Header Ads

make me shudder 2

 படத்தோட ஒபனிங்க சீன்ல நிக்கையும் அவனோட ப்ரண்ட்ஸையும் காட்டுறாங்க, இவங்க ஏதோ ஒரு விசயத்த பத்தி தீவிரமா டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க அப்படினு தான்  நானும் நினைச்சேன், அப்பறம் தான் தெரிய வருது இவனுங்க ஒவ்வொருத்தவனும் நம்மள மாதிரி பல சப்ஜெக்ட்ல பெயில் ஆகி எப்படிறா இந்த வருசம் பாஸாகுறது அப்படினு ஆளுக்காளு புலம்பிக்கிட்டு இருக்கானுங்க அப்படினு, இதுல சில பேர எக்ஸாமே எழுதவிடலயாம், அந்த அளவுக்கு சேட்டை பண்ணிருக்காங்கனா பாத்துக்கங்களேன். அப்ப எப்படிடா இந்த வருசம் பாஸாகுறது அப்படினு ப்யூவும் கேட்க, அதுக்கு நம்ம பயபுள்ள ஆயிலும்,”எனக்கு ஒரு ப்ரண்டு இருக்கான், அவன் ஒரு புத்த மத கோவிகுக்கு போய் நான் வெளிநாடுக்கு போய் படிக்கனும் அப்படினு வேண்டிக்கிட்டான், அவன் வேண்டிக்கிட்டது உண்மையிலையே நடந்துருச்சு”அப்படினு சொல்றான்.

 

இதைகேட்ட நிக்கும்,”அந்த இடம் எங்க இருக்கு” அப்படினு ஆர்வமா கேட்க, ஏன்டா கேட்கிற, நீயும் அங்க போக போறியா அப்படினு ப்யூவும் கேட்கிறான், அதுக்கு நிக்கும்,”நான் போலடா, சும்ம கேட்டேன்” அப்படினு சொல்றான், ஆனா இவனுங்க எல்லோரும் அங்க போய் வேண்டிக்கலாம் அப்படினு தான் நினைக்கிறாங்க, அப்ப நிக் நிக் அப்படினு ஜாம் அப்படிங்கிற இவங்களோட ஒரு ப்ரண்டு, ஜேம்ஸ் கொடுத்ததா சொல்லி அவனோட விக்க கொடுத்துட்டு, அவன் திடீர்னு வெளிநாடு போய்ட்டான், அப்படினு சொல்றான். இதை கேட்ட மத்தவங்களும் எப்ப போனான், ஏன் போனான், எதுக்கு போனான், எப்ப திரும்பி வருவான் அப்படினு மாத்தி மாத்தி கேல்வி கேட்க எல்லாத்தையும் ஏன்ட என்னைட்டையே கேட்கிறீங்க, போன் இருக்குல, போன பண்ணி அவன்டையே கேளுங்கடா அப்படினு சொல்லிடுறான்.

 

அடுத்து அவங்க எல்லோரும் ஏதோ ஒரு ப்ளானோட அங்கிருந்து கிளம்பும் போது, திடீர்னு டோங்க் அப்படிங்கிற ஒரு பையன் நானும் M 6/6 க்ளாஸ்ல படிக்கிற உங்களோட ப்ரண்டு தான், நானும் உங்க கூட தான் வருவேன் அப்படினு சொல்றான், இதைகேட்ட நிக்கும், இவன் யாருடா கோமாளி, நாங்க M 6/5 க்ளாஸ்டா, நீ யாருனே எங்களுக்கு தெரியலயே அப்படினு சொல்லியும் அவன் நான் உங்க கூடவே தான் வருவேன் அப்படினு அடம் பிடிக்கவும், டே, ஆடு தானா வந்து தலைய கொடுக்குது அவனையும் நம்ம டீமுல சேர்த்துக்கோங்கடா அப்படினு அவனையும் கூப்பிட்டுக்கிட்டு கிளம்புறாங்க. அப்படியே படத்தோட டைட்டில் போட்டு படத்த ஒபன் பண்ணுறாங்க.

 

அடுத்த சீன்ல நடுராத்தி யாரும் இல்லாத சமயத்துல நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் அந்த கோவிலுக்கு வராங்க, வரும் போதே, ஆயில் சொன்ன அவனோட ப்ரண்டையும் கூட்டுட்டு வராங்க, அவனோட பேரு கயோவா, அவனும் தான் எப்படி வேண்டிக்கிட்டேன், எப்படி அந்த மேஜிக் நடந்துச்சு அப்படினு சொல்லி உசிப்பேத்திக்கிட்டே வரான், அவங்களும் கிட்ட வந்து பார்க்கிறாங்க, அங்க இருக்கிறது மே நாக் அப்படிங்கிற ஒரு அர்பன் லெஜெண்டோட சன்னதி.

மே நாக் அப்படிங்கிறது நமக்கு வேணாம் வெறும் வார்த்தையா இருக்கலாம், ஆனா 100 வருசத்துக்கு முன்னால தாய்லாந்து மக்கள குறிப்பா இந்த கிராம மக்களையே அலற விட்ட ஒரு பேரு மே நாக், இதை பத்தி தெரியாத நம்ம பயபுள்ள நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் என்ன என்ன அலுச்சாட்டியம் பண்ண போறாங்க அப்படிங்கிறத காமெடியா அப்படியே செம ஹாரர்ரா சொன்ன படம் தான் மேக் மீ சடர் பார்ட் 2, இந்த படத்தோட பர்ஸ்ட் பார்ட் நம்ம சேனல்ல ஏற்கனவே அப்லோட் பண்னிருக்கோம், அந்த வீடியோட லிங்க டிஸ்க்ரப்சன்ல கொடுத்திருக்கோம் செக் பண்ணி பாருங்க, நல்லா இருந்த கமெண்ட் பண்ணுங்க, ஒரு காலத்துல ஒரு ஊரையே மிரள விட்ட மே நாக் அப்படிங்கிற ஒரு லேடியோட ஆவிக்கு எப்படி கோவில் எல்லாம் கட்டினாங்க, அப்படி என்னதான் 100 வருசதுக்கு முன்னால நடந்துச்சு, அதை இவனுங்க எப்படி கண்டுபிடிக்க போறாங்க அப்படிங்கிறத வாங்க பார்க்கலாம்.

 

இந்த படத்தோட கதைக்குள்ள போறதுக்கு முன்னால எங்க சேனலுக்கு இப்ப தான் நீங்க புதுஷா வந்திருக்கீங்க அப்படினா உடனே சப்ஸ்க்ரை பண்ணிக்கோங்க, மறந்திடாம பக்கத்துல வர பெல் பட்டன அழுத்தி ஆல் ஆப்சன செலக்ட் பண்ணிக்கோங்க, அப்படியே சோசியல் மீடியாவுலையும் பாலோவ் பண்ணிக்கோங்க.

 

அந்த இடத்துக்கு வந்த உடனே நிக்கும் மே நாக்குக்கிட்ட வேண்டிக்க வழக்கம் போல அங்க நெறைய பேர் இருந்தும் ப்யூவ போய் ஊது பத்திய எடுத்துட்டு வர சொல்றான், இதைகேட்ட ப்யூவும் எப்போதுமே என்னையையே அனுப்புறியேட அப்படினு புலம்பி தள்ளிக்கிட்டே பயந்து படியே அத எடுக்க போறான், ஆனா அங்க இவனுங்களுக்கு முன்னாலையே ஜேம்ஸ் வந்து பயந்தபடியே வேண்டிக்கிட்டு இருக்கான், இதை பார்த்த ப்யூவும் வேற யாரோ அப்படினு நினைச்சு பயந்து ஓடுறம்னு ஒரு கம்பத்துல முட்டி கீழ விழுந்திடுறான், இந்த சவுண்ட கேட்டு அங்க வந்த நிக்கும் மத்தவங்களும் ஜேம்ஸ பார்த்து பேய் அப்படினு நினைச்சு பயந்து அலற ஆரம்பிக்குறாங்க.

 

அப்பதான் அவங்களுக்கு ஜேம்ஸும் தங்கள விட அதிக சப்ஜெக்ட் பெயில் ஆகிறுக்கான் அப்படினும் அவனும் இங்க வேண்டிக்கத்தான் வந்திருக்கான் அப்படினும் ஜேம்ஸும் காலையிலையே வெளிநாடு போய்ட்டான் அப்படினு சொன்னதும் ஜாம கலாய்க்க சும்மா ஒரு காமெடிக்கா சொன்னத சீரிஸா எடுத்துக்கிட்டு தங்ககிட்ட வந்து ஜாம் சொல்லிருக்கான் அப்படிங்கிறதும் இவங்களுக்கு புரியுது. ஒருவழியா இவங்களோட கலாட்டா எல்லாம் சரியான அப்பறம் அங்க ஊதிபத்தி இருக்கிறத பார்த்த நிக்கும் அதை டக்குனு எடுக்க, அதனால அங்க இருந்த மே நாக்கோட போட்டோ  கீழ விழுந்து உடைய, இதனால எதாவது மறுபடியும் பிரச்சனை வந்திடுமோ அப்படினு எல்லோருமே பயப்பிட ஆரம்பிக்குறாங்க.

 

இதை பத்தி கவல படாத நிக்கும் அவங்க எல்லோரையும் கூப்பிட்டுக்கிட்டு மே நாக்கிட்ட வேண்டிக்க ஆரம்பிக்குறான், எல்லோரும் இங்க எதுக்கா வந்திருக்காங்க, எப்படியாவது இந்த வருசம் ஆல் பாஸ் ஆகிடனும் அப்படினு வேண்டிக்கத்தானே வந்திருக்காங்க, ஆனா அலும்பு பிடிச்ச நிக் மட்டும், “மே நாக், நீங்க இருக்கிறது உண்மையா , நெறையா பேர் இங்க வந்திட்டு போறத பார்த்திருக்கேன், அவங்க வேண்டிக்கிட்டது எல்லாம் நடந்திருக்கு, என்னோட வேண்டுதல் என்னன உங்கள நேர்ல பார்க்கனும், எங்க முன்னாடி வாங்க அப்படினு திரும்ப திரும்ப வேண்டிக்கிட்டு இருக்கும் போது, அங்க இடியும் மின்னலும் அடிக்க ஆரம்பிக்குது, இதை பார்த்து அவனோட ப்ரண்ட்ஸ்க்கு பீதி கிளம்புது.

 

அவங்களும் நிக்க எழுப்பி எழுப்பி பார்க்கிறாங்க, ஆனா அவன ஏதோ ஒன்னு தள்ளி விட்ட மாதிரி கீழ விழுந்து மயங்கிடுறான், இவங்களும் ரொம்ப நேரம் எழுப்பின அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு டக்குனு முழிச்ச நிக்கும் கொஞ்சம் கூட யோசிக்காம எல்லோரையும் என் கூட வாங்க அப்படினு கூப்பிடுறான், அவங்களும் கொஞ்சம் தயங்கினாலும் வழக்கம் போல அவன் கூப்பிட்ட உடனே பின்னாலையே போறாங்க, அடுத்து அவனும் அதுல தான் போக போறோம் அப்படினு ஒரு இடத்த காட்ட அங்க ஒரு போட் யாருமே இல்லாம தான மிதந்து வந்துக்கிட்டு இருக்கு, இதை எல்லோரும் பார்த்து பயப்பிடும் போது நிக் மட்டும் அது எப்படா கிட்ட வரும் அப்படினு ஆர்வமா இருக்கான்.

 

நிக்கும் அது கிட்ட வந்த உடனே அதுல ஏறி பியூவையும் ஜேம்ஸையும் தன்னோட வர சொல்லி கூப்பிட அவனுங்களோ இப்படி தான் ஏற்கனவே உன்னைய நம்பி வந்ததுக்கு எங்கள பேய்கிட்ட மாட்டிவிட்டு மரண பயத்த காட்டிட்டு, இந்த முறை நீ என்ன கூப்பிட்டாலும் உன் கூட வர முடியாதுட அப்படினு சொல்லி அங்கிருந்து கிளம்ப, நிக்கும் மத்த பசங்கள எப்படியாவது தன் கூட துணைக்கு கூட்டிட்டு போகனும் அப்படினு என்ன என்னமோ பேசி பிட்டு போட்டு பார்க்கிறான், ஆனா அவனுங்களும் நாங்களும் வர முடியாது அப்படினு சொல்லிட்டு கிளம்பிடுறாங்க.

 

அதேநேரத்துல இங்க ஜேம்ஸும் ப்யூகிட்ட,”டே, ப்யூ இனிமே உனக்கு நான் எனக்கு நீ, நம்ம ரெண்டு பேர் மட்டும் தான் பெஸ்ட் ப்ரண்ட்ஸ், நான் இனிமே உன்னைய விட்டு போகவே மாட்டேன் டா அப்படினு சொல்லி வாய மூடிறதுக்குள்ள அங்க யாரோ ஒரு லேடி ஆடிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கவும் இதை பார்த்த ஜேம்ஸும் மிரண்டு அவன் கிட்ட எதையுமே சொல்லாம பின்னால வந்த அவனுங்கிட்ட விஷயத்த சொல்லிட்டு ஓடவும், அவனுங்களும் பயந்து ஓட ஆரம்பிக்குறாங்க,  அப்பதான் ப்யூவும் அங்க ஒரு லேடி இவன தொட வர மாதிரி இருக்கிறத பார்த்து,”அடேய் விட்டுட்டு போகமாட்டேன் அப்படினு சொல்லிட்டு இப்படி சொல்ல கொல்லாம ஓடி போய்ட்டியட அப்படினு நினைச்சுக்கிட்டு ஓட ஆரம்பிகுறான்.

 

ஆனா அந்த லேடி பேய் இல்ல, முதல்ல அது லேடியே இல்ல அது ஒரு ஸ்கூல் பொண்ணு, இவங்களும் இங்க சுத்தி பார்க்கத்தான் வந்திருக்காங்க, இந்த பசங்கள பார்த்த உடனே சும்மா பயமுறுத்தி பார்ப்போம் அப்படினு ட்ரை பண்ணிருக்கா போல, அடுத்து அந்த பொண்ணுங்களும் அங்கிருந்து கிளம்பிடுறாங்க, ஆனா இங்க பயந்து அலறிக்கிட்டு ஓடி வந்த ஜோம்ஸும் நிக்கிட்ட ப்யூவ்கிட்ட சொன்ன அதே டையலாக்க இவன் கிட்டையும் சொல்லிட்டு வேகமா அந்த படகுல ஏற மத்த பசங்களும் அந்த படகுல ஏறிக்கிட்டு இருக்கிற சமயத்துல ப்யூவும் வேகமா வந்து அந்த படகுல ஏறிக்கிறான், எல்லோரும் படகுல ஏறின அப்பறம் ரொம்ப நேரமா படகு அங்கையே இருக்கு, என்னடா படகு நகரவே மாட்டுது நிக்கும் திரும்பி பார்க்கும் போது எவனும் பெடல் போட்டு தள்ளாம இருக்கவும்,”டே என்னடா என்னைய மாதிரியே எல்லோரும் அமைதியா இருக்கீங்க, எவனாவது துடுப்பு போட்டு தள்ளுங்களேண்டா அப்படினு சொன்ன அப்பறம் தான் அவனுங்களும்  துடுப்பு போடுறாங்க.

 

ஒருவழியா படகும் நகர ஆரம்பிக்குது, இவங்க எல்லோரும் எங்க போறோம் அப்படினு தெரியாம நிக் கூடவே போறாங்க, ஏன்னா அவனுக்கே எங்க நாம போறோம் அப்படினு சரியா தெரியல, ஏதோ ஒன்னு நிக்க எங்கையோ தானா இழுத்திட்டு போற மாதிரி இருக்கு, ஆனா அந்த இடமே ரொம்ப அமைதியா பயத்த ஏற்படுத்திற மாதிரி இருக்கு, போகும் போதே அமானுஸ்யமான சில விசயங்கள் எல்லாம் நடக்க ஆரம்பிக்குது, கடைசியா அந்த ஆறுல இருக்கிற ஒரு வீட்டுக்கு வந்து சேர்றாங்க, ஆனா அந்த வீடு யாரோடது அப்படினு இவங்களுக்கு தெரியல, எப்படியோ கரைக்கு ஏறி வந்த அவங்க உள்ள போலாம இல்ல வேணாம அப்படினு யோசிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்காங்க, அடுத்து கொஞ்சம் கொஞ்சமா உள்ள போன அவங்க அங்க இருக்கிற ஒரு வீட்டுல யாரோ தங்கி இருக்கிற மாதிரி இருக்கிறத பார்க்கிறாங்க.

 

அந்த வீட்டோட எண்ட்ரன்ஸ கண்டுபிடிச்ச உடனே நிக்கும் வாங்கடா மேல போலம் அப்படினு சொல்லிட்டு மேல போகலாம் அப்படினு ட்ரை பண்ணுறான், ஆனா ஜேம்ஸும் பியூவும் வேணாடா போக வேணாம் அப்படினு தடுக்கிறாங்க, இருந்தாலும் நிக்கும் அவங்களோட பேச்ச கேட்காம, வேகமா மேல போக படியில கால வைக்கிறான், உடனே இடியும் மின்னமும் அடிக்க ஆரம்பிக்குது, இதை பார்த்து மத்தவங்க பயந்து நடுங்கிக்கிட்டு இருக்கும் போதோ நிக்கோ அதுக்குள்ள மேல ஏறி போய்டுறான், போனவன் சும்ம இருப்பானா இவனுங்களையும் வர சொல்லவும் வேற வழியில்லாம பயத்துல நடுங்கிக்கிட்டே ஒவ்வொருத்தவனா மேல ஏறி போறாங்க.

 

அடுத்து அவங்களும் உள்ள போக ட்ரை பண்ணும் போது திடீர்னு ஏதோ ஒரு லேடி உள்ள இருந்து கத்துற மாதிரி சவுண்ட் கேட்கவும் இவனுங்க ஒவ்வொருத்தவனுக்கும் அல்லு விட்டு போய்டுது, ஆனா நிக்கும் இந்த சவுண்ட கண்டுக்க கூட மாட்டுறான், வழக்கம் போல நிக்கிட்ட டே உள்ள போக வேண்டாண்டா அப்படினு ப்யூவையும் ஜேம்ஸையும் சொல்ல சொல்ல கேட்காம அவனுங்கள வச்சே கதவ தொறக்க வைக்கிறான், ஆனா உள்ள ஒரு லேடி பிரசவ வலியில கத்திக்கிட்டு இருக்கிறத பார்த்த நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் அந்த லேடிக்கு ஹெல்ப் பண்ணலாம் அப்படினு ட்ரை பண்ணுறாங்க, இவனுகளுக்கு பிரசவம் பார்க்க தெரியுதோ தெரியலையோ ஏதோ ட்ரை பண்ணுறாங்க, ஒரு பக்கம் சில பேர் சுடு தண்ணி ரெடி பண்ண ஆரம்பிக்குறாங்க, இன்னொரு பக்கம் இவனுங்க இந்த லேடிக்கு பிரசவம் பார்க்க ட்ரை பண்ணுறாங்க, ஆனா அதுக்குள்ள அந்த லேடி இறந்து போன மாதிரி தெரியுது, இதனால இவங்களும் பயந்து அங்கிருந்து ஓட ஆரம்பிக்கும் போதோ, அந்த லேடியோட சொந்தக்கார பொண்ணு அப்ப தான் பிரசவம் பார்க்கிற லேடிய கூட்டுட்டு வந்துக்கிட்டு இருக்கா. இதை பார்த்து இவங்களும் அவங்களுக்கு தெரியாம ஒரு இடத்துல போய் ஒளிஞ்சுக்கிறாங்க.

 

அந்த ரெண்டு லேடியும் மேல போன அப்பறம் தான் அந்த லேடி சாகல மயக்கமா இருந்திருக்கா அப்படிங்கிறது தெரிய வருது, இவ்வளவு நேரம் பிரசவ வலியால கத்திக்கிட்டு இருந்தது வேற யாருமே இல்ல, இவதான் தான் மே நாக். ஆனா இவங்க பிரசவம் பார்த்தும் மே நாக்கையும் அவளோட வயித்துல இருக்கிற குழந்தையையும் காப்பாத்த முடியல, அந்த லேடி இறந்து போய்ட்டா அப்படிங்கிறது தெரிஞ்ச உடனே நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் அங்க இருந்து எஸ்கேப் ஆக ஆரம்பிக்குறாங்க, ஆனா அவங்க துடுப்பு போட்டு அங்கிருந்து தப்பிக்க எவ்வளவு ட்ரை பண்ணினாலும் அவங்க திரும்ப திரும்ப அதே இடத்துக்குத்தான் வராங்க.

 

இதையெல்லாம் பார்த்த நிக், “அட போங்கடா” அப்படினு,” மே நாக் எங்கள இங்கிருந்து ஏன் போக விட மாட்டுறா, நீ உண்மையிலையே இருந்தா எங்க மேல எதாவது தூக்கி எறி, அப்பதான் நான் நம்புவேன் அப்படினு சொல்லி வாய மூடுறதுக்கு முன்னாலையே, அடி வாங்கவே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கிற ஜேம்ஸையும் ப்யூவையும் போட்டு பொளந்து கட்டுது, இதையெல்லாம் பார்த்தும் கூட அடங்காத நிக்,”இவ்வளவு தான் உன்னால முடியுமா” அப்படினு மே நாக்கையே வெறுப்பேத்துற மாதிரி கேட்கவும், திடீர்னு அந்த இடத்துல மட்டும் மழை பெய்ய ஆரம்பிக்குது, இதனால நிலை தடுமாறி எல்லோரும் தண்ணிக்குள்ள விழுந்திடுறாங்க, அப்படியே சீன் கட்டாகிடுது.

 

அடுத்த நாள் விடியவும் ஆரம்பிக்குது, அங்க நைட்டு தண்ணிக்குள்ள விழுந்த பசங்களையும் காணோம், அங்க இருந்த போட்டையும் காணோம், அப்ப தான் ஒரு லேடி பாட்டு பாடுற மாதிரி ஒரு குரல் கேட்குது, அந்த குரல் மே நாக்கோட குரல் தான், நைட்டு என்ன நடந்துச்சு அப்படினு தெரியல இப்ப மே நாக் உயிரோட பிறந்த தன் குழந்தைய தொட்டில்ல ஆட்டிக்கிட்டு இருக்கா, அங்க நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் மயங்கி கிடக்குறாங்க, அடுத்து மயக்கம் தெளிஞ்சு எழுந்த ஜேம்ஸும் திடீர்னு நைட்டு இறந்து போய்ட்டா அப்படினு நினைச்ச அந்த லேடி உயிரோட இருக்கிறத பார்த்து இவ பேயாதான் இருப்பா அப்படினு பயந்து அலறி எல்லோரையும் எழுப்புறேன் அப்படினு பேர்ல தெரியாம பொத்துனு கீழ விழுந்திடுறான்.

 

அடுத்து எழுந்த மத்தவங்களும் அந்த லேடிய பார்த்து பயந்து நடுங்குறாங்க, அப்பதான் இவங்களுக்கு இந்த லேடி தான் மே நாக் அப்படிங்கிறது தெரிய வருது, அதுக்கு அப்பறம் தான் அதிகமா பயப்பிட ஆரம்பிக்குறாங்க, ஆனா இவனுங்க பண்ணுற கலாட்டா எல்லாத்தையும் கொஞ்சம் கூட கண்டுக்காம மே நாக் அவங்க பாட்டுக்கு தன்னோட குழந்தைய ஆட்டிக்கிட்டு இருக்காங்க, இதை பார்த்த நிக்கும்,”மே நாக் நேத்து தான் நீங்க செத்து போய்டீங்கள்ல எப்படி இப்ப உயிரோட அப்படினு கேட்க அதுக்கு மே நாக்கும்,”நேத்து பிரசவம் பார்க்க வந்த லேடி என்னைய காப்பாத்திட்டாங்க் அப்படினு சொல்றா. சரி, எதுக்காக எங்கள இங்க வர வச்ச அப்படினு நிக்கும் கேட்க,”என்னோட ஹஸ்பெண்ட் பல மாசத்துக்கு முன்னால போர் வீரரா போருக்கு போனாரு, ஆனா இன்னவும் அவர் திரும்பி வரவே இல்ல, அதனால அவர்கிட்ட எனக்கு குழந்தை பிறந்துருக்கு அப்படினு சொல்லி அவர கூட்டுட்டு வரனும், அப்பதான் நீங்க வீட்டுக்கு போக முடியும் அப்படினு சொல்லிடுறா.

 

இதைகேட்ட ஆயிலும்,”இதை நான் எங்கையோ கேட்ட மாதிரி இருக்கே அப்படினு இன்னொருத்தவன் கிட்ட சொல்றான்,ஆனா நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் வேற வழியில்லாம அதை செய்ய ஒத்துக்கிறாங்க, அதனால அவங்ககிட்ட ஒரு மேப்பையும் கொடுத்திட்டு, என்னோட ஹஸ்பெண்ட் பேரு மேக், அவர் தாடி வச்சிருப்பாரு அப்படினு சொல்றா, இதையும் கேட்ட ஆயில்,”இதையும் நான் எங்கையோ கேள்வி பட்ட மாதிரி இருக்கே அப்படினு சொல்றான், இதை பார்த்த அவனோட ப்ரண்டும் டே, கொஞ்சம் நேரம் அமைதியா இருடா, உனக்கு மட்டும் எல்லாமே கேள்வி பட்ட மாதிரி தான் இருக்கும்,  அடுத்து மே நாக்கும் அவங்கள போருக்கு போற போர் வீரர்கள் மாதிரி ரெடி பண்ணி போர்களத்துக்கு அனுப்பி வைக்கிறா, ஆனா இவனுங்கள இந்த ஹெட் அப் பார்க்கவே செம்ம காமெடியா இருக்கு.

 

இங்க நிக்கும், அவனோட ரெண்டு பெஸ்ட் ப்ரண்ட்ஸ் ஜேம்ஸும் ப்யூவும் இவங்க கூட இன்னும் ரெண்டு பேரும் வந்திருக்காங்க, ரொம்ப நேரம் நடந்தும் இன்னவும் போர் நடக்கிற இடத்த இவங்களால கண்டுபிடிக்க முடியல, அப்ப, ஏதோ ஒன்னும் பறந்து வரத பார்த்திட்டு, என்னடா இது எரி நட்சத்திரமா அப்படினு இவனுங்களும் யோசுக்கிட்டு இருக்கும் போது, அது உண்மையிலையே ஒரு பார்ம் அப்படிங்கிறது அப்பறம் தான் அவங்களுக்கு தெரிய வருது, இவனுங்க தப்பிச்ச போதும் அப்படினு உயிர கையில பிடிச்சுக்கிட்டு ஒட ஆரம்புக்குறாங்க, அடுத்து நாம கண்டிப்பா மேக்க கண்டுபிடிச்சாகனும் அப்படினு இறந்து கிடந்த சோல்சர்ஸோட ட்ரெஸ போட்டுக்கிட்டு அந்த சண்டைக்கு நடுவுல தேட ஆரம்பிக்குறாங்க, ஆனா அது லேசுப்பட்ட காரியமில்ல அப்படிங்கிறத புரிஞ்சுக்கிட்ட நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும்,”முதல்ல அவங்க எல்லோரும் ஒருத்தவங்கள ஒருத்தவங்க சுட்டுக்கு சாகட்டும் அதுக்கப்பறம் நாம போய் தேடலாம் அப்படினு ஒளிஞ்சுக்கிறாங்க.

 

அடுத்த கொஞ்சம் நேரம் கழிச்சு மேக் தேட ஆரம்பிச்ச அவனுங்க, கடைசியா ஒரு தாடி வச்ச ஆள கண்டுபிடிக்கிறாங்க, ஆனா அங்க தாடி வச்சவங்க நெறையா பேர் இருக்கிறதால வேற வழியில்லாம தாடி வச்சிருக்கிற எல்லோரையும் மாட்டு வண்டியில அள்ளி போட்டுக்கிட்டு கிளம்புறாங்க, அப்படி இவங்க மாட்டி வண்டிய தள்ளிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கும் போது, ஒரு புத்த பிட்ஷீவ பார்த்திட்டு அவனையும் பேய் அப்படினு நினைச்சு பயப்பிட ஆரம்பிக்குறாங்க, இந்த நேரத்துல இப்படி உலவிக்கிட்டு இருந்தா யார் தான் பார்த்து பயப்படாம இருப்பாங்க, அடுத்து அங்க எல்லோரும் அடிபட்ட வீரர்களா இருக்கவும் அவங்கள கூட்டுக்கிட்டு தன்னோட இடத்துக்கு போன புத்த பிட்சூ அவங்களுக்கு மருந்து போட்டு சரி பண்ண ட்ரை பண்ணுறான்,, நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் அங்க இருக்கிறதுல யாரு மேக்கா இருக்கும் அப்படினு தெரியாம குழம்பி போய்கிட்டு இருக்கும் போது, அங்க வந்த பெரிய புத்த புட்சூவால தான் மேக் யாரு அப்படினு அவங்களுக்கு தெரிய வருது, அதனால அவர எழுப்பி விஷயத்த எல்லாம் சொல்றாங்க, அதேநேரத்துல இங்க கயோவா தான் வேண்டின படி எல்லாத்தையும் கொடுத்ததுக்கு மே நாக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கான், அப்பதான் அவங்கிட்ட மே நாக் தன்னோட ஹெஸ்பெண்ட் எந்த அளவுக்கு தன் மேல பாசம் வச்சிருக்காரு அப்படினு சொல்ல ஆரம்பிக்குறா.

 

கல்யாணம் பண்ணின புதுஷுல மே நாக் மேல ரொம்ப பாசம் வச்சிருந்த மேக் கொஞ்ச நாள்லையே போருக்கு மனசே இல்லாம மே நாக்க தனியா விட்டுட்டு கிளம்பிடுறான், அதுல இருந்து இது வரை நான் தனியாத்தான் இருக்கேன் அப்படினு சொல்றா மே நாக், ஆனா மத்த பசங்களோ இவங்க பேய இல்லையா அப்படினு கன்பார்ம் பண்ண காலுக்கு நடுவுல குனிஞ்சு திரும்ப திரும்ப பார்க்க ஆரம்பிக்குறாங்க, ஆனா இப்படி பார்த்த அந்த லேடி பேயா இருந்தா தெரிய மாட்டா அப்படிங்கிறது இவங்களோட நம்பிக்கை, இத சொன்னது வேற யாருமில்ல, நம்ம ஜேம்ஸ் தான், ஒருவேளை அவன் சொன்ன இந்த மெத்தட் பொய்யா இருக்கோமோ, பயபுள்ள நம்மள ஏமாத்திட்டான் போல அப்படினு இவனுங்களும் பேசிட்டு, எதுக்கு மறுபடியும் ஒரு முறை ட்ரை பண்ணி பார்ப்போம் அப்படினு காலுக்கு கீழ குனிஞ்சு பார்க்கிறாங்க, அங்க மே நாக்க காணோம்.

 

அதனால இவனுங்களும் பயந்து நடுங்கிறத பார்த்த கயோவா, இவனுங்க ஏன் பைத்தியக்காரன் மாதிரி கத்திக்கிட்டு இருக்காங்க அப்படினு பார்த்துக்கிட்டு இருக்கும் போது, மே நாக் உள்ள இருந்து வெளில வரா, இதை பார்த்து நாம நெனைச்சது தப்பு அப்படினு டக்குனு அமைதியாகிடுறாங்க அந்த பசங்க. அடுத்து உடம்பு சரியான மேக்க வீட்டுக்கு கூட்டுட்டு வராங்க நிக்கும் அவனோட் ப்ரண்ட்ஸும், ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணின மேக்கும் மே நாக்கும் அன்ப பரிமாறிக்கிறாங்க, அதோட வேகமா ரூம்குள்ளையும் போய்டுறாங்க, நம்ம குறும்புக்கார பசங்களும் நைஸா அவங்களோட ரூம எட்டி பார்க்க அங்க மேக் தன்னோட மனைவிய கட்டி பிடிச்சுக்கிட்டு இருக்கான், ஆனா இவனுங்க நல்லா கூர்ந்து கவனிச்ச அப்பறம் தான் தெரியுது, அது உயிரோட இருக்கிற மே நாக் இல்ல, அது இறந்து போன அவங்களோட பாடி அப்படினு. இதை பார்த்து மிரண்டு போன நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் இவ்வளவு நேரம் பேய் கூட தான் இருந்தமா அப்படினு பயப்பிட ஆரம்பிக்குறாங்க.

 

இது தான் சமயம் அப்படினு அங்கிருந்து தப்பிக்க ட்ரை பண்ணுறாங்க, ஆனா அங்க போட்ட காணோம் அப்படிங்கிறதால அந்த போட்ட தேடி கிராமத்துக்குள்ள போக ஆரம்பிக்கிறாங்க, ஆனா அந்த கிராமமே ரொம்ப அமைதியா யாருமே இல்லாத மாதிரி இருக்கு, அப்ப அங்க வந்த ஒரு லேடிக்கிட்ட,”ஆண்டி இந்த நேரத்துல எங்க போறிங்க அப்படினு கேட்க, அதுக்கு அவங்களும்,”மே நாக்கோட ஆவி தினமும் நைட்டு எங்கள பயமுறுத்திக்கிட்டு இருக்கு, நீங்களும் இங்க இருக்காதீங்க அப்படினு அந்த கிராமத்தைவிட்டே போய்டுறாங்க, அதேமாதிரி அந்த கிராமத்த சேர்ந்தவங்க நெறையா பேர் அந்த கிராமத்தையே காலி பண்ணி போய்க்கிட்டு இருக்காங்க, அப்ப அங்க இருக்கிற ஒரு வீட்டுக்கிட்ட போட் இருக்கிறத பார்த்துட்டு வேகமா அங்க போய் போட்டுல ஏறி கிளம்புறாங்க, ஆனா திடீர்னு மே நாக் ஒரு போட்டுல பக்கத்துல வந்து எங்க போறீங்க அப்படினு கேட்டுக்கவும் இவனுங்களும் பேய் அப்படினு கத்திக்கிட்டே அங்கிருந்து தப்பிக ட்ரை பண்ணுறாங்க.

 

அப்ப வீட்டுல இருந்து வெளில வரும் போது, மே நாக்குக்கு பிரவம் பார்த்த அந்த கிழவியும் அந்த இன்னொரு லேடியும் மே நாக்கோட ஆவிக்கு பயந்து வீட்டுக்கு வேற வழியில போறாங்க, அப்ப எதேச்சையா மேக்க மீட் பண்ணின அவங்க, மே நாக் உன்மையிலையே இறந்து போய்ட்டா அப்படிங்கிற உண்மைய போட்டு உடைச்சிடுறாங்க, ஆனா இதை நம்பாத மேக்கும் அவங்கள அடிக்க போக அதேநேரத்துல டக்குனு ஜன்னல தொறந்து மே நாக்கும் இவங்கள பார்க்க, இவங்களும் பயந்து அலறியடுச்சு ஓட ஆரம்பிக்குறாங்க.

 

ஆனா அந்த கிழவி வீட்டுக்கு வரும் போது, அங்க ஏற்கனவே மே நாக் வந்துருக்கா, இதை பார்த்து பயத்துல நெஞ்சு வலி வந்து செத்தே போய்டுறா அந்த கிழவி, இதை பார்த்து அழுதுக்கிட்டே ஓடி வந்த அந்த லேடி கால் தட்டிவிட்டு சாணியிலையே விழுந்துடுறா, அதேநேரத்துல இங்க மே நாக் பார்த்து பயந்த நம்ம நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் போட்ட கரைக்கு திருப்பி அங்கிருந்து தப்பிச்சு ஓடி வரும் போது, சாணியில விழுந்த அந்த லேடிய பார்த்து பயந்து அலற ஆரம்பிக்குறாங்க, ஆனா அவளோ நான் மனுசி தான் பேய்லாம் இல்லஅப்படினு சொல்லி அவங்களுக்கு புரிய வச்சுக்கிட்டு இருக்கும் போது, அங்க லேட்ட வந்த நிக்கோ வந்த வேகத்துல அது பேய் அப்படினு நினைச்சு அந்த லேடிய ஒரே உதைச்சிட்டு, வாங்க டா போவோம் அப்படினு ஓடும் போது குழந்தையோட போற மே நாக்க பார்த்திடுறாங்க.

 

இவங்கள பார்த்த மே நாக்கும்,”இனிமே என்னோட ஹஸ்பெண்ட்கிட்ட நான் இறந்து போனத சொன்னா நீங்க திரும்ப வீட்டுக்கு போக முடியாது அப்படினு சொல்லவும், இவங்களும் அமைதியா மே நாக்கோட வீட்டுக்கே கிளம்புறாங்க, அன்னக்கி நைட்டும் அங்கையே தூங்கிடுறாங்க, காலையில விடிஞ்ச உடனே எந்திருச்ச நிக்கும் தானா குழந்தையோட தொட்டில் ஆடிக்கிட்டு இருக்கிறத பார்த்து, வேகமா மத்தவங்களையும் எழுப்பிறான், அடுத்து அவங்களும் கிட்ட போய் பார்க்கும் போது, அங்க மே நாக்கோட அழகான குழந்தை இருக்கு, இதை அவங்களும் பார்த்துக்கிட்டு இருக்கும் போது திடீர்னு அந்த குழந்தையோட கை நீளமாகவும் பயந்து கத்துற சவுண்ட் கேட்டு அங்க வந்த மேக், ஏண்டா பேய் மாதிரி கத்திக்கிட்டு இருக்கீங்க அப்படினு கேட்கிறான்.

இவங்களும் உங்களோட குழந்தை தானா தொட்டில ஆட்டுச்சு அப்படினு சொல்றத அவனும் நம்ப மாட்டுறான், அதுக்கு அப்பறம் நேத்து நைட்டு புல்லா எங்க போனிங்க, அப்படினு அவன் கேட்டதுக்கு, அவங்களும் உண்மைய சொல்ல ட்ரை பண்ணும் போது கரெக்டா மே நாக்கும் அங்க வர, இவங்களும் பயந்துக்கிட்டு இங்க இருந்தோம் இல்லா அங்க இருந்தோம் அப்படினு உலற ஆரம்பிக்குறாங்க, அடுத்து மேக்கும், நேத்து நைட்டு என்னோட சொந்தக்கார கிழவி என்னோட ஒயிப் இறந்து போய்டத பொய் சொன்னாங்க, அவங்க சொன்னத நீங்க நம்புறீங்களா அப்படினு கேட்க, அதுக்கு இவனுங்களும் அவங்க சொன்னது உண்மைதான், உண்மைதான் அப்படினு சொல்றாங்க, ஆனா திடீர்னு மே நாக் திரும்பி என்னது அப்படினு கேட்கவும் இவனுங்களும் இல்ல இல்ல உண்மையில்ல உண்மையில்ல அப்படினு சொல்லிட்டு அசட்டு சிரிப்பு சிரிக்கிறாங்க.

 

அடுத்து மேக்கும் நான் காய்கறிகள பறிக்கிறதுக்கும், மீன் பிடிக்கவும் போறேன் யாரெல்லாம் என் கூட வரீங்க அப்படினு கேட்டவுடனே, ஒருத்தன் விடாம இங்க இருந்து போன போதும் அப்படினு நான் நான் வரேன் அப்படினு வேகமா கைய தூக்கிறாங்க. ஆனா அதுல சில பேர மட்டும் மே நாக் தடுத்து நீங்க போக வேணாம் நீங்க என்னோட குழந்தையோட விளையாடுங்க அப்படினு சொல்லிட்டு போய்டுறாங்க, இங்க மீன்பிடிச்சுக்கிட்டு இருக்கிற மேக்கிட்ட நிக்கும் மத்தவங்களும் உண்மைய நீ சொல்லி நீ சொல்லு அப்படினு மாத்தி சொல்லிக்கிட்டு அவன்கிட்ட சொல்லவே பயப்பிடுறாங்க, கடைசியா ஜேம்ஸ் மேக், உங்க ஒயிப், உங்க ஒயிப் அப்படினு இழுத்துக்கிட்டே இருக்கவும் மேக்கும் என்ன சொல்லு அப்படினு சொல்லவும், டக்குனு உங்க ஒயிப் வீட்டுல இருக்காங்க அப்படினு சொல்லிடுறான்.

 

இதை பார்த்த கயோவா, என்னட இப்படி பயப்பிடிறீங்க, இப்ப நான் உண்மைய சொல்றேன் பாரு, அப்படினு மேக் கூப்பிட்டு உண்மைய சொல்லலாம் அப்படினு நினைச்சுக்கும் போதே அவனுக்கும் பயம் வந்திடுச்சு, அதனால இங்க பாருங்க இங்க மீன் நெறையா இருக்கு அப்படினு சொல்லி சமாளிச்சிடுறான், இதை பார்த்த பியூ, உண்மைய சொல்ற மூஞ்ச பாரு அப்படினு அவன் உதைச்சு தள்ளிடுறான், ஆனா அப்ப அங்க வந்த அந்த ஊர சேர்ந்த ஒருத்தன், மேக்கிட்ட வந்து உன்னோட ஒயிப்பு பிரசவம் பார்த்த அந்த கிழவி இறந்து போய்ட்டா அப்படினும் அதுக்கு காரணம் உன்னோட ஒயிப் தான், உன்னோட ஒயிப் இறந்து போய்ட்டா அப்படினும் சொல்லவும் கோவமா அவன் அடிக்க போன அவன் அவன அடிப்பான் அப்படினு பார்த்தா வாயிலையே பொக்கு பொக்குனு திரும்ப திரும்ப அடி வாங்கிட்டு வரான்.

 

அந்த ஆளு உண்மைய சொன்ன அப்பறம் தான் தைரியம் வந்து இவனுங்க மேக்கிட்ட உண்மைய சொல்ல ஆரம்பிக்குறாங்க, ஆனா இதனால கோவமான மேக்கோ தான் வாங்கின அடிய விட இவனுங்களுக்கு அதிகமா பொக்கு பொக்குனு திருப்பி கொடுக்கிறான். அதனால நாங்க இன்னக்கி நைட்டு மே நாக் பேய்தான் அப்படிங்கிறத நிரூப்பிக்கிறோம் அப்படினு சொல்றாங்க, அடுத்த சீன்ல மேக் நாக்கோட வீட்டுல ஓபன் ஆகுது, மேக்கும் தீடீர்னு புதுஷா ஒரு ஹேர் ஸ்டெயில்ல மாத்தி இருக்கிறத பார்த்த மே நாக்கும் சிரிக்கிறா, கடைசியா, மேக்கும் நான் கீழ போய் மீன ப்ரை பண்ணிட்டு வரேன் அப்படினு சொல்லிட்டு கிளம்பவும், இவனுங்களும் பின்னாலையே போய் கீழ ஒளிஞ்சுக்கிறாங்க, ஆனா மே நாக் ப்யூவும் ஜேம்ஸையும் மட்டும் எனக்கு சமைக்க ஹெல்ப் பண்ணுங்க அப்படினு அங்கேயே இருக்க வச்சிடுறா, அடுத்து இவங்களோட ப்ளான் படி மே நாக் பேய் தான் அப்படிங்கிறத நிரூபிக்க ட்ரை பண்ணுறாங்க, ஆனா இதை மேக் பார்க்கிறதுக்கு முன்னால பயபுள்ள எதுலையோ முட்டு மயங்கிடுறான், அதனால இவங்களோட இந்த ப்ளான் சொதப்பிடுச்சு, ஆனா மேக்குக்கு மே நாக் மேல சந்தேகம் வந்திருச்சு, இது இப்ப வந்த சந்தேகம் இல்ல, இன்னக்கி காலையிலையே இவனோட வீட்டுக்கு இவன குணப்படுதின அந்த புத்த பிட்சூ வந்திருக்காரு.

 

அவரு மேக்கிட்ட,”உன்னோட வீட்டுல ஒரு மர்மம் இருக்கு, உனக்கு உண்மைய தெரிஞ்சுக்கனும் அப்படினா புத்தர்கிட்ட வேண்டிக்கிட்டு உன்னோட காலுக்கு நடுவுல குனிஞ்சு பாரு அப்படினு சொல்லிட்டு போய்ருக்காரு, அதனால இவனும் அதே மாதிரி பண்ணுறான், ஆனா மேக் தெரியத்தான் செய்றா, இது மே நாக்குக்கு  ஏதோ ஒரு குழப்பத்த கொடுக்குது, மேக்கோ திடீர்னு தன்னோட ஒயிப்ப பார்த்து பயப்பிட்டு தண்ணீக்குள்ளையே விழுந்திடுறான். இவங்களும் அவன போய் தூக்குறாங்க, தன்னோட ஹஸ்பெண்ட்க்கு இவங்க உண்மைய சொல்லிட்டாங்க அப்படினு அவங்க மேல மே நாக் கோவப்பட்டுக்கிட்டு இருக்கும் போது இவங்களோ நாங்க சொல்லல அவரே கண்டுபிடிச்சிட்டாரா அப்படினு சொல்லி சமாதானப்படுத்த பார்க்கிறாங்க.

 

ஆனா கோவமான மே நாக்கும் இவங்கள தாக்க ட்ரை பண்ணும் போது, அது மேக்கோட தலையிலையே பட்டு மயங்கி கீழ விழுந்திடுறான், மே நாக்கோ இவங்க மேல செம்ம கோவமாகிடுறா, இவங்களோ நாங்க சொல்லல மேக் அவரே கண்டுபிடிச்சுட்டாரு அப்படினு சொல்லி பார்க்குறாங்க, ஆனா அவளோட கோவம் குறையாம இருக்கவும் இவங்களும் அவளோட கோவத்த குறைச்சு அவள சிரிக்க வைக்க காமெடியா என்ன என்னமோ ட்ரை பண்ண ஆரம்பிக்குறாங்க, அதேநேரத்துல பின்னால இருக்கிற பசங்ககிட்ட மேக்க மே நாக்கு தெரியாம நைஸா தூக்கிட்டு போக  சொல்றாங்க, அதனால அவங்களும் நைஸா தூக்கிக்கிட்டு போகும் போது, மே நாக் அவங்கள பார்த்திடுறா, அதனால நிக்கும் ஜேம்ஸும் எஸ்கேப் ஆகிட, ப்யூவு மட்டும் அவன் பாட்டுக்கு ஆடிக்கிட்டு இருக்கான்.

 

அதுக்கு அப்பறம் தான் ப்யூ எங்கட இங்க இருந்தவங்கள காணோம் அப்படினு பார்க்கிறான், அடுத்து அவனும் மே நாக் சமாளிச்சுக்கிட்டு இருக்கும் போது, திடீர்னு ஒரு பேஸ்கட்டுல உட்கார்ந்து மாட்டிக்கிறான், இங்க மேக்க தூங்கிட்டு போன அவங்களுக்கு எங்க போறதுனு தெரியாம நிக்கும் போது மயக்கத்துல இருந்த மேக்கும் மாஹாபட் அப்படிங்கிற புத்த கோவிலுக்கு போக சொல்றான், அதனால அவங்களும் வேகமா அவன தூக்கிட்டு போறாங்க. ப்யூவும் வேகமா தப்பிச்சு ஓடி வந்திடுறான், நிக்கும் ஜேம்ஸும் ப்யூவ பேஸ்கட்டுல இருந்து காப்பாத்திற, அதேநேரத்துல மேக்கையும் அந்த கோவிலுக்கு தூக்கிட்டு வந்திடுறாங்க மத்த பசங்க.

 

அந்த கோவிலுல நெறையா புத்த பிட்சூக்கள் ப்ரேயர் பண்ணிக்கிட்டு இருக்காங்க, முழிப்பி வந்த மேக்கும் வேகமா பெரிய புத்த பிட்சுக்கிட்ட,” என்னோட மனைவி இறந்து போய்ட்டா அப்படினு சொன்ன உடனே இந்த புத்த பிட்சுக்களும் பயந்து பெரிய புத்த பிட்சுவோட கால பிடிச்சுக்கிறாங்க, அவரும் அவங்கிட்ட,”அடேய் ஒரு நாளாவது புத்த பிட்சு மாதிரி நடந்துக்கங்கடா, துணிய அவுத்து விட்டுறாதீங்கடா அப்படினு சொல்லிட்டு சரி நீ பயப்பிடாத நான் உனக்கு ஹெல்ப் பண்ணுறேன் அப்படினு சொல்றான், அதேநேரத்துல நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் ஒளிஞ்ச்சுருக்கிற இடத்துக்கு மே நாக்கும் வந்திடுறா, அவ முகத்த பார்க்கும் போதே செம்ம கோவமா இருக்கா அப்படினு தெரியுது, இங்க நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் இங்க மே நாக்கால உள்ள வர முடியாது அப்படினு நினைச்சுக்கிட்டு செம பயத்துல ஒளிஞ்சுக்கிட்டு இருக்காங்க.

 

ஆனா அடுத்த செகண்டே ஜேம்ஸுக்கு பின்னால மே நாக் நிக்குறத பார்த்த உடனே நிக்கும் ஜேம்ஸும் பம்ம ஆரம்பிக்குறாங்க, அதேநேரத்துல ஜேம்ஸும் கண்ணுக்கும் மே நாக் தெரிய ஆரம்பிக்குறா,அதனால இங்கிருந்து தப்பிச்சிடலாம் அப்படினு அவங்களும் நினைக்கும் போது, மே நாக்கிட்ட மாட்டிக்கிறாங்க, மே நாக் வெளில நின்னுக்கிட்டே கைய நீளமாக்கி  அவங்க பிடிக்க ட்ரை பண்ணும் போது, இவங்களோ டக்குனு யோசிச்சு, அவளோட கைய ஒரு தூண்ல அவிழ்க்க முடியாத அளவுக்கு கட்டி போட்டுட்டு அங்கிருந்து தப்பிச்சிடுறாங்க, ஆனா இங்க ஊர்காரங்களோ மே நாக்கோட அட்டகாசத்த அடக்க ஒரு பேய் ஓட்டுறவன அவளோட கல்லறைக்கு கூட்டுட்டு வந்துக்கிட்டு இருக்காங்க.

 

அதேநேரத்துல அந்த கோவிலுக்கு வந்த நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் அந்த புத்த பிட்சுக்களோட சேர்ந்து மேக்கும் மத்த பசங்களும் ப்ரேயர் பண்ணிக்கிட்டு இருக்கிறத பார்த்துக்கிட்டு இருக்கும் போது, தாங்க வரதுக்கு முன்னாலையே மேக் அங்க வந்திட்டத அப்படிங்கிறத பார்த்து பயந்து அவங்களும் அந்த சர்க்கிளுக்குள்ள போய் ஒளிஞ்சுக்கிறாங்க, இதை பார்த்த அந்த புத்த பிட்சும் மே நாக் கிட்ட, ஏன் இப்படி எல்லோரையும் கஷ்டப்படுத்துற அப்படினு கேட்க அதுக்கு மே நாக்கும் நீ என்னோட வாழ்க்கையில மூக்க நுழைக்காம உன்னோட வேலைய மட்டும் பாரு அப்படினு கோவமா சொல்லிடுது.

 

இந்த புத்த புட்சு ஒன்னும் ரொம்ப தைரியமானவரு எல்லாம் கிடையாது, பயத்த கொஞ்சம் வெளிக்காட்ட பேசிக்கிட்டு இருக்காரு அவ்வளவு தான், ஆனா மே நாக்கோ உங்கள எல்லாம் கொல்ல போறேன் அப்படினு கத்த ஆரம்பிக்குறா, அப்ப அந்த பேய் ஓட்டுறவன் மே நாக்கோட கல்லறைக்கு வந்தத பார்த்த ஒருத்தன் அந்த விஷயத்த பத்தி இந்த புத்த பிட்சுக்கிட்ட வந்து சொல்ல, அதுக்குள்ள மேக் அந்த இடத்த விட்டு தன்னோட கல்லறைக்கு கிளம்புடுறா.

 

இங்க அந்த பேய் ஓட்டுறவனுக்கு மே நாக் ரொம்ப சக்தி வாய்ந்தவ அப்படிங்கிறது தெரிஞ்ச உடனே, ஒருத்தன்ட அவளுக்கு பிடிச்ச அவளோட குழந்தைய இதை கழுத்துல போட்டு தூக்கிட்டு வர சொல்றான், இங்க அந்த புத்த பிட்சுவும் மத்தவங்களும் வேகமா கல்லறைக்கு வந்துக்கிட்டு இருக்காங்க, மே நாக்கோட குழந்தை வெறும் குழந்தை தான் நாம ஈசியா தூக்கிட்டு போய்டலாம் அப்படினு நினைச்சு மந்திரவாதியோட ஆளும் வேகமா வரான், ஆனா அந்த குழந்தையோ குட்டி சாத்தான் ரேஞ்சுக்கு அவன போட்டு புரட்டி எடுக்குது, கடைசியா அந்த மந்திர கயிற அந்த குழந்தையோட கழுத்துல போட்டுட்டு தூக்கிட்டு வந்திடுறான். அதேநேரத்துல இங்க மேக்ல குணப்படுத்தின இந்த புத்த பிட்சுக்களும் ஏதோ ஒரு தப்பு நடக்குது அப்படினு புரிஞ்சுக்கிட்டு வேகமா அங்க வந்துக்கிட்டு இருக்காங்க.

 

இங்க மே நாக்கோட உடம்பு தோண்டி எடுத்து அவளோட குழந்தையையும் கொன்னு அவளோடையே புதைச்சிட்டா அவளோட ஆவி இந்த உலகத்த விட்டு போய்டும் அப்படினு அந்த பேய் ஓட்றவன் ஏதோ ஒரு மந்திரத்த சொல்ல ஆரம்பிக்குறான், அதேநேரத்துல அங்க வந்த மேக்கும் என்னோட குழந்தை அப்படினு வேகமா அங்க போய் தன்னோட குழந்தை காப்பாத்த ட்ரை பண்ணுறான், இதனால இவங்களுக்கும் ஊர்காரங்களும் ஒரு செம்மயான காமெடியான பைட்டே நடக்குது, இதையெல்லாம் ஓரமா உட்கார்ந்து பார்த்துக்கிட்டு இருக்கிற மத்தவங்க அந்த புத்த பிட்சு சொல்ற மாதிரி ப்ரேயர் பண்ண ஆரம்பிக்குறாங்க, ஆனா அந்த புத்த பிட்சுவோ இங்க நடக்குறத எல்லாம் பாத்திட்டு இனிமே இங்க இருந்த நம்ம உயிருக்கு உத்திரவாதம் இல்ல அப்படினு தப்பிச்சு ஓடிறாரு.

 

அதேநேரத்துல அந்த பேய் ஓட்டுறவனும் மே நாக்கோட குழந்தைய கொல்லலாம் அப்படினு ட்ரை பண்ணும் போது, திடீர்னு எந்திருச்ச மே நாக்கும் தன்னோட குழந்தைய எடுத்துக்கிட்டு அந்த மந்திரவாதிய சாகடிச்சிடுறா, அடுத்த கொஞ்ச நேரத்துல ஊர்காரங்க நெறைய பேர் திடீர்னு மே நாக்கோட வீட்டுக்கு வந்து அந்த வீட்ட எரிக்க ஆரம்பிக்குறாங்க, அப்ப உள்ள இருந்து குழந்தையோட வெளில வந்த மே நாக், “நான் உங்களுக்கு எந்த ஒரு கெடுதலும் பண்ணல நான் என்னோட குழந்தையோடையும் என்னோட ஹஸ்பெண்ட்டோடையும் வாழத்தான் ஆசைப்பட்டேன் நான் யாரையும் கொல்ல நினைக்கல, ஆனா நீங்க என்னைய தடுத்த நான் உங்க ஒருத்தனையும் சும்மா விடமாட்டேன் அப்படினு சொல்லவும் காத்து வேகமா அடிக்க ஆரம்பிக்குது, அதனால அவங்களும் அங்கிருந்து தப்பிச்சு ஓட ஆரம்பிக்குறாங்க.

 

இங்க மே நாக்கோட கல்லறைக்கு அந்த மூத்த புத்த பிட்சு வரும் போது, மேக்கும் மத்தவங்களும் மே நாக்கோட உடம்ப புதைச்சுக்கிட்டு இருக்காங்க, அதேநேரத்துல மேக்கும் ரொம்ப பீல் பண்ண ஆரம்பிக்கிறான், அடுத்து அங்க வந்த அந்த புத்த பிட்சுவும் அவங்கள எல்லாம் தள்ளி போக சொல்லிட்டு மே நாக்கோட ஆவிய அமைதிப்படுத்த அவள எழுப்பி பேச ஆரம்பிக்குறான், மே நாக்கும் தன்னோட கணவர பிரியுற சோகத்த தாங்க முடியாம,”நான் என்ன தப்பு பண்ணினேன் என்னோட ஹஸ்பெண்டோட வாழ தான ஆசைப்பட்டேன், நான் யாரையும் கொல்லனும் அப்படினு நினைக்கல அப்படினு சொல்லிட்டு அழ ஆரம்பிக்குறா, அந்த புத்த பிட்சுவும் மேக்க அங்க வர சொல்லி மே நாக்கிட்ட பேச வைக்கிறான், மேக்கும் மே நாக்க பிரிய முடியாம ரொம்ப அழ ஆரம்பிக்குறான், அதுக்கு அப்பறம் தான் மே நாக்கும் மேக்கிட்ட நானும் நம்ம குழந்தையும் இங்க இருக்க முடியாது, உங்க மேல நான் ரொம்ப பாசம் வச்சிட்டேன் அதனால தான் என்னால இங்கிருந்து போக முடியல, நாங்க போய்டு வரோம், அப்படினு சொல்லவும் மேக்கும் மே நாக்கும் கட்டி பிடிச்சு அழ ஆரம்பிக்குறான்.

 

இதை பார்த்த அந்த புத்த பிட்சுவும் மே நாக் மேக்கும் உன்னோட வர போறான், கவலை படாத அப்படினு சொல்லவும் என்ன சொல்றீங்க அப்படினு மேக்கும் கேட்க, அப்பதான் ஒரு உண்மைய சொல்றார அந்த புத்த பிட்சூ, மேக் போர்ல அடிப்பட்ட காயத்தால அப்பவே இறந்து போய்ருக்கான், அந்த பசங்களோட வீட்டுக்கு வந்தது மேக்கோட ஆவிதான், அவனோட உடம்பையும் அவங்க வெளில எடுக்கிறாங்க, மேக் ஏற்கனவே இறந்து போய்டாரு அப்படிங்கிறது தெரிஞ்ச உடனே அந்த பசங்க பயப்பிட்டாலும் அவனுக்காக பீல் பண்ணவும் ஆரம்பிக்குறாங்க, இந்த சம்பவத்துக்கு அப்பறம் மேக் மறு உலகத்துக்கு போய்டுறான், அடுத்து மேக்கும் மறு உலகத்துக்கு போய்டலாம் அப்படினு படுக்க ஆரம்பிக்கும் போது, நிக்கும் மே நாக்க கூப்பிட்டு, “மே நாக் உங்கள கஷ்டப்படுத்தி இருந்தா எங்கள மன்னிச்சிருங்க, உங்களோட அன்பை நாங்க புரிஞ்சுக்காம இருந்திட்டோம் அப்படினு சொல்லவும், அவளும் நீங்க பத்திரமா வீட்டுக்கு போங்க அப்படினு சொல்றா.

 

அடுத்து மறுபடியும் படுக்க போகும் போது, மே நாக் அப்படினு மறுபடியும் கூப்பிட்டு, எங்கள எல்லா சப்ஜெக்ட்லையும் பாஸ்ஸாக்கி விட்டுறீங்களா ப்ளீஸ் அப்படினு கேட்க, கண்டிப்பா பண்ணுறேன், ஆனா நீங்க கஷ்டப்பட்டு நல்லா படிக்கனும் அப்படினு சொல்ல, கஷ்டப்பட்டு படிக்கிறத அதுலாம் எப்படி பண்ணுறதுனே எங்களுக்கு தெரியாதே அப்படினு சொல்றாங்க, அடுத்து மே நாக்கும் படுத்து கண்ண மூடிறா, அப்பதான் நிக்கிட்ட மத்த பசங்க, “அடேய் நீ இவ்வளவு கேட்டியே இங்கிருந்து எப்படி போறது அப்படிங்கிறத கேட்க மறந்திட்டியே டா அப்படினு கேட்கவும், எப்படி போறது அப்படினு குழம்பி கடைசியா அந்த புத்த பிட்சுக்கிட்டியே,”எங்கள வீட்டுக்கு கூட்டு போறீங்களா அப்படினு கேட்கிறாங்க, அதுக்கு அவரும் நீங்க எப்படி வந்தீங்க அப்படினு மறந்திட்டீங்களா அப்படினு கேட்கிறாரு.

 

உடனே இவங்களுக்கு அந்த போட் ஞாபகம் வரவும்,”நாம வீட்டுக்கு போக போறோம் அப்படினு சந்தோசத்துல டான்ஸ் ஆட ஆரம்பிக்குறாங்க, எல்லோரும் கிளம்புன அப்பறமும் நிக் சந்தோசத்துல கண்ண மூடிக்கிட்டு காமெடியா ஆடிக்கிட்டே இருக்கான், அப்ப ப்யூவும் ஜேம்ஸும் வந்து அவன கூட்டுட்டு போறாங்க, கடைசியா எல்லோரும் அந்த இடத்துக்கு வந்த உடனே போட்டும் வந்திடுது, அவங்களும் சந்தோசமா போட்டுல ஏறி வீட்டுக்கு போய்டுறாங்க, விடிஞ்சு பார்த்தா அவங்க சிட்டியில இப்ப இருக்காங்க, படமும் அப்படியே முடியுது.

 

இந்த மே நாக்கோட கதை தாய்லாந்து மக்களால நம்ப படுற ஒரு கதை, போருக்கு போன தன்னோட கனவர பார்க்க முடியாம பிரசவத்துல இறந்து போன  மே நாக் பேயாகவே தன்னோட கனவருக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்துருக்கா, கடைசியா பேயாவே தன்னோட கணவரோட வாழ ஆரம்பிச்சுருக்கா, அப்பதான் கிராம மக்கள் மூல மேக்குக்கு இந்த விஷயம் தெரிய வருது, ஆனா அந்த ஊர் மக்கள் மே நாக்கோட நல்ல மனசு கொண்ட ஆவி தப்பா புரிஞ்ச்சுக்கிட்டு இருந்துருக்காங்க, கடைசியா அவள நல்லா புரிஞ்ச்சுக்கிட்டு அந்த கிராம மக்கள் அவங்களுக்கு கோயில் கட்டியே கும்பிட ஆரம்பிச்சுருக்காங்க, இன்னவும் அந்த கோவில் இந்தோனோசியாவுல இருக்கு, இன்னவும் கர்ப்பமா இருக்கிற பொண்ணுங்க, நல்ல பிரசவம் ஆகனும் அப்படினும் கல்யாணம் பண்ண போற பொண்ணுங்க நல்ல கணவன் வேணும் அப்படினு வேண்டிக்கிட்டு போறாங்க.

 

ஒகே ஹாய்ஸ், இந்த படத்தோட நெக்ஸ்ட் பார்ட் வேணும் அப்படினா கமெண்ட்ல சொல்லுங்க, நெக்ஸ்ட் பார்ட் இதை விட செம காமெடியா இருக்கும், நம்ம நிக்கும் அவனோட ப்ரண்ட்ஸும் நெக்ஸ்ட் பார்ட்டுல வேற லெவல்ல அட்டகாசம் பண்னிருப்பாங்க, அவங்கள ஒரு வித்தியாசமான இடத்துல மீட் பண்ண போறோம், நெக்ஸ்ட் பார்ட் செம்மையா இருக்க போகுது, அதேமாதிரி இந்த மே நாக்கோட கதை  பே மேக் அப்படினு 2013 -ல செம்மை ஹாரர் ரொமான்ஸ் காமெடியோட வேற ஒரு வெர்ஷனா ரிலிஸாகி இருக்கு, அதுவும் செம்மையா இருக்கும், உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுனா அதையும் அப்லோட் பண்ணுறோம், அப்லோட் பண்ணலாம் அப்படினு கமெண்ட்ல சொல்லுங்க.

 

உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சு இருந்துச்சுனா ஒரு லைக் தட்டி விட்டுட்டு மறந்திடாம உங்க ப்ரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க, நெக்ஸ்ட் வீடியோல மீட் பண்ணலாம் பாய் ஹாய்ஸ்…

No comments

Powered by Blogger.