Header Ads

her

 இன்னக்கி நாம பார்க்க போற மூவி 2016-ல ஒரு செம்ம ஹாரர் மூவியா ரிலிஸான லெட் ஹெர் அவுட், படத்தோட டைட்டில் தான் இந்த படத்தோட கதையே, படத்துல சஸ்பெண்ஸ்க்கும் ஹாரருக்கு பஞ்சமே இல்ல, அடிச்சு சொல்றேன் இந்த படத்தோட க்ளைமேக்ஸ் வேற லெவல்ல இருக்கும், உங்களுக்கு வித்தியாசமான ஹாரர் எக்ஸ்பீரியன்ஸையும் கொடுக்கும், க்ளைமேக்ஸ பார்த்திட்டு நீங்களே கமெண்ட் பண்ணுங்க.

 

ஒகே இந்த படத்தோட கதைக்குள்ள போறதுக்கு முன்னால எங்க சேனலுக்கு இப்பதான் நீங்க புதுஷா வந்திருக்கீங்க அப்படினா உடனே சப்ஸ்க்ரை பண்ணிக்கோங்க, மறந்திடாம பக்கத்துல வர பெல் பட்டன அழுத்தி ஆல் ஆப்சன செலக்ட் பண்ணிக்கோங்க, அப்படியே சோசியல் மீடியாவுலையும் பாலோவ் பண்ணிக்கோங்க.

 

பிறந்ததுல இருந்து அனாதையான ஒரு பொண்ணு வாழ வழியில்லாம ரொம்ப கஷ்டப்படுற நிலையில வேற வழியில்லாம விபச்சரத்துல தொழில்ல ஈடுபடுறா, வயிற்று பசிக்காக கையில எடுத்த இந்த தொழில வேண்டா விருப்பா செய்ய ஆரம்பிக்குறா, அப்படியே வாழ்க்கைய அந்த பொண்ணு ஓட்டிக்கிட்டு இருக்கும் போது அவளோட லைப்பு ஒரு புயல் அடிக்க ஆரம்பிக்குது, எப்போதும் வர கஸ்டமர் மாதிரி இல்லாம அன்னக்கி ஒரு மிருகம் அவளோட இடத்துக்குள்ள அத்து மீறி உள்ள வந்துச்சு, அன்னக்கி நடந்து விஷயம் அந்த பொண்ணோட வாழ்க்கையையே புரட்டி போட்டுடுச்சு, அந்த பொண்ணு அந்த நபரால கர்ப்பமாகிட்டா.

 

அவளால தன்னோட வாழ்க்கையையே பார்த்துக்க முடியல, இதுல இப்ப குழந்தை வேற அப்படிங்கிறதால ரொம்ப சோகமாகவும் கவலையாகவும் இருக்கா, அப்பா பேரு தெரியாத ஒரு குழந்தையா தன்னோட குழந்தை வளர போறத நினைச்சு ரொம்ப டிப்பர்ஸனாகி தற்கொலை பண்ணிக்க முடிவு எடுக்கிறா, முதல்ல தன்னோட குழந்தைய கொன்னுட்டு தானும் செத்து போய்டலாம் அப்படினு முடிவு எடுத்து தன்னோட வயித்துல கத்திய வச்சு தன்னோட குழந்தைய குத்தி கொன்னுட்டு ரத்த வெள்ளத்தோட சாஞ்சுடுறா, அப்ப அந்த மோட்டல் ரூம க்ளீன் பண்ண வந்த ஒரு லேடி இந்த பொண்ணு ரத்த வெள்ளத்தோட கிடக்கிறத பார்த்து ஓட, அந்த பொண்ணோ ஹெல்ப் ஹெல்ப் அப்படினு கத்திக்கிட்டே இருக்கா, அப்படியே படத்தோட டைட்டில் போட்டு படத்த ஓபன் பண்ணறாங்க, பேக்ரவுண்ட்ல ஆம்புலஞ்ச் சவுண்டும் ஒரு குழந்தை அழுகிற சவுண்டும் கேட்குது.

 

அந்த பொண்ணோட வயித்துல இருந்த குழந்தைய உயிரோட காப்பாத்திட்டாங்க போல, அப்படியே 23 வருசம் கழிச்சு ஒரு பொண்ண காட்டுறாங்க, இவ தான் நம்ம படத்தோட ஹீரோயின் ஹெலன்,  இவ இப்ப ஒரு கொரியர் ஆபிஸ்ல ஓர்க் பண்ணிக்கிட்டு இருக்கா, வழக்கம் போல ஒரு கொரியர்ர ஒருத்தவன் கிட்ட கொடுக்க ஒரு இடத்துக்கு வந்திருக்க, ஆனா கொரியர் ஆர்டர் பண்ணவன இவளுக்கு தெரியும் போல, ஹீரோயின பார்க்கத்தான் இவன் அடிக்கடி இப்படி கொரியர் பண்ணி தன்னோட இடத்துக்கு வர வைக்கிறான், ஆனா ஹீரோயினுக்கு அவன் மேல கொஞ்சம் க்ரஸ் இருந்தாலும் அவன இவளால புல்லா நம்ப முடியல.

 

அப்ப அவன் இன்னக்கி தான உன்னோட பர்த்டே உனக்கு ஒரு ப்ரசண்ட் வச்சுருக்கேன் அப்படினு சொல்லி அவள தான் வரைஞ்சு வச்சிருக்கிற ஒரு பெயிண்டிங்க காட்ட கூட்டிட்டு போறான், அவன் ஹீரோயின தான் இந்த மாதிரி மோசமா வரைஞ்சு வச்சிருக்கான், இதையெல்லாம் பார்த்து அவ இம்ப்ரஸ் ஆகுவா அப்படினு நினைக்கிறான், அடுத்து அவள அப்படியே கொஞ்சமா தன் வசப்படுத்த பார்க்கிறான், ஆனா ஹீரோயினால ஏதோ ஒரு காரணத்துக்காக அவன ஏத்துக்க முடியல, அதனால அவனும் சரி இந்த உன்னோட பெயிண்டிங்க் அப்படினு கொடுத்து அனுப்பி விடுறான்.

 

அடுத்த சீன்ல ஹீரோயின் இன்னக்கி தன்னொட பிறந்த நாள் அப்படிங்கிறதால தன்னோட அம்மா இறந்து போன அந்த மோட்டலுக்கு தன்னோட பெஸ்ட் ப்ரண்டோட வந்திருக்கா, ஹீரோயினும் தன்னோட அம்மாவ நினைச்சு சோகமாகிடுறா, அதோட தன்னோட பெஸ்ட் ப்ரண்டுக்கிட்டு சின்ன வயசுல அவள்ட இருந்து திருடுன ஒரு செயினையும் கொடுத்து, எனக்கு உன்னோட பேமிய பார்த்த பொறாமையா இருந்துச்சு, ஏன்னா எனக்குனு ஒரு பேமிலி இல்ல, அதனால தான், ஆனா இந்த இடத்துக்கு வந்தாலே கொஞ்சம் பாதுகாப்பா பீல் பண்ணுவேன், எங்க அம்மாவுக்குத்தான் என்னைய பிடிக்க போல அதான் என்னைய கொல்ல ட்ரை பண்ணிருக்காங்க அப்படினு பீல் பண்ணுறா.

 

ஆனா அவளோட ப்ரண்டோ அப்படியெல்லாம் இருந்திருக்காது, அப்படினு சொல்லி அவள எப்படியோ சமாதாப்படுத்திடுறா, அப்படியே அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நேரம் ஜாலியா பேசிக்கிட்டு இருக்கும் போது, மோலிய அவளோட பாய் ப்ரண்டு கால் பண்ணி வர சொல்ல. இவளும் டான்ஸ் ரிகல்ஷலுக்கு லேட்டு ஆகிடுச்சு அப்படினு சொல்லிட்டு, ஹீரோயின் சொல்ல சொல்ல கேட்காம இந்த பெயிண்டிங்க் நல்லா இருக்கு இத நான் எடுத்திட்டு போறோன் அப்படினு சொல்லி எடுத்திட்டு போய்டுறா.

 

அடுத்து ஹீரோயினும் அங்கிருந்து கிளம்பும் போது திடீர்னு அந்த ரூம்குள்ள யாரோ இருக்கிற மாதிரி ஹீரோயினுக்கு தெரியுது, அதை பார்த்துக்கிட்டே ஹீரோயினும் நடக்க ஹீரோயின எதிர்பாராத விதமா ஒரு கார் வந்து ஆக்ஸீடெண்ட் பண்ணிடுது, அதனால அங்கையே மயங்கிடுறா ஹிரோயின், அடுத்த சீன்ல ஹீரோயின் ஹாஸ்பிட்டல இருக்கிற மாதிரி காட்டுறாங்க, அப்ப டாக்டர் மோலிக்கிட்ட,”ஹெலனுக்கு தலையில பலமான அடி ஏற்பட்டிருக்கு, அது அவளோட உயிருக்கு ஆபத்து இல்ல அப்படினாலும் அது அவளோட டே டூ டே லைப்ப பாதிக்க வாய்ப்பிருக்கு, இந்த காயம் அவள எந்த அளவுக்கு சிரமப்படுத்த போகுது அப்படிங்கிறது தெரியல அப்படினு சொல்றாங்க.

 

அடுத்து ஒரு வழியா கண்ணு முழிச்ச  ஹீரோயின்கிட்ட மோலி, “ஹெலன் எல்லாம் சரி ஆகிடும், நீ சீக்கிரம் குணமாகிடுவ, இன்னும் ரெண்டு வாரம் ரெஸ்ட் எடுத்த போதும் அப்படினு சொல்றா, அடுத்து ரெண்டு வாரம் கழிச்சு ஹீரோயினும் டிஸ்ஷார்ச் ஆகுறா, அதனால மோலி இதை கொண்டாட அவளோட ரூம்ல ஒரு பார்ட்டியையும் அரேஞ்ச் பண்ணிருக்கா, அங்க நெறையா பேர் வந்திருக்காங்க, ஆனா இங்க ஹீரோயினோ தன்னோட்ட பெட் ரூம்ல உட்கார்ந்து எதையோ வரைஞ்சுக்கிட்டு இருக்கா.

 

அடுத்து மோலியும் வேகமா அங்க வந்து ஹீரோயின கீழ வர சொல்லி கூப்பிட, இவளும் கிளம்பலாம் அப்படினு நினைக்கும் போது, அங்க இருக்கிற அவளோட பெயிண்டிங்க திருப்பி வச்சிட்டு போறா, ஏன்னா அவளுக்கு அந்த பெயிண்டிங்க பிடிக்கல, அடுத்து கீழ வந்த ஹீரோயின் அங்க எல்லோரும் ஜாலியா எஞ்சாய் பண்னிக்கிட்டு இருக்கிறத பார்க்கிறா, அப்பா எதேச்சையா மோலியோட பாய்ப்ரண்ட் எட் மீட் பண்ணுறா, அடுத்து ரெண்டு பேரும் அறிமுகமாகிக்கிறாங்க, அடுத்து எல்லோரும் பார்ட்டிய எஞ்சாய் பண்ண ஆரம்பிக்கும் போது, ஹீரோயினும் எஞ்சாய் பண்ண ஆரம்பிக்குறா, அப்ப திடீர்னு ஹீரோயினுக்கு எல்லாம் மங்களாகி ஏதோ ஒரு விஷீவல் தெரியுது, டக்குனு அந்த சீன் க்ளோஸ் ஆகி அடுத்த சீன்ல, ஹீரோயின யாரோ முழி அப்படினு சொல்ற மாதிரி இருக்கு, அதனால ஹீரோயினும் முழிச்சு பார்க்கிறா, ஹீரோயினுக்கு முன்னால ஒரு கார் ஹாரன் அடிச்சுக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கு.

 

எப்படியோ அதுக்கிட்டு தப்பிச்ச அவ தான் சைக்கிள ஓட்டிக்கிட்டு வந்திக்கிட்டு இருக்கிறத கவனிக்கிறா, நாம பார்ட்டியிலையில தானே இருந்தோம் இங்க எப்படி வந்தோம் அப்படினு ரொம்ப குழம்பி போன ஹீரோயின், தன்னோட ப்ரண்டுக்கு கால் பண்ணி,”நான் இங்க எப்படி வந்தேன் அப்படினு கேட்கிறா, அதுக்கு அவளோ நீ காலையில காப்பி கூட குடிக்காமா கிளம்பிட்ட அப்படினு சொன்னாங்க, நீங்க அங்க எப்படினு போன அப்படினு எனக்கு எப்படி தெரியும், எனக்கு டான்ஸ் ரிஹர்சல் இருக்கு நான் போகனும் அப்படினு சொல்லிட்டு வச்சிடுறா.

 

அதனால ஹீரோயினும் வேகமா சைக்கிள எடுத்திட்டு வீட்டுக்கு வந்திடுறா, வீட்டுக்கு வந்த அப்பறம் எதையோ யோசிச்சுக்கிட்டு எதையோ எழுதிக்கிட்டும் வரைஞ்சுக்கிட்டும் இருக்கா, அதுக்கு அப்பறம் தான் என்ன வரைஞ்சுக்கிட்டு இருக்கோம் அப்படிங்கிற கவனிச்ச அவ அதுல ஒரு பொண்ணோட உடம்புக்குள்ள இருந்து இன்னொரு பொண்ணு வர மாதிரியும் அதுக்கு பக்கத்துல அவன கொல்லு அப்படினும் எழுதி இருக்கிற பார்க்கிறா.

இதை பார்த்த ஹீரோயினோ எதையோ யோசிச்ச படியே அதை கிழிச்சு கசக்கி தூக்கி போட்டுறா, அதே நேரத்துல அவளுக்கு கையில போட்டுருக்க கட்டுக்கு பக்கத்துல அரிக்கவும் ஆரம்பிக்குது, அப்பதான் நேத்து திருப்பி வச்சிருந்த பெயிண்டிங்க திரும்பி இருக்கு அப்படிங்கிறத கவனிக்கிறா, அதனால பயந்து போன ஹீரோயினோ அத எடுத்து வேற ஒரு இடத்துல வச்சு அதை துணிய வச்சு மூடிடுறா, அடுத்த நாள் காலையில ஹீரோயினும் ஜிம்ல எக்சசைஸ்  பண்ணி முடிச்சிட்டு அங்க இருக்கிற ரெஸ்ட் ரூம்ல குளிச்சிக்கிட்டு நிக்கும் போது, மோலியும் கால் பண்ணி இன்னக்கி வேலை சம்பந்தமா டிஸ்கஸ் பண்ண வேண்டி இருக்கு, அதனலா என்னோட டீம் மெம்பர்ஸ் எல்லாம் நைட்டு 7 மணிக்கு நம்ம ரூம்ல வருவாங்க, உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே அப்படினு கேட்க, அதுக்கு ஹீரோயினும் ஒன்னும் பிரச்சனை இல்ல அப்படினு சொல்றா.

 

அதுக்கு அப்பறம் ஹீரோயினும் தன்னோட கைக்கட்டு பக்கத்துல ரொம்ப சிகப்பா இருக்கிறத கவனிச்சுக்கிட்டு இருக்கும் போது, திடீர்னு பாத்ரூம்குள்ள யாரோ இருக்கிற மாதிரி இருக்கு இதை பார்த்து மிரண்டு போன ஹீரோயினும் மெது மெதுவா கிட்ட போகும் போது ஒரு உருவம் வாய பொளந்துக்கிட்டு நிக்குது, அதனால டக்குனு திரைய விலக்கிட்டு பார்க்கிறா, அங்க யாருமே இல்ல, அப்ப திடீர்னு பின்னால இருந்து ஹெலன் அப்படினு ஒரு குரல் கேட்டு இவளும் திரும்பி பார்க்கும் போது, இவளை மாதிரியே ஒரு உருவம் வித்தியாசமா நிக்குது, அப்படியே இவ அந்த பெயிண்டிங்க வரைஞ்சவன் வீட்டுக்கு போறமாதிரி ஒரு விஷீவல் தெரியுது, அப்படியே ஹீரோயின் முழிச்சு பார்க்கிறா, அங்க மோலியோட ப்ரண்ட்ஸோட மோலி உட்கார்ந்து இருக்கா, அதோட இவளோட டவலும் அவிழ்ந்து விழுகுது.

 

இதனால கடுப்பான மோலியும் ஹீரோயின திட்டும் போது தான் அவளுக்கு சுயநினைவு வந்து வேகமா தன்னோட ரூம்கு ஓடுறா, ஆனா அவளோட கால் புல்லா ஒரே ரத்தமா இருக்கு, மோலியும் ஹீரோயின்கிட்ட வந்து ஹெலன் ஏன் இப்படி பண்ணுற உனக்கு என்னாச்சு இவ்வளவு நேரம் நீ எங்க போனா அப்படினு கேட்கிறா, அதுக்கு ஹீரோயினோ எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல, நான் ஜிம்முல இருந்தேன், அங்க நான் பாத்ரூம்ல இருக்கும் போது, அங்க ஒரு கொடூரமான ஒரு லேடிய பார்த்தேன் அப்படினு சொல்றா, ஆனா இதையெல்லாம் மோலி நம்ப மாட்டுறா, இருந்தாலும் நாம நாளைக்கு டாக்டர்கிட்ட போகலாம் அப்படினு சொல்லிட்டு போய்டுறா மோலி.

 

அதுக்கு அப்பறம் ஹீரோயினும் கதவ சாத்திட்டு அழுதுக்கிட்டே கால பார்க்கிறா, அவளோட கால்ல புல்லா வெறும் கண்ணாடியா குத்தி ரத்தமா வழிஞ்சுக்கிட்டு இருக்கு, ஹீரோயினும் அந்த கண்ணாடிய வலியோடையே எடுக்கிறா, அப்படியே சீன் கட்டாகுது, அடுத்த சீன்ல ஹீரோயின மோலி ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்கா, அந்த டாக்டரும் என்ன பிரச்சனை அப்படிங்கிறத கண்டுபிடிக்க அவள்ட சில கேள்விகள கேட்கிறா, ஹீரோயினும்,”நான் ஒரு இடத்துல இருக்கேன் அப்ப டக்குனு அடுத்த நிமிஷம் வேற எங்கையோ இருக்கேன், தூக்கத்துல நடக்கிற மாதிரி அப்படினு சொல்றா, அடுத்து அந்த டாக்டரும் உனக்கு எதாவது குரல் அல்லது விஷீவலா எதாவது தெரியுதா அப்படினு கேட்க, அதுக்கு ஹீரோயினோ ஆமா அப்படினு சொல்லவும், அடிப்பாவி என்னைட்ட சொல்லவே இல்ல அப்படினு மோலியும் ஹீரோயின்கிட்ட கேட்கிறா.

 

அடுத்து டாக்டரும் மோலிய வெளில போக சொல்லிட்டு அவளோட அம்மாவ பத்தி விசாரிக்க ஆரம்பிக்குறா, அதனால மோலியும் சரி நாம நாளைக்கு மீட் பண்ணலாம் அப்படினு சொல்லிட்டு கிளம்ப, டாக்டரும் ஹீரோயின்கிட்ட எம்,ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து பார்த்த என்ன பிரச்சனை அப்படிங்கிற கண்டுபிடிச்சிடலாம் அப்படினு சொல்லி அனுப்பி வைக்கிறா. அடுத்து ஹீரோயினும் டாக்ஸிய பிடிச்சு தன்னோட வாழ்க்கையில ஏன் இப்படியெல்லாம் நடக்குது அப்படினு யோசிச்சுக்கிட்டே அம்மாவோட மோட்டல் ரூமுக்கு வந்து உட்கார்ந்து இருக்கும் போது, திடீர்னு பெட்டுக்கு கீழ இருந்து ஏதோ ஒரு சவுண்ட் வரவும் இவளும் மெதுவா லைட்ட அடுச்சு பார்க்கிறா, அங்க ஏதோ ஒரு உருவம் படுத்திருக்க மாதிரி இருக்கு, அப்படியே டக்குனு சீன் கட்டாகுது.

 

அடுத்த சீன்ல ஹீரோயினோட போன் ரிங்க் அடிக்க இவளும் அந்த சவுண்ட் கேட்டு எந்திருச்சு போன எடுத்து பேசுறா, டாக்டர் தான் கால் பண்ணிருக்கிறது, அந்த டாக்டரும்,”நீ இப்ப சீக்கிரம் ஹாஸ்பிட்டலுக்கு வரனும், உன்னோட ஸ்கேன் ரிப்போர்ட் வந்திடுச்சு இத நீ உடனடியா பார்த்தே ஆகனும் அப்படினு சொல்லிட்டு வைக்கிறாங்க, அங்க இருந்த கண்ணாடியில ஐ அப்படினு ஒரு லெட்டர் எழுதி இருக்கு, அடுத்து வேகமா ஹாஸ்பிட்டல் வந்த ஹீரோயின்கிட்ட அந்த டாக்டரும், உன்னோட மூளைக்குள்ள ஏதோ ஒரு கட்டி இருக்கிற மாதிரி தெரியுது அதோட உன்னோட மூளைக்குள்ள எதோ ஒன்னு வளர்ந்துக்கிட்டு இருக்கிற மாதிரியும் இருக்கு அப்படினு சொல்லி அந்த ஸ்கேன் ரிப்போர்ட்ட காட்ட அதுல மண்ட ஓடு மாதிரி ஏதோ ஒன்னு இருக்கு, அதோட அந்த டாக்டர் ஒருவேளை நீங்க டிவின்சா இருக்கலாம் அப்படினு சொல்றா.

 

அதோட அந்த டாக்டரும்,”நான் ஹெஸ் பண்ணுறது சரியா இருந்தா, உன்னோட அம்மா வயித்துல ட்வின்ஸ் உருவாகி இருக்கனும், உங்க அம்மா சாகும் போது அது உன்னோட உடம்குள்ள உன்னோட மூளைக்குள்ள வந்திருக்கனும், அது உன்னோட லைப் புள்ள உன் கூடவே தான் இருக்கும், உனக்கு ஆக்ஸிடன் ஆனா அப்பறம் ஏதோ நடந்திருக்கு, எனக்கு தெரிஞ்சு அது இப்ப வளர்ந்துக்கிட்டு இருக்குனு நினைக்கிறேன், இது உன்னோட மூளைக்கு மிகப்பெரிய பிரச்சனைய கொடுக்கும் அதனால நாம இதை ஆபரேஷன் பண்ணி வெளில எடுத்தாகனும் அப்படினு சொல்றாங்க. ஆனா ஹீரோயினோ நான் இதை பத்தி யோசிக்கனும் அப்படினு சொல்லவும் அந்த டாக்டரும் யோசிச்சு சீக்கிரம் சொல்லு, அப்பதான் டேட் பிக்ஸ் பண்ண முடியும் அப்படினு சொல்லிட்டு போறாங்க.

 

ஹீரோயினுக்கு டாக்டர் சொன்ன விஷயம் ரொம்ப பயத்த ஏற்படுத்துது அதனால பக்கத்துல இருக்கிற ஸ்டெத்தஸ்கோப்ப எடுத்து தன்னோட தலையில வச்சு ஹாலோ அப்படினு சொல்றா, அப்ப திடீர்னு ஹெலன் அப்படினு ஒரு குரல் கேட்குது, இதைகேட்டு பயந்து போன ஹீரோயினும் அங்க வந்த டாக்டர்கிட்ட ஆபரேஷன எப்ப வச்சுக்கலாம் அப்படினு கேட்கிறா, அடுத்து ஹீரோயின் வீட்டுக்கு வரும் போது, தனக்கு வந்த பிரச்சனை மாதிரி வேற யாருக்காவது வந்திருக்கா அப்படினு தேடி அவங்க சொன்ன விஷயங்கள எல்லாம் கேட்டுக்கிட்டே வரா,  அடுத்து மோலிய மீட் பண்ணின ஹீரோயினும் டாக்டர் சொன்ன விஷயத்த எல்லாம் அவள்ட சொல்றா, அதோட ஆப்ரேஷன் நடக்க இன்னும் 3 நாள் தான் இருக்கு அப்படினும் சொல்ல, அதுக்கு அவளும் இன்னும் 3 நாள் உனக்கு இருக்கிற எல்லா பிரச்சனை சரியாகிடும் அப்படினு சொல்லி தான் போட்டுருந்த ஜெயின அவளுக்கு போட்டு விட்டு நான் எப்போதுமே உன் கூடவே இருப்பேன் அப்படினு சொல்லுறா, அடுத்து அவங்க ரெண்டு பேரும் ஒரு செல்பி எடுக்கிறாங்க.

 

அடுத்து மோலியும் அங்கிருந்து கிளம்ப ஹீரோயினும் கொஞ்ச நேரம் கழிச்சு தன்னோட ரூமுக்கு வரா, அப்ப அங்க இவ மறைச்சு வச்சிருந்த பெயிண்டிங் பழைய இடத்துல இருக்கு, இதை பார்த்து பயந்து போன ஹீரோயினோ அதை எடுத்து வச்சிட்டு மோலி இதை நீ தான் எடுத்தி வச்சியா அப்படினு கூப்பிட்டு கூப்பிட்டு பார்க்கிறா ஆனா அங்க யாருமே இல்ல, ஆனா அங்க டி.வி ஓடுன மாதிரி சவுண்டெல்லாம் கேட்டுச்சு, இங்க என்ன நடக்குது அப்படினு ஹீரோயினும் மறுபடியும் அவளோட ரூமுக்கு அந்த பெயிண்டிங்க மறுபடியும் அதே இடத்துல இருக்கு, இதனால கடுப்பான ஹீரோயினும் அந்த பெயிண்டிங்க கிழிச்சு அத எடுத்திட்டு போய் அதை வரைஞ்சவன்கிட்ட கொடுத்திடலாம் அப்படினு அவனோட இடத்துக்கு வந்திருக்கா.

 

ஆனா ரோமன் அப்படினு ஹீரோயின் அவன எவ்வளவு கூப்பிட்டும் அவன் வராம இருக்கவும், இவளே உள்ள போய் தேட ஆரம்பிக்கும் போது, ஏதோ ஒரு வீடியோ ப்ளே ஆகுற மாதிரி சவுண்ட் கேட்கவும் அங்க போய் பார்க்கிறா, அந்த வீடியோவுல ஹீரோயின் வேற மாதிரி இருக்கா, அதோட ரொமன கட்டி போட்டு ஏதோ பண்ண ரெடி ஆகிட்டு இருக்கா, இதை பார்த்த ஹீரோயினோ டக்குனு ரோமன தேட ஆரம்பிக்க அங்க உடைஞ்சு போன கண்ணாடிகளும் அதோட அங்க ரத்தத்தோட காலடி தடம் இருக்கிறதையும் பார்த்திட்டு அவளோட கால்ல கண்ணாடி துண்டுகள் குத்தி இருந்தது அவளுக்கு ஞபகத்து வரவும், இங்க ஏதோ நடந்துருக்கு அப்படினு புரிஞ்சுக்குக்கிட்டு அந்த லேப்டாப்ப எடுத்திக்கிட்டு அங்கிருந்து ஓட ஆரம்பிக்குறா.

 

தான் தான் ரோமன கொன்னுட்டோம் அப்படினு நினைச்சு பீல் பண்ணின அவ அந்த லேப்டாப்பையும் சுக்குநுறா உடைச்சு அத குப்பையில தூக்கி போட்டு அங்கிருந்து கிளம்பலாம் அப்படினு ட்ரை பண்ணும் போது, திடீர்னு அவளோட வாயில இருந்து கருப்பா ஏதோ முடி மாதிரி வெளில வருது, இதை பார்த்து மிரண்டு போன ஹீரோயினும் வேகமா வீட்டுக்கு வந்திடுறா, அடுத்து அவளும் பயத்தோட குளிச்சிக்கிட்டு இருக்கும் போது, அவளோட கையில கட்டுக்கு பக்கத்துல சிகப்பா ஏதோ ஒன்னு பரவுற மாதிரி இருக்கிறத பார்க்கிறா, ஹீரோயினும் அத தொட்ட உடனே ரோமன அவ கொல்ற மாதிரியான விஷீவல் எல்லாம் தெரிய ஆரம்பிக்குது, அதோட நான் வரப்போறேன் அப்படினு ஒரு குரலும் கேட்குது.

 

அடுத்த செகண்டே ஹீரோயின் லிப்ஸ்டிக் போடுற மாதிரி இருக்கு, டக்குனு அவளுக்கு சுயனினைவு வந்து என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்படிங்கிற மாதிரி பார்க்கிறா, அதோட கண்ணாடில  ஐ ஆம் கம்மிங்க அப்படினும் எழுதி இருக்கு, ஹீரோயினும் ரொம்ப குழப்பத்தோட தன்னோட ரூம்க்கு வரும் போது ரோமன் வீட்டுல போட்டுட்டு வந்த அந்த பெயிண்டிங் மறுபடியும் இங்க வந்திருக்கு, இதனால கோவமான ஹீரோயினும் அதை எடுத்திட்டு போய் குப்பையில போட்டுட்டு வந்து தன்னோட கைய கட்டில்ல கட்டி லாக் பண்ணிட்டு, இப்ப எப்படினு என்னைய வெளில கூட்டுட்டு போற அப்படினு பார்க்கலாம், இன்னும் 3 நாள் தான் எப்படியாவது தாக்கு பிடிச்சிடலாம் அப்படினு அப்படியே படுத்து தூங்க ஆரம்பிக்குறது.

திடீர்னு ஹீரோயினுக்கு ஏதேதோ விஷீவல் எல்லாம் தெரிய ஆரம்பிக்குது, அப்படியே அடுத்த சீன்ல காலையில ஹீரோயின் தூக்கத்துல இருந்து முழிக்க ஆரம்பிக்குறா, அவளோட கட்டு எல்லாம் அவிழ்ந்திருக்கு, என்ன நடந்துருக்கு அப்படினு தெரியாம ஹீரோயினும் குழம்ப ஆரம்பிக்குறா, அவளோட கால் புல்லா ரத்தமா இருக்கிறதையும் கவனிக்கிறா, அதோட ரோமன் வச்சிருந்த கத்தியும் அந்த பெயிண்டுங்கும் மறுபடியும் அங்க வந்திருக்கு, அப்ப மோலியும் கரெக்டா அங்க வந்திடுறா, இவளும் கேசூவல வெளில போய் என்ன அப்படினு கேட்க அதுக்கு அவளோ, “என்ன ஹெலன் இப்படி கேட்கிறா, என்னோட ஷோ ஆரம்பிக்க இன்னும் 1 மணி நேரம் தான் இருக்கு அப்படினு சொல்லவும், இந்த சீக்கிரம் கிளம்புறேன் அப்படினு சொல்றா, அப்ப மோலி என்னோட பாய்ப்ரண்ட பார்த்தியா அப்படினு கேட்க, ஹீரோயினும் இல்ல அப்படினு சொல்லிட்டு, நீ போ நான் பின்னாலையே வரேன் சொல்லி அனுப்பு வைக்கிறா.

 

அடுத்து உள்ள வந்த ஹீரோயினும் ரூம் 2 அப்படிங்கிற சாவி தன்னோட பாக்கெட்டுல இருக்கிறத பார்க்கிறா, அடுத்து வேகமா கிளம்புன ஹீரோயினும் அங்க இருந்த கத்திய மறைச்சு வச்சிட்டு அந்த சாவிய எடுத்துக்கிட்டு கிளம்ப ஆரம்பிக்குறா, போகும் போதே அவளோட கை ரொம்ப வலிக்க ஆரம்பிக்குது, மோலியோட பாய் ப்ரண்டும் ஹீரோயினும் ஒன்னா இருக்கிற மாதிரியான விஷீவல் எல்லாம் அவளுக்கு தெரிய ஆரம்பிக்குது, வலி ரொம்ப அதிகமாகவும்  பக்கத்துல இருக்கிற ஒரு இடத்துக்குள்ள போய்ட்டு அந்த வலிய பொறுத்துக்க முடியாம அடிச்சே  அந்த கட்ட பிரிக்க ஆரம்பிக்குறா, ஒருவழியா அந்த கட்ட பிரிச்ச அவ உள்ளகுள்ள என்னமோ இருக்கு அப்படிங்கிறத புரிஞ்சுக்கிட்டு தையல் பிரிச்சு உள்ள கைய விட்டு வெளில எடுத்து பார்க்கிறா, அவளோட கைக்குள்ள ஒரு விரல் இருக்கு.

 

இதை பார்த்து மிரண்டு போன அவளும் தன்னோட ட்ரெஸ கிழிச்சு கைய நல்ல கட்டிக்கிட்டு அங்கிருந்து வெளில வரும் போது மோலியோட பாய்ப்ரண்டு,”ஹெலன் உன்னோட கைக்கு என்னாச்சு நான் உன்னைட்ட பேசனும் அப்படினு சொல்லி அவள வம்படியா நிப்பாட்டி, நான் உன்னைய லவ் பண்ணுறான். அன்னக்கி நைட்டு தான் உன்னைய நல்ல புரிஞ்ச்சுக்கிட்டேன், மறுபடியும் அந்த நாள் வராத அப்படினு ஏங்கிக்கிட்டு இருக்கேன் அப்படினு சொல்றான், அதுக்கு இவளோ இவன் என்ன சொல்றான் அப்படினு குழம்பி நீ எதை பத்தி பேசுற அப்படினு கேட்கிறா, அப்பறம் தான் அவன் ரூம் நம் 2 அப்படினு சொல்லவும் ஏதோ நடந்துருக்கு அப்படினு மட்டும் புரிஞ்சுக்கிறா, அப்ப தீடீர்னு அவன் போக்குலையே பேசி கடைசியில கத்திய எடுத்து அவன மிரட்ட ஆரம்பிக்குறா, அவனும் பயந்து அலறும் போது சுயநினைவு வந்தவலா அங்கிருந்து ஓட ஆரம்பிக்குறா.

 

அப்ப திடீர்னு அவளுக்கு முன்னால அவள மாதிரியே ஒரு உருவம் நிக்குது, இவளும் இது உண்மையில்லை அப்படினு கண்ண முடிட்டு மறுபடியும் முழிச்சு பார்க்கிறா, அங்க இப்ப யாருமே இல்ல, இதனால அவளும் வேகமா வீட்டுக்கு வந்து கதவ யாரும் தொறக்க முடியாத மாதிரி லாக் பண்ணிட்டு நேத்தி கட்டின மாதிரியே காலையும் கையையும் கட்டி போட்டுட்டு படுக்க ஆரம்பிக்குறா, ஆனா அடுத்த கொஞ்ச நேரத்துல அவ எங்கையோ பயந்து ஓடிக்கிட்டு இருக்கிற மாதிரி அவளுக்கு கனவு வரவும் நடுராத்தியில அலறிக்கிட்டு எந்திருச்சு பார்க்கிறா, ஆனா அவ அங்கையேத்தான் இருக்கா, அடுத்து அவளும் வெளில வந்து பார்க்கும் போது அந்த நேரத்துல மோலி தனியா உட்கார்ந்து இருக்கவும் இவளும் என்னாச்சு அப்படினு விசாரிக்கும் போது தான், அவ அவளோட பாய் ப்ரண்டா காண்டாக்ட் பண்ண முடியல அப்படினு பீல் பண்ணிக்கிட்டு இருக்கிறது தெரிய வருது.

 

அதோட மோலிக்கு தன்னோட பாய் ப்ரண்ட்ட ஹெலன் தான் ஏதோ பண்ணிருப்பா அப்படினு சந்தேக வர ஆரம்பிச்சுருக்கு, ஏன்னா ஹீரோயினோட ரூம்ல ஹீரோயினுக்கே தெரியாம அவன கொல்லு அப்படினு வரைஞ்சு வச்சுருப்பா பார்த்தீங்களா அத மோலி பார்த்திட்டா, ஆனா அதை மட்டும் அவ வரைஞ்சு வைக்கல, அதை தவிர வேற நெறைய வரைஞ்சு வச்சிருக்கா, இது ட்ராயிங்க் எல்லாம் ஏதோ ஒன்னு வந்துக்கிட்டு இருக்கு அப்படிங்கிறத காட்டுது, இதையெல்லாம் நான் பண்ணல அப்படினு ஹீரோயின் சொன்னாலும் மோலி நம்ப மாட்டுறா, அதோட என்னோட பாய் ப்ரண்ட் எங்க அப்படினு இவகிட்ட கேட்கிறா, அதனால ஹீரோயினும் வேற வழியில்லாம,”அவன் தான் என்னைய பார்க்க வந்தான், அவன் நல்ல பையன் இல்ல, அவன் கெட்டவன், புரிஞ்சுக்கோ, நான் அவன எதுவுமே பண்ணல கொஞ்சம் பய முறுத்தினேன் அவ்வளவு தான் அப்படினு சொல்லி பார்க்கிறா.

 

இதைகேட்ட மோலியும்,”உன்னோட பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிட்டு இருக்கு, நான் இப்பவே போலிஸ்க்கு கால் பண்ணனும் அப்படினு சொல்ல, அதுக்கு அவளோ எனக்கு ஆபரேஷன் முடிஞ்சிடுச்சுனு நான் சரியாகிடுவேன் அப்படினு என்ன என்னமோ சொல்லி பார்க்கிறா, ஆனா மோலியோ நம்பாம இருக்கவும்,”நான் ஒன்னும் பைத்தியம் இல்ல அப்படினு கத்தும் போது, திடீர்னு சீன் மாறுது, இப்ப அவங்க ரெண்டு பேரும் நின்னுக்கிட்டு பேசிக்கிட்டு இருக்காங்க, இவங்க ரெண்டு பேரும் கோவமா பேசிக்கிட்டு இருக்கும் போது, திடீர்னு ஹிரோயின், “உனக்கே தெரியும் ஹெலன் தப்பா எதுவுமே பண்ண மாட்ட அப்படினு, வேற யாரையோ பத்தி பேசுற மாதிரி பேசிட்டு மோலி கவனிக்கிறதுக்கு முன்னால பேச்ச மாத்திடுறா.

 

ஆனா அடுத்த செக்ண்டே ஹீரோயின் மோலியோட கைய முறுக்கிட்டே கத்துற மாதிரியும் அவள கீழ தள்ளிவிட்டு அவள கொல்ல ட்ரை பண்ணுற மாதிரியும் இருக்கு, அப்ப டக்குனு சுயநினைவுக்கு வந்த ஹீரோயின்,”மோலி இங்கிருந்து ஓடிடு, அது நான் இல்ல, அப்படினு கத்திகிட்டே ரூம்குள்ள போய் பூட்டிக்கிறா, மோலி எவ்வளவு கூப்பிட்டும் தொறக்காத தான் எப்போதும் கட்டுற மாதிரி கையையும் காலையும் கட்டிம் போது மோலியும் கதவ தொறந்திட்டு உள்ள வர, அப்படியே அடுத்த சீனுக்கு மூவ் ஆகுது, இப்ப ஹீரோயினும் மோலிய கழுத்த நெறுச்சு கொலை செய்ய ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கா, மறுபடியும் சுயனினைவுக்கு வந்த ஹீரோயின் பயந்து பின்னால போக மோலியோ என்னைவிட்டுட்டு போய்டு அப்படினு கத்துறா, அதனால ஹீரோயினும் பயந்து அங்கிருந்து ஓட ஆரம்பிக்குறா.

 

ஹீரோயினும் என்ன பண்ணுறது அப்படினு தெரியாம பயத்தோடையும் பதட்டத்தோடையும் நடந்து வந்துக்கிட்டு இருக்கும் போது, அவள யாரோ பாலோவ் பண்ணுற மாதிரி இருக்கு, அப்ப டக்குனு காருக்குள்ள வெளில வரான் மோலியோட பாய் ப்ரண்ட், அவனும் நடந்த விஷயத்த மோலிக்கிட்ட சொல்லிட்டா அப்படினு நினைச்சு, உன்னைட்ட கொஞ்சம் பேசனும் கார்ல ஏறு அப்படினு கத்திய எடுக்க  ஹீரோயினும் அங்கிருந்து ஓட ஆரம்பிக்குறா, ஹீரோயினும் அவன்கிட்ட இருந்து தப்பிக்க ரயில்வே ஸ்டேசனுக்குள்ள ஓட ஆரம்பிக்குறா, ஆனா அங்கையும் அவன் அவள பாலோவ் பண்ணி வந்திடுறான்.

 

இவளும் ஒரு இடத்துல போய் ஒளிய அவனோ இவள அசால்ட்ட கண்டுபிடிச்சு அவள அபூயூஸ் பண்ண ஆரம்பிக்குறான், ஆனா அவன தள்ளிட்டு விட்டு கீழ விழுந்த ஹீரோயினோ திடீர்னு ஏதோ மாதிரி ரியாக்ட் பண்ண ஆரம்பிக்குறா, டக்குனு அவளோட கண்ணு எல்லாம் மாறிடுது, இதை பார்த்து பயந்து போன அவன ஹீரோயின் பக்கத்துல கிடக்கிற கத்திய எடுத்து பாரபட்சம் பார்க்காம கொடூரமா கழுத்த அறுத்து கொல்ல ஆரம்பிக்குறா, அவன கொன்னு முடிச்சிட்டு ஒரு இடத்துல உட்கார்ந்து இருக்கும் போது தான் ஹீரோயினுக்கு சுயநினைவு வருது, தான் கை புல்லா ரத்தமா இருக்கிறத பார்த்த ஹீரோயின், பக்கத்துல நான் இங்க தான் இருக்கேன் அப்படினு எழுதி இருக்கிறத பார்த்து மிரண்டு போய்டுறா.

 

அடுத்து அவன் இறந்து கிடக்கிறதையும் பார்த்திட்டு அங்கிருந்து பயந்து ஓட ஆரம்பிக்குறா, வெளில வந்து அவனோட கார்ல ஏறி உட்கார்ந்துக்கிறா, இங்க மோலியும் கவலையோட ஹீரோயினோ ரூம செக் பண்ணி பார்த்துக்கிட்டு இருக்கும் போது, அன்னக்கி அவங்க ரெண்டு பேரும் எடுத்தக்கிட்ட ஒரு போட்டவ பார்க்கிறா, அதுல ஹீரோயின் வித்தியாசமா போஸ் கொடுத்திருக்கிறத பார்த்த மோலி தன்னோட போன எடுத்து அந்த போட்டோவ தெளிவா பார்க்கிறா, அதுல ஹீரோயின் முறைச்சு பார்த்துக்கிட்டு இருக்கா, இங்க ஹீரோயினும் அவனோட போன எடுத்து மோலிக்கி கால் பண்ணி பேசுறா, மோலியோ, ஹெலன் அது நீ இல்ல அப்படினு எனக்கு தெரியும், வீட்டுக்கு வா, நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் அப்படினு சொன்னாலும், யாராலும் எனக்கு ஹெல்ப் பண்ண முடியாது என்னோட சிஸ்டர் என்னோட தலைக்குள்ள இருக்கா, அவ என்னைய கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சிட்டா, நான் கண்டிப்பா செத்தே ஆகனும், அப்ப தான் இவளால யாருக்கும் பாதிப்பு வரமா இருக்கு, இது எங்க ஆரம்பிச்சுச்சோ அங்கையே நான் முடிக்க போறேன் அப்படினு சொல்லிட்டு வச்சிடுறா.

 

இதைகேட்ட மோலியும் வேகமா  ஹெலன காப்பாத்த சைக்கிள எடுத்துக்கிட்டு மோட்டலுக்கு கிளம்ப ஆரம்பிக்குற, மோட்டல் ரூமுக்கு வந்த ஹீரோயினும் ரூம லாக் பண்ணிட்டு தைரியாம் வரதுக்காக மோலியோட பாய்ப்ரண்ட் வச்சிருந்த சரக்க கொஞ்சம் குடிச்சிக்கிட்டு இருக்கும் போதே, நான் வர தான் போறேன் ஹெலன் உன்னால என்னைய தடுக்க முடியாது அப்படினு அவளோட மண்டைக்குள்ல இருந்து கேட்குது.

 

அதனால வேகமா ஹீரோயினும் நெறையா தூக்க மாத்திரைகளை போட்டு முழுங்கிட்டு அப்படியே படுக்க ஆரம்பிக்கும் போது அவளோட உடம்போ என்னோமோ ஆகுது,அதனால ஹீரோயினும் பாத்ரூமுக்கு போய்ட்டு, நீ இன்னக்கி சாக போற அப்படினு சொல்லிட்டு கண்ணாடிய உடைச்சுட்டு அந்த கண்ணாடி துண்ட வச்சு தன்னோட கைய கட் பண்ணிக்கிறா, அப்ப ஹெலன் அப்படினு ஒரு குரல் கேட்க இவளும் ரத்தம் கொட்டுன படியே வெளில வரா, அங்க தூரத்து ஒரு உருவம் நிக்கிற மாதிரி இருக்கு, இவளோட உடம்பும் வேற மாதிரி ரியாக்ட் பண்ணுது, அந்த உருவமும் ஹீரோயின்கிட்ட,”நான் இதுக்காக எவ்வளவு நாள் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் அப்படினு உனக்கு தெரியுமா, எனக்கான நேரம் வந்திருச்சு அப்படினு சொல்லுது.

 

அடுத்து நீ அம்மா மாதிரி ரொம்ப வீக்கா இருக்க அப்படினு சொல்லவும் ஹீரோயின் கத்துறா, டக்குனு அவளோட உடம்ப கண்ட்ரோல்ல எடுத்திக்கிட்ட  அந்த உருவம் அம்மா என்னைய கொல்ல ட்ரை பண்ணினா, ஆனா நான் அவள்ட இருந்து தப்பிச்சு உன்னோட உடம்புக்குள்ள புகுந்துக்கிட்டேன், நான் தான் உன்னைய உயிரோட வச்சிருக்கேன், உன்னோட மொக்கையான லைப்ப நானும் இத்தன நாள வேற வாழ்ந்துக்கிட்டு இருந்தேன், ஆனா நான் இப்ப உன்னோட உடம்புல இருந்து வெளில வர போறேன் அப்படினு சொல்லிக்கிட்டே அவ கிட்ட போகுது, அதேநேரத்துல மோட்டலுக்கு வந்த மோலியும் அவள தேட ஆரம்பிக்கும் போது, ஹெலன் கத்துற சவுண்ட் கேட்டு உள்ள வந்து பார்க்கிறா, ஹீரோயினோ மூலையில பயந்து போய் உட்கார்ந்து இருக்கா.

 

ஹீரோயினும், என்னோட சிஸ்டர் இங்க தான் இருக்கா அப்படினு சொல்ல, ஆனா மோலியோ அவ உண்மையில்ல அவ உன்னோட கற்பனை தான் அப்படினு சொல்லும் போது, ஹீரோயினோ மோலி இங்கிருந்து ஓடு அப்படினு சொல்றா, அப்பதான் ஹெலன் தூக்க மாதிரிய சாப்பிட்டுருக்கா அப்படிங்கிறத பார்க்கிறா மோலி, ஹீரோயின் அவள அங்கிருந்து போக சொன்னாலும் மோலி நான் உன்னைய விட்டுட்டு போக மாட்டேன் அப்படினு சொல்றா, அவங்களுக்கு நடுவுல ஒரு பாசப்போராட்டமே நடந்துக்கிட்டு இருக்கும் போது ஹீரோயினோட உடம்ப அவளோட சிஸ்டர் கன்ட்ரோல் பண்ண ஆரம்பிக்குறா.

யாருமே எதிர்பார்க்காத மாதிரி, ஹீரோயினோ உடம்ப கிழிச்சு அந்த கொடூரமானவ வெளில வர ஆரம்பிக்குறா, இதை பார்த்து மிரண்டு போய்கிட்டு இருக்கா மோலி, கொஞ்சம் கொஞ்சமா அவ ஹீரோயினோ உடம்புக்குள்ள இருந்து வெளில வந்திடுறா, அவள பார்த்து பயந்து மோலி தப்பிக்க ட்ரை பண்ணுறா, அடுத்து மோலியும் தப்பிச்சு வெளில வந்து மெதுவா பயந்த படியே கார்ல போய் ஏறி அங்கிருந்து தப்பிக்க சாவிய தேட ஆரம்பிக்குறா, ஆனா பின்னால இருந்து ஏதோ சவுண்ட் வரவும் இவளும் பின்னால மெதுவா திரும்பி பார்த்திட்டு எதுவுமே இல்லாம இருக்கவும் சுத்தி முத்தியும் பார்த்திட்டு தேவையில்லாம சத்தம் போடாம வெளில இறங்கும் போது, அவள பின்னால இருந்து பயமுறுத்துது அந்த உருவம்.

 

இதனால பயந்து போன மோலியும் மறுபடியும் ரூம்குள்ளைய போய் அங்கிருந்து மறுபடியும் தப்பிக்க ட்ரை பண்ணும் போது, அவள இழுத்து கீழ போட்ட ஹீரோயினோட சிஸ்டர் அவகிட்ட வந்து அவளோட கழுத்த நெறுச்சு கொல்ல ட்ரை பண்ணுறா, மோலியால அவகிட்ட இருந்து தப்பிக்க முடியல, டக்குனு பக்கத்துல கிடந்த கண்ணாடி துண்ட எடுத்து அவளோட வயித்துலையே குத்திட்டு என்னைய மன்னிச்சிடு அப்படினு சொல்லிட்டு அவளோட கழுத்தையும் அறுத்திடுறா, இதனால ஹீரோயினோ சிஸ்டர் கொஞ்சம் கொஞ்சமா இறந்தே போய்டுறா, ஆனா மோலியோ எப்படி இருந்தாலும் அது ஹெலனோட உடம்பு அப்படினு அவள பார்த்து பீல் பண்ணிட்டு அப்படியே அங்க கிடந்த ஜெயினையும் எடுத்து பார்க்கும் போது, அவளோட அழுகைய அவளால அடக்க முடியல.

 

அப்படியே சீன கட் பண்ணி காலையில காட்டுறாங்க, அங்க நடந்த விஷயத்தால அதிர்ச்சியான மோலி அந்த அதிர்ச்சியோடையே சைக்கிள எடுத்திக்கிட்டு அங்கிருந்து கிளம்புறா, அப்படியே படமும் முடியுது.

 

இந்த படத்தோட எக்ஸ்ப்ளைனேசன் எப்படி இருந்துச்சு அப்படிங்கிறத கமெண்ட்ல சொல்லுங்க, உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சு இருந்துச்சுனா உடனே ஒரு லைக் தட்டுவிட்டுட்டு மறந்திடாம உங்க ப்ரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க, நெக்ஸ்ட் மூவியில மீட் பண்ணலாம் பாய் ஹாய்ஸ்…

 

 

No comments

Powered by Blogger.