரு உருவம் க்ரிஸ ஒரே அடியில மயங்க வச்சு அவன கட்டி இழுத்திட்டு வந்து போஸ்ட் இருக்கிற இடத்துக்கு கொண்டு வருது, அங்க ஏற்கனவே கட்டி வச்சிருக்க, ஸ்காட்டையும் காயப்படுத்துது, அப்ப க்ரிஸ்க்கு அந்த பையன் அவனோட தம்பிய கொல்ல யூஸ் பண்ண ஆயுதம் பக்கத்துல தான் கிடக்கனும் அப்படினு நினைவு வந்து உடனே அங்க பார்க்க, அது அங்க தான் கிடக்கு.

 

உடனே அத எடுத்து அந்த உருவத்த கொடூரமா குத்தி கொன்னுட்டு அங்கிருந்து தப்பிச்சு ஓடும் போது இதுவோ அசால்ட்டா அத பிடிங்கி எறிஞ்சுட்டு அவன மறுபடியும் கயிற பிடிச்சு இழுக்கும் போது, அந்த உருவத்த ஸ்காட்டும் பிடிச்சுக்கிட்டு க்ரிஸ் இங்கிருந்து ஓடு அப்படினு சொல்றான், அதனால அவனும் அங்கிருந்து ஓட ஆரம்பிக்குறான், இங்க ஸ்காட்டோட பிடியில இருந்து வெளில வந்த அந்த உருவமும் அவன குத்தி ஒரேயடியா கொன்னுட்டு க்ரிஸ விரட்ட ஆரம்பிக்குது.

 

இங்க க்ரிஸ்ஸும் வேகமா ஓடி வந்துக்கிட்டு இருக்கும் போது அவனுக்கு மூச்சு வாங்க ஆரம்பிக்குது, ஒருவழியா அவனும் வெளில வரும் போதும் டக்குனு அங்கேயே விழுந்திடுறான், அவனோட காயத்தால அவனால அசையவே முடியல, அப்ப அங்க ஒரு கப்புல்ஸோட காரு வந்து ஆக்ஸிடெண்ட் ஆகி இருக்கிற கார்ல யாராவது இருக்காங்க அப்படினு தேடிக்கிட்டு இருக்காங்க, இங்க க்ரிஸோ அவங்கள கூப்பிட முடியாம திணறிக்கிட்டு இருக்கான்.

 

அப்ப த்டீர்னு சோலக்காட்டுக்குள்ள இருந்து வெளில வந்த அந்த உருவம் அவங்கள பார்த்திட்டு இவனையும் பார்த்திட்டு டக்குனு செத்த மாதிரி படுத்திடுது, இவனால அவங்கள கூப்பிடவும் முடியல அவங்கள எச்சரிக்கவும் முடியல, அப்ப க்ரிஸ்ஸ பார்த்த அந்த நபரோ இவன காப்பாத்தலாம் அப்படினு ஓடி வரறா, அவனும் வராதீங்க அப்படினு சொல்ல முடியாம அவனுக்கு வாய் திணறும் போது அப்படியே படத்த முடிக்கிறாங்க.

 

இந்த படத்தோட எக்ஸ்ப்ளைனேசன் எப்படி இருந்துச்சு அப்படிங்கிறத கமெண்ட்ல சொல்லுங்க, உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சு இருந்துச்சுனா உடனே ஒரு லைக் தட்டு விட மறந்திடாம உங்க ப்ரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க, நெக்ஸ்ட் வீடியோவுல மீட் பண்ணலாம் பாய் ஹாய்ஸ்….

No comments

Powered by Blogger.