Header Ads

Top 5 Best Horror Films That are Actually Based on True Events in Tamil

உண்மையான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒரு திகிலூட்டும் படத்தை எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல, ஆனால் ஹாலிவுட் திரைப்படங்களில் இத்தகைய கதைகளை கையில் எடுப்பதற்கு காரணம் திகிலூட்டும் அனுபவத்தை கொடுப்பதற்கு மட்டுமில்லாமல் அதன் உண்மைத்தன்மை புரிய வைப்பதற்கும் தான். இதை நம்மால் மறுக்க முடியாது.

அந்த வகையில் இன்று நாம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 5 திகிலூட்டக்கூடிய படங்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

5.The Exorcist (1973)

சினிமா வரலாற்றிலேயே The Exorcist ஒரு முக்கியத்துவம் வாய்ந்த படமாக பார்க்கப்படுகிறது, மறைந்த வில்லியம் பீட்டர் ப்ளாட்டி என்ற இயக்குனரால் இயக்கப்பட்ட இந்த படம் பல பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்ட்டுகள பல வருடங்களாக தன் வசம் வைத்துள்ளது.

சாத்தானின் பிடியில் மாட்டிக்கொண்ட ஒரு 12 வயது சிறுமியை இரண்டு Priest-களுடன் சேர்ந்து எக்ஸாரிஷம் (Exorcism) மூலம் காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு தாயின் கதை தான் The Exorcist, இந்த படம் 1971-ம் ப்ளாட்டி அவர்களால் எழுதப்பட்டு இதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்த நாவலில் 11 வயது சிறுமிக்குத்தான் பேய் பிடித்திருக்கும்.

அடையாளம் தெரியாத 13 வயது பையனால் நிகழ்த்தப்பட்ட எக்ஸாரிஷம் என்ற உண்மை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு அதன் அடிப்படையில் எழுத்தப்பட்டது தான் இந்த நாவல். இந்த எக்ஸாரிஷத்தை நேரில் பார்த்த 20-க்கும் மேற்பட்டவர்கள் தான் அங்கு நடந்த மோசமான சம்பவங்களுக்கு சாட்சி.

அதே நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் அன்று வாழ்க்கையின் மோசமான நாளாகவும் அமைந்தது, ஏனென்றால் அந்த அளவிற்கு அவர்கள் அங்கு நடந்த சம்பவங்களால் பயந்திருந்தனர். அங்கு என்ன நடந்தது என்பதை பற்றிய அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்த காரணத்தினால் தான் அந்த சம்பவத்தை பற்றி புத்தகமும் எழுத்தப்பட்டது, படமும் எடுக்கப்பட்டது.

4.The Amityville Horror (1979)

அனைவராலும் அறியப்பட்ட ஒரு அமானுஸ்யமான வழக்கு, இது நியூயார்க் நகரில் உள்ள ஒரு வீட்டை பற்றியது, நியூயார்க் நகரில் இருந்து வெறும் 50 மைல்களில் அமைந்துள்ள நீளமான நகரத்தீவுதான் அமிட்டிவில்லே.

அமிட்டிவில்லே அதிகமான டட்சு காலனி வீடுகளை கொண்ட இடம். 1970-களில் அமிட்டிவில்லேயில் நடந்த திகிலூட்டும் சம்பவங்கள் அதன் பிறகு அந்த இடத்தை அமானுஸ்யங்கள் நிறைந்த இடமாக மாற்றியுள்ளது. அங்கு நடந்த கற்பனை செய்ய முடியாத சம்பவங்கள் தான் 1977-ல் ஒரு நாவல் உருவாக்கப்பட்டதுக்கு காரணமாக அமைந்தது.

ஜெய் அன்சன் எழுதிய அமிட்டிவில் ஹாரர் ஒரு உண்மைக் கதை, இந்த புத்தகம் 112 ஓஷன் அவென்யூவில் உள்ள வீட்டைப் பற்றி பேசுகிறது, அதில் பிரபலமற்ற ரொனால்ட் டிஃபியோ ஜூனியர், அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்றுள்ளார்.

இந்த கொடூரமான சம்பவங்கள் நடந்து பல வருடங்கள் கழித்து லூட்ஸ் பேமி அந்த வீட்டை வாங்கினார்கள், ஆனால் கொஞ்ச நாட்களிலேயே அந்த வீட்டில் நடந்த அமானுஸ்யமான சம்பவங்களை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர், அதனால பயந்து லூட்ஸ் பேமி அடுத்த 28-டே நாட்களில் அந்த வீட்டை முழுவதுமாக காலி செய்து சென்றுவிட்டனர்.

ஆனால் இதில் நீங்கள் ஒன்றை கவனிக்க மறந்துருப்பீர்கள், டிஃபியோ ஏன் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றார், இதற்கான பதில் பலகட்ட விசாரனைக்கு பின் தான் தெரியவந்தது, அந்த வீட்டில் ஏற்கனவே பேய் இருந்துள்ளது, அந்த பேயினால் பாதிக்கப்பட்ட டிஃபியோ அதன் தூண்டுதலால் தான் தன்னோட குடும்பத்தையே கொன்றுள்ளார். இந்த சம்பவத்தை வைத்து பல படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டுள்ளன.

3.The Haunting in Connecticut (2009)

பீட்டர் கார்னிவெல்லால் எடுக்கப்பட்ட சைக்கலாஜிக்கல் ஹாரர் மூவியோட கதை, ஒருகாலத்தில் பிணக்காடுகளாக இருந்த இடத்தில் கட்டப்பட்ட வீட்டில் கேன்சரால் பாதிக்கப்பட்ட தன்னோட மகனின் சந்தோசத்திற்காக புதுவீட்டில் குடியேற வேண்டும் என்பதற்காக  ஒரு குடும்பம் குடியேறுகிறது. ஆனால் அங்கு நடக்கும் அமானுஸ்யங்களை உணர அவர்களுக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை.

அமானுஸ்யமான சக்திகளால் அவர்கள் மிக விரைவிலேயே அதிர்ச்சிகரமான சம்பவங்களையும் பல வன்முறை சம்பவங்களையும் அந்த வீட்டில் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இந்த திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் 1980-களில் கார்மென் ஸ்னெடெக்கரின் குடும்பத்திற்கு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

In a dark place:The story of a true haunting என்ற நாவலின் ஆசிரியர் ரே ஹார்டென் தனது நாவலில் ஸ்னெடெக்கரின் குடும்பம் சந்தித்த திகிலூட்டும் அனுபவங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். அந்த நாவல் அந்த பேய்களின் கோர முகத்தையும், அமானுஸ்யமான நடவடிக்கைகளையும் கூறுகிறது. இந்த நாவலின் அடிப்படையில் தான் The Haunting in Connecticut படம் எடுக்கப்பட்டது.

2.child's play (1988)

வாழ்க்கையில் ஒருமுறையாவது Play என்ற மூவியை பார்த்தாவது அல்லது கேட்டாவது இருப்பீர்கள், 1988-ல் வெளியான இந்த படம் ஒரு சீரியல் கில்லரோட ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட child's doll Chucky-யை பற்றியது. இந்த பொம்மை தன் வழியில் வரும் அனைவரையும் கொன்றுவிடும்.

"நல்லா கதை அளக்காத எங்கையாவது ஒரு பொம்மைக்கு உயிர் வந்து மனிதர்களை கொல்லுமா" அப்படினு உங்கள் உள்மனம் கேட்கலாம், ஆனால் இந்த chucky doll உண்மையில் ராபெர்ட் என்ற பொம்மையின் inspiration.

ராபெர்ட் ஒரு Haunted Doll, இந்த பொம்மையில் இருந்து வரும் சத்தம் சாதாரணமாக சாதாரண பொம்மைகளில் இருந்து வரும் சப்தங்கள் போல இருக்காது, அதற்கு மேலாக அந்த சத்தம் உங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும்.

அந்த பொம்மையை வைத்திருந்த பையன் யூஜீனோட பெற்றோர்கள் தனது மகன் அந்த பொம்மையோட பேசுவது பார்த்திருக்கிறார்கள். அவர்களின் வீட்டில் அமானுஸ்யமான விஷயங்கள் அடிக்கடி நடந்துருக்கிறது. சில நேரத்தில் இவர்கள் தூங்கும் போது ராபெர்ட் பொம்மை வீட்டிற்குள் நடந்து சுத்தி திரிவதையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

1.The Exorcism of Emily Rose (2005)

முடி நட்டுகொள்ளும் அளவிற்கு பயத்தை கொடுக்க கூடிய ஒரு ஹாரர் மூவி தான் The Exorcism of Emily RoseScott Derrickson இயக்கிய இந்த படத்தில் பேய் பிடித்த பெண்ணான எமிலி என்ற கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார் Jennifer Carpenter. அதேநேரத்தில் இந்த படத்தின் கதை எமிலியின் இறப்பிற்க்கு காரணமான ஒரு Priest-ஐ பற்றியும் பேசுகிறது.

The Exorcism of Emily Rose என்ற படம் உண்மையில் ஒரு ஜெர்மன் பெண்ணான Annalisa Michel என்ற பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அவளுடைய வாழ்க்கையில் வந்த கற்பனையான உருவம் அந்த எக்ஸாரிஸத்தில் அவள் இறக்கும் போதே அதுவும் இறந்துவிட்டது.

இறுதியில் மிக்கேல் ஊட்டச்சத்து குறைபாடுடைய மற்றும் கடுமையான நீரழிவு நோய் உடைய பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பெண் கவனக்குறைவால் இறந்ததால் அந்த Priest-யையும் மிக்கேலின் பெற்றோரையும் கைது செய்யப்பட்டு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை அடைத்தனர்.

சில ரிப்போர்ட்ஸ் கை, கால் வலிப்பினால் தான் மிக்கேல் இறந்தால் என்று கூறினாலும் அவளின் இறப்பிற்கு அமானுஸ்யமான ஆவிதான் காரணம் என்று இன்றும் மக்கள் கூறுகின்றனர்.


No comments

Powered by Blogger.