Header Ads

rec 3

 படத்தோட ஓபனிங்க சீன்ல நம்ம படத்தோட ஹீரோ ஹீரோயினோட சின்ன வயசு போட்டோவுல இருந்து இப்ப அவங்க காதல் பண்ணி கல்யாணம் பண்ண போற வரைக்கு ஒரு குட்டி ப்ளாஸ் பேக் மாதிரி போட்டு காட்டுறாங்க, ஏன்னா இன்னக்கி தான் ஹீரோ ஹீரோயினோட கல்யாணம், இந்த கல்யாணத்துக்கு ரெண்டு வீட்டு சைட்ல இருந்து சொந்தம் பந்தம் அப்படினு நெறையா பேர் வந்திருக்காங்க.

எல்லோர் வீட்டுலையும் ஒரு ஆர்வ கோளாறு இருப்பாங்கள்ல, அந்த  மாதிரி கொஞ்சம் ஆர்வ கோளாறான பையன் தான் இந்த வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கிற ஹீரோவோட தம்பி ஆண்ட்ரியன், இவன் அங்க நடக்கிற எல்லா விஷயத்தையும் ரெக்கார்ட் பண்ணனும் அப்படினு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கான்.

 

இந்த படத்தோட ஹீரோ பேரு ஜாம், ஆன்ட்ரியனோ அவங்க எல்லோரையும் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, வெட்டிங்க வீடியோ எடுக்க வந்த கேமரா மேன் வச்சிருக்க கேமராவ பார்த்து அவன்கிட்ட விசாருக்கிட்டு இருக்கான், அப்படியே அவனுங்க ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸாகிடுறாங்க, அதேநேரத்துல ஹீரோயினோட ரூம்ல ஒரு ஆர்வ கோளாறு நடக்கிற எல்லாத்தையும் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்கா.

இவ ஹீரோயினோட தங்கச்சி போல, கல்யாணம் நடக்க போற இடத்து போக டைம் ஆகவும் அவளும் ஹீரோயின கூப்பிட போக அவளோ ரொம்ப பதட்டமா இருக்கா, அப்படியே அந்த கேமராவ ஆப் பண்ண வெளில ஆன்ட்ரியனோ ஹீரோ அவனோட மாமாகிட்ட பேசிக்கிட்டு இருக்கிறத ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்கான்.

 

அப்ப அவரோட கையில காயம் ஏற்பட்டு இருக்கிறத பார்த்திட்டு,”அங்கிள உங்க கையில என்ன காயம்” அப்படினு கேட்க அதுக்கு அவரோ,”டே உங்க ஆண்டிக்கிட்டு சொல்லிடாதடா, பேய் ஆட்டம் ஆடிடுவா, நான் ஒரு க்ளினிக்க போய்ருந்தப்ப அங்க ஒரு நாய் என்னைய கடிச்சிடுச்சுடா, செத்த மாதிரி தான் இருந்துச்சு, டக்குனு எந்திருச்சு கடிச்சிடுச்சு அப்படினு ஹீரோகிட்டையும் சொல்லிக்கிட்டு இருக்கும் போது, அந்த ஆண்டி வந்து அவர கூட்டு போய்டுறாங்க.

இங்க ஹீரோயினோட குடும்பமும் கல்யாணம் நடக்க போற இடத்துக்கு கிளம்பி வந்துக்கிட்டு இருக்காங்க, இந்த நியூஸ் இங்க இருக்கிறவங்களுக்கு தெரிய வரவும், அவங்களும் கிளம்ப ஆரம்பிக்கும் போது, ஹீரோவோட ப்ரண்ட்ஸும் அங்க வந்திடுறாங்க.

 

அடுத்த கொஞ்ச நேரத்துல ஹீரோயினும் அங்க வர ஹீரோவுக்கு ஹீரோயினுக்கும் வழக்கமான சம்ப்ரதாயங்களோட சம்மதம் கேட்டு கல்யாணம் நடக்குது, அடுத்து திடீர்னு ஹீரோ ஹீரோயினுக்காக தான் கம்போஸ் பண்ணி வச்சிருந்த பாட்ட பாடி தன்னோட காதல வெளிப்படுத்துறான், இதை பார்த்து ஹீரோயினோ அசந்து போய்டுறா, அடுத்து அவங்கள எல்லோரும் வாழ்த்துறாங்க.

 ஆளு ஆளுக்கு பொண்ணு மாப்பிள்ளையோட போட்டோவும் எடுத்துக்கிறாங்க, அப்ப அங்க ஹீரோவோட தாத்தாவும் வந்து அவங்கள வாழ்த்த, அதுக்கு ஹீரோவும் அவர்கிட்ட நீங்க எப்படி இருக்கீங்க அப்படினு கேட்க, அது அவருக்கு கேட்க மாட்டுது, ஏன்னா அவருக்கு காதுகேட்காது, அவரோட காது கேட்கிற மிஷினும் ஏதோ ரிப்பேர் போல, அடுத்து கொஞ்ச நேரம் கழிச்சு ரிஷப்சன் நடக்க போற ஹோட்டலுக்கு பஸ்ல எல்லோரும் கிளம்புறாங்க, அங்க ரிஷப்சன் ஏற்பாடு எல்லாம் ப்ரமாண்டமா இருக்கு.

அங்க குழந்தைகள குசிப்படுத்து பொம்மை மாதிரி ட்ரெஸ் போட்ட ஒரு நபரும் விளையாட்டு காட்டுக்கிட்டு இருக்கான், இத ஆன்ட்ரியனும் ஒன்னு விடாம ரெக்கார்ட் பண்ணிக்கிட்டே இருக்கான், அப்ப ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுக்கிட்டு ஒரு மாதிரி இருக்கிற அங்கிள பார்த்திட்டு உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே அப்படினு கேட்கிறான், அதுக்கு அவரும் இல்ல அப்படினு சொல்றாரு, கேமரா அப்படியே கட்டாகுது.

அடுத்த கொஞ்சம் நேரம் கழிச்சு ஹீரோவும் ஹீரோயினும் ஓரமா நின்னுக்கிட்டு ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறதையும் ரெக்கார்ட் பண்ணுறான் ஆன்ட்ரியன், அதேநேரத்துல ஈவ்னிங்க பார்ட்டியும் ஆரம்பிக்கவும் அவங்க ரெண்டு பேரும் அங்க போக அவங்க பின்னாலையே கேமராவ தூக்கிட்டு ஆன்ட்ரியனும் கிளம்புறான்.

 

அங்க எல்லோரும் பார்ட்டிய செம்ம ஜாலியா எஞ்சாய் பண்ணிக்கிட்டு இருக்காங்க, அதேமாதிரியா கல்யாண ஜோடியும் டான்ஸ் ஆடி எஞ்சாய் பண்ணுறாங்க, அடுத்து ஹீரோயினும் இந்த கல்யாணத்துக்கு வந்து எங்கள வாழ்த்தின எல்லோரும் நன்றி அப்படினு ஒரு ஸ்பீச் கொடுத்த அப்பறம் ஹீரோவும் ஹீரோயினும் கேக் வெட்டுறாங்க, அடுத்து ட்ரிங்கஸ் பார்ட்டியும் நடக்க ஆரம்பிக்குது.

இந்த கேப்புல ஆன்ட்ரியனோ அந்த சின்ன குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டிக்கிட்டு இருக்கிற நபர்கிட்ட பேச்சுக்கொடுத்து, அவரோட வேலை என்ன எவ்வளவு வருசமா வேலை செய்றீங்க அப்படினு கேட்கிறான், அவரும் எல்லாத்தையும் புகைய ஊதிக்கிட்டே சொல்லிக்கிட்டு இருக்காரு.

 

ஆனா அப்ப அவனோட அங்கிள ட்ரிங்க்ஸ் பண்ணினது ஒத்துக்காம வாந்தி எடுக்கிற மாதிரி இருக்கு, அவர் ஒரு மாதிரி இருக்கிற மாதிரி இருக்கு, அதோட அங்க சில பேரு உடம்பெல்லாம் கவர் பண்ணிக்கிட்டு எதையோ தேடிக்கிட்டி இருக்காங்க, அதோட போலிஸும் அங்க வர இவனோ இங்க என்ன நடக்குதுனு புரியாம குழம்புறான், ஆனா இங்க ஏதோ ஒன்னு தப்பா நடந்துக்கிட்டு இருக்கு அப்படிங்கிறது மட்டும் தெளிவா தெரியுது.

அப்ப ப்ரசப்சனல் கேமரா மேனும் இவன உன்னோட உதவி தேவைப்படுத்து அப்படினு சொல்லி உள்ள கூப்பிட இவனும் உள்ள போய்டுறான். இங்க ஹீரோவும் ஹீரோயினும் ஜாலியா டான்ஸ் ஆட அடுத்த கொஞ்ச நேரத்துல மத்தவங்களும் ஜாலியா டான்ஸ் ஆட ஆரம்பிக்குறாங்க.

 

அப்ப ஹீரோவோட ப்ரண்ட்டு ஹீரோயினோட ப்ரண்ட்ட கரெக்ட் பண்ணிடுறான், அதனால அவங்க ரெண்டு பேரும் நைஸா அங்கிருந்து ஒதுங்க, இவங்களும் ஏதோ கேம் எல்லாம் விளையாண்டுக்கிட்டு இருக்காங்க, அப்ப ஹீரோவோட அங்கிள் மாடியில இருந்து கீழ விழுகிற மாதிரி உட்கார்ந்து இருக்கவும், கீழ இருக்கிற எல்லோரும் பதற ஆரம்பிக்குறாங்க, இவங்க எல்லோரும் அவரு தண்ணி அடிச்சிட்டு தான் இப்படி பண்ணுறாரு அப்படினு நினைக்கிறாங்க, ஆனா உண்மையில இங்க நடக்க போறத கொடூரத்த இவங்க யாருமே எதிர்பார்க்கல.

 

ஹீரோவோட அங்கிள் திடீர்னு மேல இருந்து கீழ விழுந்திடுறாரு, அதனால எல்லோரும் பதட்டத்தோட அவர போய் பார்க்க, யாரும் எதிர்பார்க்காத நேரத்துல அவரு தன்னோட மனைவிய கழுத்திலையே கடுச்சு சதைய பிச்சு எடுத்திட்டு அந்த ரத்தத்த ஒரு குண்டான லேடி மேலையும் துப்புறாரு, அங்க திடீர்னு ஜாம்பிகளா அங்கையும் இங்கையும் வந்து குதிக்கிறாங்க, அடுத்து செக்ண்டே எல்லோரும் பயந்துக்கிட்டு ஓட ஆரம்பிக்குறாங்க, இதனால ஆன்ட்ரியானும் ஓட ஆரம்பிக்க, அங்க என்ன நடக்குது அப்படினு நமக்கு சரியா தெரிய மாட்டுது.

 

அப்படினு இங்க என்ன நடக்க போகுது, இந்த கொலைவெறி பிடிச்ச ஜாம்பிகள்ட இருந்து ஹீரோ தன்னோட குடும்பத்தையும் ஹீரோயினையும் காப்பாத்துவானா இல்லையா அப்படிங்கிறத செம ஹாரர்ரா நொடிக்கி நொடிக்கு திக் திக் அப்படினே கொண்டு போய்ருக்க படம் தான் 2012-ல ஹாரர் த்ரில்லர் படமா ரிலிஸான ரெக் பார்ட் 3 ஜெனிசிஸ், இந்த படத்துக்கு முன்னால ரெண்டு பார்ட் இருக்கு அதை இன்னும் நீங்க பார்க்கல அப்படினு அந்த வீடியோக்களோட லிங்கும் டிஸ்க்ரிசனலையும் அண்ட் எண்ட் ஸ்கீரின்லையும் கொடுத்துருக்கோம் மறக்கமா செக் பண்ணி பாருங்க, ஏன்னா இந்த படம் அந்த படங்களோட கண்டிநியூசன் தான்.

 

இந்த படத்துல வெறித்தனமா நெறையா சீன்ஸ் இருக்கு, அதே மாதிரி நீங்க யாருமே எதிர்பார்க்காத செம ட்விஸ்டும் க்ளைமேக்ஸ்ல இருக்கு, அந்த ட்விஸ்ட் உங்க மனச உடைச்சு உங்கள கலங்க கூட வைக்கலாம், இந்த படத்தோட எண்டிங்கும் நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டிங்க. அந்த மாதிரி தான் இந்த படமும் முடியும் அதனால ஒரு நிமிசம் கூட மிஸ் பண்ணாம கடைசி வர பாருங்க.

 

ஒகே இந்த படத்தோட கதைக்குள்ள போறதுக்கு முன்னால எங்க சேனலுக்கு இப்பதான் நீங்க புதுஷா வந்திருக்கீங்க அப்படினு உடனே சப்ஸ்க்ரை பண்ணிக்கோங்க, மறந்திடாம பக்கத்துல வர பெல் பட்டன அழுத்தி ஆல் ஆப்சன செலக்ட் பண்ணிக்கோங்க, அப்படியே சோசியல் மீடியாவுலையும் பாலோவ் பண்ணிக்கோங்க.

 

ஹீரோயின அவளோட அப்பா அங்கிருந்து பத்திரமா கூட்டுட்டு போறாரு, ஆனா இதை கவனிக்காத ஹீரோவோ ஹீரோயின தேடிக்கிட்டு இருக்கான், அப்ப ஹீரோயினோட சிஸ்டர் பயந்து ஒரு இடத்துல ஒளிஞ்சு இருக்கிறத பார்த்திட்டு அவளையும் ஆன்ட்ரியனையும் கூட்டுக்கிட்டு ஹீரோ அங்கிருந்து ஒட ஆரம்பிக்குறான், ஒருவழியா ஒரு இடத்துக்குள்ள வந்து அவங்களும் கதவ சாத்த ஜாம்பிகள் எல்லாம் கதவ உடைக்க ட்ரை பண்ணுதுங்க, ஹீரோ கூட இன்னும் சில பேரும் அந்த இடத்துடல ஒளிஞ்சுருக்காங்க.

 

இவங்களுக்கு இங்க என்ன நடக்கு அப்படினு சுத்தமா புரியவே இல்லா. அப்பதான் ஹீரோ அங்க கல்யாணத்த வீடியோ எடுக்க வந்த அங்க நடக்கிற எல்லா விஷயத்தையும் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டு இருக்கான் அப்படிங்கிறத பார்க்கிறான், இந்த நிலைமையிலையும் நீ இதையெல்லாம் ரெக்கார்ட் பண்ணுறியா அப்படினு கோவமான ஹீரோ அந்த கேமராவ வாங்கி தூக்கி போட்டு உடைச்சிடுறான், இங்க தான் ரெக் பார்ட் 3 ஜெனிசிஸ் அப்படினு படத்தோட டைட்டில் போட்டு படத்த ஓபன் பண்ணுறாங்க,

 

 

தன்னோட கேமராவ உடைச்சதால கேமராமேனும் இதுக்கு நீ பே பண்ணியே ஆகனும் அப்படினு கோவப்படுறான், அப்ப வெளில இருந்து கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லோரும் கதற சவுண்ட் கேட்ட ஹீரோவும் வேகமா இங்கிருந்து தப்பிக்க வழி எதாவது இருக்கா அப்படிங்கிறத தேட ஆரம்பிக்குறான், அதனால மேல போய் பார்க்க போன அவங்க அங்கையும் ஜாம்பிகளாலா இருக்கிறத பார்த்திட்டு டோர வேகமா அடைச்சிட்டு கீழ வந்திடுறாங்க, இங்க ஹீரோயினோட தங்கச்சி ஹீரோயினுக்கு கால் பண்ணி பார்க்கிறா, ஆனா கால் போகவே மாட்டுது.

 

ஹீரோவோ நான் எப்படியாவது க்ளாராவ கண்டுபிடிச்சாகனும் அப்படினு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கான், இந்த கலவரத்துல அவள கண்டுபிடிக்க முடியாது அப்படினு மத்தவங்க சொல்லவும் அப்செட்டகுறான், அப்பதான் ஒருத்தவங்களுக்கு ஒருத்தவங்க அறிமுகமாகிக்கிறாங்க, ஆனா அப்பதான் அந்த குருப்புல சம்பந்தமே இல்லாத ஒரு ஆளு இருக்கிறத பார்க்கிறாங்க, அடுத்து அவனும்,”நான் இந்த கல்யாணத்துல என்ன என்ன பாட்டு ப்ளே பண்ண போறாங்க அப்படிங்கிறத நோட் எடுக்க வந்தவன், இந்த வேலைக்காக எனக்கு பணம் கொடுப்பாங்க அதுக்கு ஆசைப்பட்டுதான் இங்க வந்தேன் அப்படினு சொல்றான்.

 

இப்படி இவங்க பேசிக்கிட்டு இருக்கும் போது கேமரமேனோ அங்க ஒரு வழி இருக்கிறத கண்டுபிடிக்கிறான், உடனே அத தான் வச்சிருக்கிற ஸ்குரூ ட்ரைவர வச்சு கழட்ட ஆரம்பிக்கு போது, இங்க ஜாம்பிகள் எல்லாம் அந்த ரூமோட கதவ உடைக்க ஆரம்பிக்குதுங்க, இதனால இவங்க எல்லோரும் ரொம்ப பயந்துக்கிட்டு இருக்கும் போது, இங்க கேமராமேனோ அத ஒவ்வொரு நட்ட தொறந்துக்கிட்டு இருக்கான், அப்ப பயத்துல பக்கத்துல இருந்த சொட்ட மண்டையன் இங்க கொண்டா நான் வேகமா தொறக்கிறேன் அப்படினு தெரியாம அந்த ட்ரைவர தட்டி விட்டுறான், அதனால அது கீழ விழுந்திடுது.

 அதனால கேமராமேன் கடுப்பாகி அவன திட்டுறான், அப்ப ஆன்ட்ரியனும் ஒரு வழிய கண்டுபிடிக்கா, அவங்க எல்லோரும் அந்த வழியா தப்பிக்க ட்ரை பண்ணும் போது, அந்த வழி குறுகலா இருக்கவும் கேமரா மேனும் என்னால இந்த வழியில வர முடியாது அப்படினு சொல்றான், அதேநேரத்துல அங்க ஜாம்பிகள் டோர உடைக்க, இவங்களும் வேற வழியில்லாம கேமராமேன விட்டுட்டு அங்கிருந்து தப்பிக்க ஆரம்பிக்குறாங்க, ஆன்ட்ரியனோ போறதுக்கு முன்னால, நாங்க கண்டிப்பா உன்னைய காப்பாத்த வருவோம் அப்படினு சொல்லிட்டு போறான்.

 

அடுத்து அவங்களும் அந்த இருட்டான இடத்துக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா எப்படியோ வழிய கண்டுபிடிச்சு வெளில வந்திடுறாங்க. ஆனா வெளில அங்க அங்க ஜாம்பிகள் சுத்திக்கிட்டு  இருக்குங்க, அதனால சத்தம் போடா அவங்களும் கீழ இறங்கி வராங்க, ஜாம்பிகள் அங்கிருக்கிற எல்லோரையும் விரட்டி விரட்டி கடிக்க இருக்கிறத பார்த்த இவங்களும் ஜாம்பிகளோட கண்ணில படாம அங்கிருந்து ஓட ஆரம்பிக்குறாங்க, அப்ப ஹீரோவும் அங்க ஒரு போலிஸ் கார் இருக்கிறத பார்த்திட்டு வேகமா அங்க போய் பார்க்கிறான், அப்ப திடீர்னு அந்த காருக்குள்ள இருந்த ஜாம்பி  ஒன்னு ஹீரோவ அட்டாக் பண்ண ஆரம்பிக்குது.

 

இதை பார்த்த உடனே சுதாருச்சிக்கிட்ட ஆன்ட்ரியனோ அங்கிருந்து ஒரு பைப்ப எடுத்து அந்த ஜாம்பியோட கழுத்த நெறுச்சு ஹீரோவ காப்பாத்துறான், அதேநேரத்துல அவனும் அந்த சொட்ட மண்டையன்கிட்ட ஹெல்ப் பண்ணு அப்படினு கத்தவும் அவனும் பக்கத்துல இருந்த இரும்பு ராட எடுத்து அந்த ஜாம்பி அடிச்சே கொல்றான், இதை பார்த்த ஆன்ட்ரியனோ இவர ஹெல்ப் பண்ண தான் கூப்பிட்டோம் இவ்வளவு வெறியோட இருக்காரு அப்படிங்கிற மாதிரி பார்த்துக்கிட்டு நிக்குறான். அடுத்து சொட்ட மண்டையனும் போலிஸ் காருக்குள்ள இருக்கிற வாக்கி டாக்கி மூலமா யார்டையாவது உதவி கேட்கலாம் அப்படினு போய் செக் பண்ணி பார்க்கிறான், ஆனா அது ஓர்க் ஆகவே இல்ல.

 

அப்ப அவன் எதிர்பார்க்காத நேரத்துல ஜாம்பிகளால கடிப்பட்ட போலீஸ் காரன டக்குனு ஜாம்பியா மாறி இவன கடிச்சு கொதற ஆரம்பிக்குறான், அதேமாதிரி திடீர்னு கார்ல இருந்த சைரனும் ஆன் ஆக அந்த சவுண்ட் கேட்டு மத்த ஜாம்பிகள் அங்க வர  இதை பார்த்து மிரண்டு போன ஹீரோவும் மத்தவங்களும் அங்கிருந்து காட்டுக்குள்ள ஓட ஆரம்பிக்குறாங்க.

 

ஆனா ஜாம்பிகளோ இவங்கள விடாம பின்தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கு, இவங்களும் பக்கத்துல இருக்கிற ஒரு பில்டிங்குக்கு வந்து சேர்றாங்க, ஜாம்பிகளோ இவங்கள சுத்தி வளைச்சிட்ட மாதிரி இருக்கவும் இவங்களும் என்ன பண்ணுறது அப்படிங்கிற பயத்தோட அங்க இருக்கிற டோர எல்லாம் ஓபன் பண்ண ட்ரை பண்ணுறாங்க, ஆனா அது தொறக்க முடியாத அளவுக்கு பூட்டி இருக்கு, இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது அப்படினு ஹீரோவும் உங்கள என்னால காப்பாத்த முடியல அப்படினு அவங்கள்ட சாரி கேட்கும் போது டக்குனு கதவ தொறந்த ஒரு லேடி அவங்கள சீக்கிரம் உள்ள வாங்க அப்படினு சொல்லிட்டு அந்த ஜாம்பிகள் வரதுக்கு முன்னால கதவ லாக் பண்ணிடுறா.

 

எப்படியோ தப்பிச்சு ஹீரோவும் உள்ள வந்த உடனே, “இங்க யாராவது க்ளாராவ பார்த்தீங்களா அப்படினு கேட்கிறான், ஆனா யாருமே பார்க்கல அப்படினு சொல்லிடுறாங்க, இவங்க எல்லோரும் இவங்களோட சொந்தக்காரங்க தான், அப்ப அந்த பாட்டியும் ஹீரோகிட்ட, “அதுங்களால சர்ஸ்க்குள்ள வர முடியாது, அதோட ஹோலி வாட்டரும் அதுங்கள காயப்படுத்துது அப்படினு சொல்லுது, ஹீரோவோ அவங்க சொல்றத கவனிக்காம க்ளாராவ எப்படி காண்டாக் பண்ணுறது க்ளாராவ எப்படி கண்டுப்பிடிக்கிற அப்படினே யோசிச்சுக்கிட்டு இருக்கான்.

 

அதோட க்ளார கண்டுபிடிக்க நான் இப்ப வெளில போக போறேன் அப்படினு சொல்றான், ஆனா க்ளாரா உயிரோட இருக்கால இல்லையா அப்படினு தெரியாம எப்படி போவ அப்படினு அவன மத்தவங்களும் தடுக்குறாங்க, ஆனா ஹீரோவ அவங்க சொல்ற எதையுமே கேட்க மாட்டுறான்,” அவ உயிரோட தான் இருக்கா என்னால உணர முடியுது, அப்படினு சொல்லிட்டி இருக்கும் போது, திடீர்னு ரேடியோவுல,

”ஜாம் நான் தான் க்ளார பேசுறேன், நான் பேசுறத இப்ப நீ கேட்டுக்கிட்டு தான் இருப்ப அப்படினு நம்புறேன், எனக்கு ஒன்னும் ஆகல, நானும் என்னோட அப்பாவும் ஒரு இடத்துல ஒளிஞ்சு இருக்கோம், நீயும் உயிரோட தான் இருக்க அப்படினு தெரியும் என்னால உன்னை உணர முடியுது, நாள் முழுக்க உன்னோட பேசனும் ஆச, ஆனா நமக்கு இப்ப அவ்வளவும் டைம் இல்ல, நான் உன்னைட்ட ஒரு விஷயம் சொல்லனும், நீ அப்பாவாக போற, இதை எங்க சொந்தகாரங்க கேட்டுக்கிட்டு இருக்கீங்க அப்படினா நல்லா கேட்டுக்கோங்க,” நாங்க இந்த நாளுக்காகத்தான் இத்தன நாளா கல்யாணம் பண்ணாம வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தோம், காலையிலதான் எனக்கு தெரிய வந்துச்சு அப்படினு ஓரு சந்தோசமான விஷயத்த சொல்றா.

 

இதனால ஹீரோவுக்கு சந்தோசத்துல தலை கால் புரியல, ஆனா அவனோட சந்தோசம் ரொம்ப நேரம் நீடிக்கல, ஹீரோயின் பேசிக்கிட்டு இருக்கும் போதே, டக்குனு ஸ்பீக்கர் ஆப் ஆகிடுது, இதனால அவளுக்கு என்னாச்சோ அப்படினு ஹீரோவும் பதற ஆரம்பிக்க. அப்ப அங்கிருந்து ஒரு நபர், “க்ளாரா மைக் மூல பேசி இருக்கா அப்படினா அது அந்த பில்டிங்குள இருக்கிற சென்ட்ரல் கன்ட்ரோல்ல இருக்கிற மைக்ல தான் பேச முடியும், ஆனா அந்த இடத்துக்கு இந்த நிலைமையில போய் சேர்ற முடியாது அப்படினு சொல்றான்.

 

இதைகேட்ட ஹீரோவும் இதுக்கு கண்டிப்பா எதாவது வழியிருக்கும் அப்படினு யோசிக்கா ஆரம்பிக்குறான், அப்ப அங்க சென் சார்ஸோட இருப்பாலான போர் உடைகளும் போர் ஆயுதங்களும் இருக்கிறத பார்த்திட்டு அவனுக்கு ஒரு யோசனை வருது, உடனே திரும்பி அந்த சென்ட்ரல் கண்ட்ரோல் எங்க இருக்கு அப்படினு கேட்கிறான், அதேநேரத்துல இங்க ஹீரோயினும் பேசிக்கிட்டு இருக்கும் போதே மைக் ஆப் ஆகனும் என்னாச்சு அப்படினு தெரியாம அதையும் இதையும் அமிக்கி பார்த்துக்கிட்டு இருக்கா.

 

ஆனா ஹீரோயினோட அப்பாவோ அது நடக்கபோகுது, இன்னும் கொஞ்சம் நேரம் தான், உலகம் அழிய போகுது அப்படினு வித்தியாசமா பேசிக்கிட்டு பைபிளோட வசனங்களையும் சொல்லிட்டு இருக்காரு, அந்த இடத்துல இருக்கிற எல்லரையும் ஜாம்பிகள் விரட்டி விரட்டி கடிச்சு அவங்களையும் ஒரு ஜாம்பிகளா மாத்திக்கிட்டு இருக்கு, இதையெல்லாம் ஹீரோயின் செட்ரல் கண்ட்ரோல்ல இருந்து சி.சி.வி கேமரா மூலமா பார்த்துக்கிட்டு இருக்கா, அவளோட அப்பாவும் உலகத்தோட இறுதி நாள் வரப்போகுது அப்படினு சொல்லவும் ஹீரோயினும் ஜாம் நீ எங்க  தான் இருக்க அப்படினு கவலைப்பட்டு இருக்கா, அப்ப திடீர்னு அவங்க இருந்த இடத்தையும் ஜாம்பிகள் கண்டுபிடிச்சிடுது, அதனால ஹீரோயினும் வேகமா போய் கதவ லாக் பண்ணுறா.

 

ஆனா ஜாம்பிகள் அந்த கதையும் அசால்ட்ட உடைக்க, இவளும் பயந்து வேகமா உள் கதவ தொறக்க முடியாத மாதிரி லாக் பண்ணிட்டு அவங்க அப்பா வாங்க இங்கிருந்து தப்பிச்சிடலாம் அப்படினு கூப்பிட்டுட்டு அங்கிருந்து தப்பிக்க வழிய தேடிக்கிட்டு இருக்க, அதேநேரத்துல இங்க ஹீரோவும் அந்த கவசத்த எல்லாம் மாட்டிக்கிட்டு அந்த இடம் எங்க இருக்கு அப்படினு தெரிஞ்ச நபரையும் தான் கூட கூப்பிட்டுக்கிட்டு மெது மெதுவா வந்துக்கிட்டு இருக்கான், ஆனா இங்க சென்ட்ரல் கண்ட்ரோல்குள்ளையே வந்து ஜாம்பிகள்  கதவ உடைக்க ஆரம்பிக்க ஹீரோயினும் என்ன பன்ணுறது தெரியாம முழிக்க ஆரம்பிக்குறா.

 

அப்ப தன்னோட குழந்தைய காப்பாத்தியே ஆகனும் அப்படினு ஹீரோயினும் பக்கத்துல தீயனைக்கிற வாட்டர் பைப்ப எடுத்து ஜன்னல் வழியா வெளில போட்டுட்டு தப்பிக்க ஆரம்பிக்கும் போது, அவளோட அப்பா அங்க நடக்கிறத எல்லாம் பார்த்து அதிர்ச்சியாகி நிக்குறாரு.இங்க ஹீரோவும் கொஞ்சம் கொஞ்சம் அந்த இடத்த நெருங்கிக்கிட்டு இருக்காங்க, தான் எவ்வளவு கூப்பிட்டும் கவனிக்காத அப்பாவ கன்னத்திலையே ஒரு அறையவிட்டு அவர சுயனினைவுக்கு கொண்டு வந்து அவரையும் கூப்பிட்டுக்கிட்டு ஹீரோயின் அங்கிருந்து தப்பிக்க ஆரம்பிக்குறா.

 

ஹீரோயினும் அவளோட அப்பா அங்கிருந்து தப்பிக்கிற அதே வேளையில இங்க ஹீரோவும் இன்னொருத்தவனும் ஹீரோயின கவனிக்காம அவள தேடி அந்த இடத்துக்குள்ள போறாங்க, அதேநேரத்துல ஹீரோயினோ அங்கிருந்து தப்பிச்சு கீழ் ப்ளோர்ல இருக்கிற ஒரு ரூம்க்கு வரும் போது அங்க ஏதோ ஒரு ஜாம்பி யாரோயோ கடிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கவும் இவங்களும் பயத்தோட கம்ப எல்லாம் எடுத்திக்கிட்டு அதுக்கிட்ட போகும் போது தான் தெரிய வருது, அங்க இருந்தது ஜாம்பி இல்லா, படத்தோட ஆரம்பத்துல ஓரமா ஒதுங்குன அந்த ஹீரோவோட ப்ரண்டும் ஹீரோயினோட ப்ரண்டும்.

 

இதை பார்த்த ஹீரோயினோ,”வெளில என்ன நடக்குதுனே தெரியாமா இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க அப்படினு கேட்கிறா, ஆனா இப்பவும் அவங்க வெளில என்ன நடந்துக்கிட்டு அப்படிங்கிறது தெரியாம அச்சச்சோ மாட்டிக்கிட்டோமே அப்படினு அசட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டு இருக்காங்க, அப்பதான் ஹீரோயின் அவங்கிட்ட,”நான் சொல்ல போறத நீங்க நம்பமாட்டீங்க” அப்படினு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே ஹீரோவ காட்டுறாங்க, உள்ள வந்த இவனுங்க ரெண்டு பேரும் மெது மெதுவா சத்தம் போடாம உள்ள வந்துக்கிட்டு இருக்கும் போது அந்த நபரும் ஹீரோகிட்ட,”செண்ட்ரல் கண்ட்ரோல் பர்ஸ்ட் பளோர்ல இருக்கு” அப்படினு சொல்லிக்கிட்டு இருக்கும் போது தீடீர்னு ஒரு ஜாம்பி அந்த நபர இழுத்திட்டு போயி கடிச்சு கொதறி கொன்னுட்டு அந்த கேடயத்த மட்டும் தூக்கி போடுது.

 

ஆனா ஹீரோவால அவன காப்பாத்த முடியல, அந்த அதிர்ச்சியோடையே பர்ஸ்ட் ப்ளோருக்கு போக ஆரம்பிக்குறான், இங்க ஹீரோயினும் மத்தவங்களும் அந்த ரூம்ல இருந்து வெளில வர ஆரம்பிக்குறாங்க, ஹீரோயினும் பர்ஸ்ட் ஹீரோவ கண்டுபிடிக்கனும் அப்படினு தான் முடிவு எடுத்திருக்கா, அப்பதான் அவளோட அப்பா ஹீரோவோட ப்ரண்டுக்கிட்ட, இதுங்கள எல்லாம் ஏதோ ஒரு தீயசக்தியோட கட்டுப்பாட்டுல இயங்குற மாதிரி இருக்கு, அதுங்க நடந்துக்கிறது எல்லாம் வச்சு பார்த்தா அப்படித்தான் தோணுது அப்படினு அவரு சொல்லிக்கிட்டு இருக்கும் போதே கதவ உடைச்சுக்கிட்டு அங்க ஒரு ஜாம்பி வந்திடுது, அதனால இவங்களும் நைஸா தப்பிக்கலாம் அப்படினு ட்ரை பண்ணும் போது திடீர்னு இவங்களுக்கு முன்னாலையும் ஒரு ஜாம்பி வந்து பயமுறுத்துது.

 

அதனால அத அடிச்சு போட்டுட்டு இவங்களும் அங்கிருந்து தப்பிச்சு ஓடும் போது அங்க ரெண்டு லேடி ஜாம்பிகள் நின்னுக்கிட்டு இருக்கு, ஆனா கண்ணாடியில பார்க்கும் போது அதுங்க எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்குங்க, ரொம்ப கொடூரமா இருக்குங்க, அதுங்களும் திடீர்னு இவங்கள தொறத்த ஆரம்பிக்கா, டக்குனு ஹீரோயினோட அப்பா சிலுவைய காட்டி தொடர்ந்து ப்ரேயர் பண்ண ஆரம்பிக்குறாரு, அந்த ஜாம்பிகள் கடவுளோட வசனத்து அடிபடியும் அப்படிங்கிறதால அதுங்களால ஒன்னுமே பண்ண முடியாம அங்கேயே நிக்குதுங்க, இதுங்கள கட்டுப்படுத்த இதுதான் வழி அப்படினு அவர் நல்லா புரிஞ்சுக்கிட்டாரு.

 

அதேநேரத்துல ஹீரோயின தேடி சென்ட்ரல் கண்ட்ரோலுக்கு வந்த ஹீரோ அங்க கதவு கண்ணாடியெல்லாம் உடைஞ்சு கிடைக்கிறத பார்த்து வேகமா வந்து ஹீரோயின் எங்கையாவது இருக்கால அப்படினு  சி.சி.டி,வி எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கும் போது பேக்ரவுண்ட்ல டி.வியில வைரஸ் பர்ஸ்ட் பர்ஸ்ட் பரவுன பில்டிங்குள்ல மாட்டிக்கிட்ட ஹீரோயின காட்டுறாங்க, ஆனா அது ஹீரோயின் இல்லா, அவளோஅட உடம்ப கன்ட்ரோல்ல எடுத்திக்கிட்ட சாத்தான், அவ ஒரு சின்ன பொண்ணோட வெளில வர மாதிரி ஒரு நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கு.

 

அதேநேரத்துல அந்த பில்டிங்குள்ள ஓளிஞ்சுக்கிட்டு இருந்த ஆன்ட்ரியானும் மத்தவங்களும், அங்கிருந்த குழந்தைகளையும் கூட்டுட்டுக்கிட்டு அங்கிருந்து தப்பிக்கிறதா நினைச்சு ஒரு பஸ்க்குள்ள ஓடி போய் ஒளிய ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கிறத ஹீரோவும் கவனிக்கிறான்.

 

ஆனா அந்த பஸ்ஸ ஜாம்பிகள் எல்லாம் சுத்தி வளைக்க இவங்களும் உள்ள போய் பஸ்ஸோட கதவ சாத்துறதுக்குள்ள ஜாம்பிக்கள் எல்லாம் கதவ தொறந்து உள்ள போய்டுதுங்க, இத பார்க்க முடியாம ஹீரோ பார்த்துக்கிட்டு இருக்கான், இவன் இங்க கவலைப்பட்டுக்கிட்டு இருக்கும் போது ஹீரோவுக்கு பின்னால ஒரு ஜாம்பி இவனையே பார்த்துக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கு, இதை ரிப்ளைக்ஷன்ல பார்த்த ஹீரோ, டக்குனு ஒரே அடியில அடிச்சு அத கொன்னுடுறான், அதுக்கு அப்பறம் என்ன பண்ணுறது தெரியாம முழிச்சு போய் நிக்குறான் ஹீரோ, இங்க ஹீரோயினும் மத்தவங்களும் அந்த பில்டிங்குள இருந்து தப்பிச்சு ஒரு அண்டர்க்ரவுண்டுக்குள்ள வந்திருக்காங்க.

அப்ப தீடீர்னு யாரையோ பார்த்து டக்குனு பயப்பிட, அதுக்கு அப்பறம் தான் அவன் சின்ன பசங்கள எண்டர்டெயின் பண்ணுற ஆளு அப்படிங்கிறத கவனிக்கிறாங்க, அதுக்கு அப்பறம் க்ளாராவும் அங்கிருக்கிற லைட் எல்லாம் ஆன் பண்ண  அவனுங்க ரெண்டு பேரும் அங்க இருக்கிற சட்டர ஓபன் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டு இருக்காங்க, அப்ப ஹீரோயினோட ப்ரண்டு ஹீரோயின்கிட்ட, நான் இந்த கல்யாணத்துக்கே  வந்திருக்க கூடாது நாம இங்கையே சாகப்போறோம் அப்படினு பீல் பண்ணிக்கிட்டு இருக்கா, ஹீரோயினோ அப்படியெல்லாம் ஆகாது அப்படினு சாமாதாப்படுத்திக்கிட்டு இருக்கும் போது இவங்களுக்கு பக்கத்துல கண்ணாடிக்கு அந்த பக்கம் ஒரு கொடூரமான ஜாம்பி இவங்களையே பார்த்துகிட்டு நின்னுக்கிட்டு இருக்கு.

 

அதேநேரத்துல இவங்களும் சட்டர கொஞ்ச கொஞ்சமா தொறக்கா ஆரம்பிக்க லைட்டும் டக்குனு ஆப் ஆகிடுது, அதனால ஹீரோயினும் என்னாச்சு அப்படினு பார்த்துக்கிட்டு இருக்கும் போது, டக்குனு கண்ணாடிய உடைச்சுக்கிட்டு வெளில வந்த ஜாம்பி ஹீரோயினோட ப்ரண்ட கடிச்சு கொல்ல ஆரம்பிக்குது, இதை பார்த்த ஹீரோயினும் அதிர்ச்சியாகி நிக்க, இங்க சட்டர தொறந்து இவனுங்களும் க்ளார அவள காப்பாத்த முடியாது வந்திடு அப்படினு சொல்ல இவளும் வேகமா ஓடி வர, இதை கவனிச்ச அந்த ஜாம்பியும் ஹீரோயின கொல்ல ஓடி வருது, ஆனா ஹீரோயின் எப்படி அதுக்கிட்ட இருந்து தப்பிச்சிட்டுறா.

 

இங்க ஹீரோவும் க்ளாரா உயிரோட இருக்கால இல்லையா அப்படினு தெரியாம ரொம்ப சோகத்தோட ஹாலுக்கு வந்துக்கிட்டு இருக்கான், அங்க எல்லாமே சிதறிக்கிடக்கு, அங்க அங்க நெறைய பேர் செத்து கிடக்காங்க, ஹீரோயினும் அவனுங்க ரெண்டு பேரும் அந்த பில்டிங்குல இருந்து தப்பிச்சு ஓட ஆரம்பிக்கும் போது, டக்குனு இங்க யாரையோ நான் பார்த்தேன் அப்படினு சொல்லிட்டு நிக்குறான், அதனால இவனுங்க ரெண்டு பேரும், க்ளாரா நீ இங்கையே இரு நாங்க ரெண்டு பேரும் போய் எதாவது பிரச்சனை இருக்கா அப்படினு பார்த்திட்டு வரோம் அப்படினு சொல்லிட்டு போக ஹீரோயினும் மட்டும் மழையில நனைஞ்ச படி தனியா நிக்குறா.

 

இவனுங்க போன கொஞ்ச நேரத்துல தூரத்துல யாரோ நிக்குற மாதிரி இருக்கு, அது ஹீரோயினோட அம்மாதான், ஆனா அவங்க ஒரு மாதிரி ஹீரோயினையே பார்த்துக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்காங்க, இதை பார்த்த ஹீரோயினும் கொஞ்சம் பயத்தோடையே அம்மா அப்படினு கூப்பிட்டுக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா கிட்ட போகும் போது அவங்க ஹீரோயின பார்த்து சிரிச்சிட்டு வேகமா ஹீரோயின கொல்ல ஓடி வரும் போது டக்குனு அவங்கள சுட்டு கொன்னு ஹீரோயின காப்பாத்திடுறாங்க, அவனுங்க ரெண்டு பேரும்.

 

ஆனா ஹீரோயினோ அம்மா இறந்து போய்ட்டாங்க அப்படிங்கிற அதிர்ச்சியில உறைஞ்சு போய் நிக்குறா, அடுத்து அவளும் அம்மா அப்படினு அவங்கள தூக்கி மடியில வச்சு அழ ஆரம்மிக்குறா, அடுத்து ஹீரோவோட ப்ரண்டும் க்ளார நாம போயாகனும் இங்க நெறையா ஜாம்பிகள் வந்துக்கிட்டு இருக்குங்க, அப்படினு சொல்லி அவள திரும்ப திரும்ப கூப்பிட, அவளோ அம்மாவ விட்டு வர மனசு இல்லாம கடைசியா அவங்க கூட கிளம்புறா.

 

ஆனா துப்பாக்கி வச்சிருந்தவனோ நான் இவங்கள பார்த்துக்கிறேன் நீங்க போங்க அப்படினு சொல்லி வாய மூடுறதுக்குள்ள அவன ஜாம்பிகள் வந்து அட்டாக் பண்ணிடுது, அடுத்து இவங்க ரெண்டு பேரும் அண்டர் க்ரவுண்டுக்கு போற வழிய கண்டுபிடிச்சு எப்படியோ ஜாம்பிகள் வரதுக்குள்ள உள்ள போய்டுறாங்க,

 

இங்க ஹீரோவோ ரொம்ப சோகத்தோட கீழ இறங்கி வரான், அதேநேரத்துல இங்க ஹீரோவோட ப்ரண்ட் ஹீரோயின கூப்பிட்டுக்கிட்டு அண்டர்க்ரவுண்ட் குள்ள ஓடி வந்துக்கிட்டு இருக்கும் போது, அங்க திடீர்னு ரெண்டு வழி பிரியுது, உடனே ஹீரோவோட ப்ரண்டும் இந்த வழி தான் வெளில போற வழியா இருக்கும் அப்படினு சொல்லி கூப்பிட அதுக்கு ஹீரோயினோ பில்டிங்குக்கு உள்ள போற வழியையே பார்த்திட்டு என்னால ஜாம விட்டுட்டு வர முடியாது அப்படினு சொல்ல, அதுக்கு இவனோ,”இங்க பாரு க்ளாரா ஜாம் உயிரோட இருந்திருந்தா இந்நேரம் அவன் நமக்கு கொஞ்சமாவது சிக்னல் கொடுத்து இருப்பான் அப்படினு சொல்றான்.

 

ஆனா ஹீரோயினால இவன் சொல்றத ஏத்துக்க முடியல, அதனால அவனும் ஹிரோயினை சமாதாப்படுத்திக்கிட்டு இருக்கும் போது, இங்க ஹீரோ ஹால்ல பாடிக்கிட்டு இருக்கிற பாட்டோட சவுண்ட ஏத்த அது இவங்களுக்கு கேட்க ஆரம்பிக்குது, இதைகேட்ட ஹீரோயினோ அது அவன் தான், இது தான் அந்த சிக்னல் அப்படினு சொல்ல, அதுக்கு அவனோ, “க்ளாரா இது அவன் தான் அப்படினு எப்படி நம்புறது அப்படினு சொல்ல, இது அவன் தான் எனக்கு கண்டிப்பா தெரியும் நான் அவன் இல்லாம வர மாட்டேன் அப்படினு சொல்லிட்டு அங்கிருந்த செயின் சா மிஷின  எடுத்து அத ஆன் பண்ணிட்டு அவன தன்னோட ட்ரெஸ் பிடிக்க சொல்லி அதை அப்படியே அறுத்து தூக்கி எறியுறா.

 

அடுத்து அவங்க ரெண்டு பேரும் உள்ள போக ஆரம்பிக்குறாங்க, அவங்களுக்கு பின்னால ஜாம்பிகள் கத்துற சவுண்ட் கேட்டுக்கிட்டே இருக்கு, இதைகேட்ட அவனும் அதுங்க உள்ள வந்திருச்சு அப்படினு சொல்றான், அதேநேரத்துல இவங்க பர்ஸ்ட் பர்ஸ்ட் ஒளிஞ்சு இருந்த இடத்துக்கு வந்த ஹீரோ அங்க கேமராமேன் அசையா உட்கார்ந்து இருக்கிறத பார்க்கிறான், அதனால இவனும் மெதுவா கிட்ட போய் பார்க்கும் போது தான் அவன் ஜாம்பிகள்டா கடி வாங்க கூடாது அப்படினு கைய கட் பண்ணிக்கிட்டு இறந்து போய்ருக்கான் அப்படிங்கிறது ஹீரோவுக்கு தெரியுது, அப்ப டக்குனு அவனும் கீழ விழ அவனுக்கு பின்னால ஹீரோவோட அங்கிள் இவன பார்த்து டான்ஸ் ஆடிக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்காரு, ஆனா இப்ப அவரு தன்னோட அங்கிள இல்ல அப்படிங்கிறத புரிஞ்சுக்கிட்ட ஹீரோ, அவர்கிட்ட டக்குனு கிட்ட வரும் போது கத்தியா எடுத்து குத்திடுறான்.

 

ஆனா அந்த ஜாம்பி அதுக்குலாம் மசிற மாதிரி தெரியல அவன கடிக்க ட்ரை பண்ணுது, இவன் அத அடிச்சு தள்ளி விட்டாலும் அது தொடர்ந்து இவன தாக்க ஆரம்பிக்கவும் கோவமா இவன் பக்கத்துல இருந்த மாவு மிஸ்க் பண்ணுற மிஷின எடுத்து அதோட வாயில விட்டு குடையா ஆரம்பிக்குறான், எப்படியோ ஹீரோ அந்த ஜாம்பிய கொன்னுடுறான், இங்க இவங்களும் வேகமா நடந்து வந்துக்கிட்டு இருக்காங்க, அந்த ரூம்ல இருந்து வெளில வந்த ஹீரோவும் அந்த இடம் புல்லா இப்ப ஜாம்பிகளா இருக்கிறத கவனிக்கிறான், அதேநேரத்துல ஜாம்பிகள் தங்க கிட்ட வந்துடுச்சு அப்படிங்கிறது தெரிஞ்ச உடனே ஹீரோவோட ப்ரண்டும் ஓட ட்ரை பண்ண ஹீரோயினோ இனி நானா அதுங்களா அப்படினு பார்த்திடுறேன் அப்படினு அசையா அங்கையே நிக்குறா.

 

அடுத்து அந்த ஜாம்பிகளும் அவங்கள பார்த்து ஓடி வர ஹீரோயினால அந்த மிஷின ஸ்டார் பண்ண முடியல ஆனாலும் ஹீரோயின் பின்வாங்காம அதை வச்சே அதுங்க அடுச்சு கொல்ல ஆரம்பிக்குறா, கடைசியா ஒரு ஜாம்பியோட கழுத்துல வச்சு அந்த மிஷின எப்படியோ ஆன் பண்ணின அவ அதுங்கள துவம்சம் பண்ண ஆரம்பிக்குறா, ஆனா அதுக்குள்ள ஹீரோவோட ப்ரண்ட ஜாம்பிகள் கடிச்சிடுது, அதனால அந்த ஜாம்பியையும் கொன்னுடுறா, ஆனா ஹீரோவோட ப்ரண்டோ கடிப்பட்டதால தள்ளாடிக்கிட்டு இருக்கான், அவனும் கொஞ்ச கொஞ்சமா ஜாம்பியா மாறிக்கிட்டு இருக்கான், ஹீரோயினால ஒன்னுமே பண்ண முடியல அவளுக்கு வேற வழியும் தெரியல அதனால அவனையும் அந்த மிஷினால கொன்னுடுறா.

 

அடுத்து அங்க நெறையா ஜாம்பிகள் வரவும் இவளும் வேகமா அங்கிருந்து ஓட ஆரம்பிக்குறா, இங்க ஹீரோவும் என்ன செய்யுறதுனு தெரியாம நிக்கும் போது ஹீரோயினும் ஜாம்பிகள்ட இருந்து தப்பிக்க போறாடிக்கிட்டு இருக்கா, ஹீரோவும் அங்கிருந்து வாள எடுத்துக்கிட்டு இங்கிருந்து தப்பிக்கலாம் அப்படினு நினைக்கும் போது கீழ யாரோ ஓடி வர மாதிரி சவுண்ட் கேட்கவும் அவனும் அது வழியா பார்க்கிறான், அங்க ஹீரோயினும் ஓடிக்கிட்டு இருக்கவும் க்ளாரா அப்படினு கத்துறான், கடைசியா ரெண்டு பேரும் ஓருத்தவங்கள ஒருத்தவங்க கண்டுபிடிச்சிட்டாங்க.

 

அவங்க ரெண்டு பேரும் சந்தோசத்துல என்ன பண்ணுறது அப்படினு தெரியாம திணறிக்கிட்டு இருக்கும் போது ஹீரோவும் அந்த ஏணி வழியா மேல வர சொல்றான், இவளும் மேல ஏறி போன அப்பறம் தான் அது லாக் ஆகி இருக்கு அப்படிங்கிற நினைவு வந்த ஹீரோவும் அதை தொறக்கிற ஸ்க்ரூ ட்ரைவர் கீழ தான் இருக்கு அதை வேகமா எடுத்திட்டு வா அப்படினு சொல்ல, இவளும் வேகமா கீழ இறங்கி அத தேடி கண்டுபிடிச்சு எடுத்திட்டு மேல வரா, ஆனா ஜாம்பிகள் எல்லாம் அவங்கள நெருங்கி வந்துக்கிட்டு இருக்கு, ஹீரோவும் பதட்டத்துல அதை தொறக்க முடியாம திணறுறான்.

 

அடுத்த கொஞ்ச நேரத்துல அங்க வந்த ஜாம்பிகளும் ஏணி பிடிச்சு மேல ஏற ஆரம்பிக்கவும் ஹீரோயினும் பயப்பிட ஆரம்பிக்குறா, அதுங்க ஹீரோயினோட ட்ரெஸ பிடிச்சு இழுக்கவும் ஆரம்பிக்குதுங்க, அடுத்த செகண்டே ஹீரோ அதை ஓபன் பண்ண ஹீரோயினும் வேகமா மேல வந்திடுறா, இதனால அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோசப்படுறாங்க, அவங்களால சந்தோசத்த வெளிப்படுத்தவே முடியல, அப்பதான் திடீர்னு அங்கையும் ஜாம்பி வர ஆரம்பிக்க, டனல் வழியா வெளில போகலாம் அப்படினு ஹீரோவும் ஹீரோயின கூப்பிட்டு அங்க போக அது வழியாவும் ஜாம்பி உள்ள வந்துக்கிட்டு இருக்கு, எல்லா பக்கமும் ஜாம்பி இவங்கள சுத்து வளைக்க.

அவ்வளவு தான் நாம சாக்ப்போறோம் ஒரு முடிவுக்கே அவங்க ரெண்டு வந்திடுறாங்க, அதனால அன்ப பறிமாறிக்கிட்டு இருக்கும் போது, அங்கதான் ஒரு ட்விஸ்ட், திடீர்னு பைபிளோட வசனங்கள் ஸ்பீக்கர்ல ஒலிக்க ஆரம்பிக்குது, மைக்குல ப்ரேயர் பண்ணிக்கிட்டு இருக்கிறது, ஹீரோயினோட அப்பாதான், இந்த வசனங்கள ஜாம்பிகள் கேட்ட உடனே எல்லாமே அசையாம ஒரு மாதிரி ஆடிக்கிட்டே ஸ்டக் ஆன மாதிரி நிக்குதுங்க, இதை கவனிச்ச ஹீரோவும் ஹீரோயினும் நிலைமைய சரியா புரிஞ்சுக்கிட்டு இங்கிருந்து அங்கிருந்து தப்பிக்கலாம் அப்படினு முடிவு எடுக்கிறாங்க..

 

அடுத்து மெதுவா எந்த ஒரு ஜாம்பியையுமே தொடாம ஷேப்டிக்கு வாளையும் எடுத்திக்கிட்டு அங்கிருந்து வெளில வராங்க, ஆனா அந்த ப்ரேயர கேட்குற எல்லா ஜாம்பிகள் அசையா ஸ்டக் ஆகி நிக்கிற பார்த்த ஹீரோவும் ஹீரோயினும் அங்கிருந்து வெளில வராங்க, இங்க ஹீரோயினோட அப்பாவோ சென்ட்ரல் கண்ட்ரோல்ல இருந்துக்கிட்டு வசனங்கள உச்சருக்கிட்டே இருக்காரு, அந்த இடத்த விட்டு வெளில வந்த அவங்களும் கொஞ்சம் கொஞ்சமா மசுத்தி சுத்து ஜாம்பிகள பார்த்துக்கிட்டே கேட்ட நோக்கி நடந்து போய்க்கிட்டு இருக்கும் போது.

 

திடீர்னு ஒரு வயசான ஜாம்பி ஹீரோயின கடிச்சிடுது, ஹீரோவும் கோவப்பட்டு அந்த கிழவன கொன்னுடுறான், அப்பறம் தான் கவனிக்கிறான், அந்த கிழவன் தான் தன்னோட தாத்தா அப்படினும் அவரோட காதுகேட்கிற மிஷின் காலையில இருந்து சரியா ஒர்க் ஆகாம இருந்திருக்கு அப்படினும், இவ்வளவு தூரம் தப்பிச்சு கவனா வந்தும் இப்படி க்ளாராவ அந்த ஜாம்பி கடிச்சிட்டதால ஹீரோவும் ஹீரோயினும் என்ன செய்றது அப்படினு தெரியாம நிக்குறாங்க, ஆனா ஹீரோயினோ கடி பட்ட கைய பார்த்திட்டு ஹீரோகிட்ட வாள எடுத்து இந்த கைய மட்டும் தனியா வெட்டிடு அப்படினு சொல்ல அவனும் கொஞ்சம் யோசிச்சுட்டு வேற வழியில்லாம கைய ஒரே வெட்டா வெட்டிறான்.

 

அடுத்து அவங்களும் எப்படியோ தப்பிச்சிட்டோம் அப்படினு ரத்தம் போகாம கைய நல்லா கட்டிட்டு ஹீரோவும் கைத்தாங்க அவள கூட்டுட்டு போகும் போது மேல ஹெலிஹாப்டர் எல்லாம் பறந்துக்கிட்டு இருக்கு, ஆனா பர்ஸ்ட் பார்ட்ல அந்த பில்டிங்க சீல் பண்ணின மாதிரி கவர்மெண்ட் இந்த இடத்துல நடக்குற விஷயம் எல்லாம் தெரிஞ்சு இந்த இடத்தையும் சீல் பண்ணிருக்காங்க, ஹீரோவும் இங்க என்ன நடக்குதுனு புரியாம சுத்தி முத்தியும் பார்த்துக்கிட்டு இருக்கான்.

 

அடுத்து வெளில இருக்கிற அவங்களும் இவங்கள வெளில இருந்தே செக் பண்ணிட்டு போறாங்க, ஆனா திடீர்னு ஹீரோயினோ ரத்தம் வாந்தி எடுக்க ஆரம்பிக்குறா, இதை பார்த்த ஹீரோ க்ளாராவும் ஜாம்பியா மாறிக்கிட்டு இருக்கிறத கவனுக்கிறான், கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு இருக்கிற ஹீரோயினும் ஹீரோவ திரும்பி பார்க்க அவங்களோட நிலைமை நமக்கே சோகத்த ஏற்படுத்துது, இப்ப ஹீரோ என்ன செய்ய போறான் அப்படினு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கும்போது, டக்குனு அவன் ஹீரோயின தூக்கிக்கிட்டு வெளில இருக்கிறவங்க வெளில வராதீங்க அப்படினு எவ்வளவோ எச்சரிக்கை விடுத்தும் வெளில போறான், இங்க வெளில ஓரு பெரிய படையே நிக்குது, அவங்களும் ஹீரோகிட்ட அவள கீழ இறக்கிவிட்டுட்டு தள்ளி போ அப்படினு திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்காங்க, ஆனா ஹீரோவோ தன்னோட க்ளாராவ பிரியமுடியாம இவளோடையே செத்து போய்டலாம் அப்படினு அவள கிஸ் பண்ண ஆரம்பிக்குறான்.

 

அடுத்த கொஞ்சம் நேரம் கழிச்சு முழுசா ஜாம்பியா மாறின ஹீரோயின் ஹீரோவோட நாக்க கடிச்சு துப்பிடுறா, அதோட இவங்கள் பார்த்தும் அவ கத்த ஆரம்பிக்க இவங்களும் ஹீரோ ஹீரோயின கண்ட மேனிக்கி சுட்டு சாகடிக்கிறாங்க, அவங்க ரெண்டு பேரும் சாகப்போற நிலைமையிலையும் பிரியாம கைய ஓன்னா பிடிச்சுக்கிட்டே செத்து போறாங்க, அப்படியே படமும் முடியுது.

 

இந்த படத்தோட எக்ஸ்ப்ளைனேசன் எப்படினு இருந்துச்சு அப்படிங்கிறத கமெண்ட் பண்ணுங்க, உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சு இருந்துச்சுனா உடனே ஒரு லைக் தட்டிவிட்டுட்டு மறந்திடாம உங்க ப்ரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க, நெக்ஸ்ட் வீடியோவுல மீட் பண்ணலாம் பாய் ஹாய்ஸ்…  

No comments

Powered by Blogger.