Header Ads

5 Best Movies That Were Made To Look Like A Single Take | Tamil | Unbelievable Tamil Facts | உலக ரசிகர்களை மிரள வைத்த ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட 5 திரைப்படங்கள்

சினிமா அப்படினு சொன்னலே பலவித மாயாஜாலங்களை காட்டி நம்மல வியக்க வைக்கும், பார்க்கவும் கேட்கவும் புது புது வித்தியாசங்களை நமக்கு கொடுக்கும், அதிலையும் குறிப்பா பல வித்தியாசமான தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதும், யாருமே பயன்படுத்தாத உக்தியை பயன்படுத்தி புதியவகை படங்களை எடுப்பதால் தான் ஹாலிவுட் உலகதரத்தில் இருப்பதுக்கு மிக முக்கிய காரணம்.

Watch video here👇


கடந்த 2020 ஜனவரி 17-ம் தேதி சாம் மெண்டிஸ் இயக்கத்தில் வெளிவந்த வேர்ல்ட் வார் 1 திரில்லர் மூவியான 1917 என்ற படத்தின் ஒன் ஷாட் டெக்னிக் பல மக்களாலும் அதிகமா பேசப்பட்டது. அதாவது எந்த ஒரு காட்சியிலுமே கட்டுமே இல்லாம ஒரு படத்தை எடுக்க டைரக்டர்ஸ் பயன்படுத்தும் ஒரு மெத்தட் இந்த ஒன் சாட் டெக்னிக்.

டைரக்டர்ஸ் இந்த உக்திய பயன்படுத்தும் நோக்கமே ரசிகர்களுக்கு அவர்களும் அந்த படத்தோட ட்ராவல் பண்ணுவதை போல ஒரு உணர்வை ஏற்படுத்தவும் படத்தில் நடக்கும் நிகழ்வு உண்மையில் நடப்பது போன்ற ஒரு உணர்வை கொடுப்பதற்கும் தான்.

இந்த ஒன் ஷாட் டெக்னிக்கை பயன்படுத்துவது அவ்வளவு ஈசி இல்ல, அதனால தான் இந்த டெக்னிக்க எந்த டைரக்டரும்  பயன்படுத்த முன்வர மாட்டுறாங்க. ஆனால் மெண்டிஸ் இந்த டெக்னிக்க தனது லேட்டஸ்ட் ப்ராஜெக்ட்ல மிகவும் அற்புதமா பயன்படுத்தி இருக்கிறார்.


1917 படத்துல ஒன் ஷாட் டெக்னிக் எவ்வளவு அழக்கா ஹேண்டில்  பண்ணிருக்காருன்னு  படத்தை பார்த்தவங்களுக்கு தெரிஞ்சுருக்கும். விஷீவல் ரீதியா ரசிகர்களை கவர்ந்த இந்த டெக்னிக் இந்த படத்துல மட்டும் தான் இதுவரை பயன்படுத்தி இருக்காங்கலா,

ஆனால் இதுவரை எத்தனை படங்களில் இந்த டெக்கனிக்கை பயன்படுத்தி இருக்காங்க? இதை பற்றி தான் இந்த வீடியோவில் பார்க்கபோறோம், இந்த வீடியோ செம intresting ah இருக்கபோவுது, அதனால வீடியோவை கடைசி வரை பாருங்கள்..

10Russian Ark (2003)

St. Petersburg’s Winter Palace-ல் ரஷ்யன் ஆர்க் என்ற படத்தின் படப்பிடிப்பிக்காக 2000 ஆக்டர்ஸ்வும் அண்ட் அதற்கு மேற்பட்டவர்களும் தேவைப்பட்டாங்க, தொடர்ந்து 96 நிமிடங்கள் ஓடக்கூடியது இந்த மூவி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது.

இந்த மூவியில் இயக்குனர் அலெக்சாண்டர் சொகுரோவ் "ஒன்-ஷாட் டெக்னிக்" இந்த படத்துல பயன்படுத்த முடிவு செய்தார், ஏனெனில் அவருக்கு எடிட்டிங் செய்வதே சுத்தமாக பிடிக்காது. படம் எடுப்பதை அவர் ஒரு கலையாக பார்க்கல.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள குளிர்கால அரண்மனையின் அறைகள் மற்றும் தாழ்வாரங்கள் வழியாகச் சென்று பல்வேறு வரலாற்று நபர்களைச் சந்திக்கும் ஒரு பேயைப் படம் பின் தொடர்கிறது.

ஒரு நாள் படப்பிடிப்புக்கு தயாராவதற்கு நடிகர்கள் பல மாதங்களாக ஒத்திகை பார்க்க வேண்டியிருந்தது. மொத்தத்தில், 33 அறைகள் பயன்படுத்தப்பட்டன.

9Macbeth (1982)

ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் ஏராளமான தழுவல்கள் இருக்கு, ஆனால் ஹங்கேரிய திரைப்படத் தயாரிப்பாளர் பெலா டாரின் 1982-ல் எடுத்த மாக்பெத் என்ற மூவி ஷேக்ஸ்பியரின் படைப்பிற்கு விஷுவலா வித்தியாசமான ஒரு கோணத்தை கொடுத்தது.

இந்த மூவி இரண்டு ஷாட்களாக எடுத்து ஒரே டேக்கில் எடுக்கப்பட்டத போல ரெண்டையும் இணைச்சுருப்பாங்க.

கேமராவும் பாடியவிட (body)/பேஸை (face) அதிகமாக போக்கஸ் (focus) பண்ணுனதால மிக அருமையா பேசியல் எக்ஸ்ப்ரசன் கேப்ஸர் ஆகிருக்கும்.

இந்த மூவி ஷேக்ஸ்பியர் எழுதிய புதினத்தை தழுவி இருந்தாலும் வித்தியாசமான ஸ்டோரியோட தனித்துவமான பாணியில் எடுத்த டைரக்டரின் திறமை இந்த படத்தில் தெளிவாக தெரியுது, இதனால் மேக்பெத் மூவி ஜெஸ்ட் ஆவ்சம்.

8Utøya: July 22 (2018)

உட்டியா: ஜூலை 22 நோர்வேயில் ஜூலை 2011 இல் நடந்த உட்டா கோடைக்கால முகாம் படுகொலையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட மூவி, 

இயக்குனர் எரிக் பாப்பே இந்த படத்தை தயாரிப்பதற்கு முன்பு படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை மிகவும் ரியாலிஸ்டிக்கா கொடுப்பதற்காக சர்வைவ் ஆன 40 பேரை இண்டெர்வியூ எடுத்திருக்கிறார்.

72 நிமிடங்கள் தொடர்ந்த ஒரு தீவிரவாத தாக்குதலில் மாட்டிக்கொண்ட கஜா என்ற பெண்ணை பின் தொடர்ந்து தான் படம் நகரும்.இந்த மூவிய ஒரே ஷாட்டில் எடுத்துருப்பாங்க.

இந்த படம் முழுவதும் தீவிரவாதியை அருகில் காட்டாமல் தூரமாக காட்டி இருப்பார்கள், பாதிக்கப்பட்டவரின் ஐடிண்டிட்டிய பாதுகாக்க பல கேரக்டர்ஸ் கற்பனையா உருவாக்கி இருப்பாங்க. உண்மையான தாக்குதலை நிகழ்த்தியவர் ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவிக் இவர் தற்போது சிறையில் உள்ளார்.


7Rope (1948)

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஆல்பிரட் ஹிட்ச்காக் லாங் ஷாட்டின் முன்னோடியாக இருக்கிறார். அவருடைய சிறந்த படங்களில் ரோப் என்ற படமும் ஒன்று. இவர் தனித்தனியா 10 நிமிட ஷாட்டாக எடுத்து காட்சிபடுத்தி இருப்பார். 

ஏன் அவர் தொடர்ந்து ஒரே ஷாட்டாக எடுக்காமல் 10 10 நிமிடமாக மட்டுமே எடுத்தார்னா அந்த காலத்தில் அவர் பயன்படுத்திய 35 mm கேமராவின் கெபாசிட்டியே அவ்வளவுதான்.

இருந்தாலும், படத்தின் எந்த ஒரு காட்சியிலும் கட் இருப்பத உங்களால நோட்சிஸே பண்ண முடியாது. 1940 களின் நம்பமுடியாத சாதனையை படைக்க இந்த படத்திற்கு வெறும் 10 ஷாட்கள் மட்டும் தான் தேவைப்பட்டது.

மேலும், இந்த படத்தின் கதையை சரியாக கேப்ஸர் செய்வதற்கு ஒன் ஷாட் டெக்னிக் தான் சிறந்தது என ஹிட்ச்காக் ஒருமுறை கூறி இருந்தார். ரோப் மூவி இவரின் முதல் டெக்னோ கலர் மூவியாகும். 

இந்த படத்தின் ப்ளாட் (plot) மிகவும் சுவார்ஸ்யமானது. இரண்டு இளைஞர்கள் தங்களுடைய பழைய ஹார்வர்ட் யூனிவர்சிட்டி க்ளாஸ்மெட்டை விளையாட்டுத்தனமாக கொல்ல முயற்சி செய்கிறார்கள். அவர்களால் இந்த கொலை சரியாக செய்ய முடிந்ததா என்பது தான் இந்த மூவியின் கதை.


6Time Code (2000)

ஒன் ஷாட் போதாது என்பதை போல டைரக்டர் மைக் ஃபிகிஸ் டைம் கோட் படத்திற்காக 4 ஷாட்களை எடுத்து அவைகளை ஒரே ஸ்க்ரீன்ல ஸ்ப்ளிட் பண்ணி காண்பித்து இருப்பார்.

அந்த 4 காட்சிகளும் ஒரே நேரத்தில் 93 நிமிடங்கள் ஓடும். என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர் புரிந்துக்கொள்வதற்காக அந்த காட்சிகளின் ஆடியோ கதைக்கு ஏற்றாற்போல் ஏறவும் இறக்கவும் செய்யும்.

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான தயாரிப்புகளைச் செய்யும்போது இந்த படம் பலரைப் பின்தொடர்கிறது. 

இது ஒரு திரைப்படத்தைப் பற்றிய திரைப்படம் மற்றும் இது அற்புதமான திரைப்பட நுட்பங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. 

ஒரே நேரத்தில் நான்கு ஸ்கிரீன்களை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு கடினமாக இருந்தாலும், இது ஒரு சிறந்த படைப்பு.

No comments

Powered by Blogger.